ஞாயிறு, 4 ஜூன், 2023

கோரமண்டல் ரயில் விபத்து!
---------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-------------------------------------------
விபத்து நிகழாமல் பாதுகாக்க இந்திய ரயில்வே 
ஒரு தொழில்நுட்பகவச் த்தைப் பயன்படுத்துகிறது.
அதன் பெயர் கவச் (Kavach) ஆகும். கவச் என்றால் 
கவசம் என்று பொருள்.

இது முற்றிலும் இந்தியாவின் சுதேசித் தயாரிப்பு 
ஆகும்.இந்தியாவின் தொழில்நுட்ப நிபுணர்கள் 
இதைத் தயாரித்தனர். உலக அளவில் பயன்படும் 
இதைப்போன்ற தொழில்நுட்பங்களை விட இந்தியாவின் 
தயாரிப்பான கவச் விலை குறைவானது.

இத்தொழில்நுட்பத்திற்குத் தேவையான 
Telecom connectivityஐ 4G அலைக்கற்றை வழங்குகிறது.

இது ஓராண்டுக்கு முன்பு, மார்ச் 2022ல் சோதனை 
செய்து பார்க்கப்பட்டது. சோதனையில் இது 
வெற்றி அடைந்தது.

சோதனை ஓட்டத்தின்போது எதிரெதிராக 
வந்து கொண்டிருந்த இரண்டு ரயில் என்ஜின்களும் 
380 மீட்டர் தூரத்தில் ஹால்ட் ஆகி நினறன.       

நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி 
வைஷ்ணவ் இத்தொழில்நுட்பம் குறித்து விளக்கிப் 
பேசினார். 2022-23 நிதியாண்டில் 2000 கிமீ தூரத்திற்கு 
கவச் பாதுகாப்பை ஏற்படுத்துவது என்பது 
ரயில்வேயின் திட்டம். 2023-24ல் 5000 கிமீ தூரத்திற்கு 
கவச்  பாதுகாப்பை ஏற்படுத்துவது என்றும் 
ரயில்வே முடிவு செய்திருந்தது. மொத்தம் 68,000 கிமீ 
தூரத்திற்கு இத்தொழில்நுட்பத்தை ஏற்பாடு செய்ய 
வேண்டும். அதுதான் ரயில்வேயின்  இருப்புப் 
பாதையின் நீளம் ஆகும்.  

ஆனால் அதற்குள் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் 
விபத்துக்கு உள்ளாகி விட்டது. TOP PRIORITY
அடிப்படையில் இந்திய ரயில்வேயின் இருப்பப்பாதை 
முழுவதிலும் கவச் தொழில்நுட்பத்தை 
அறிமுகப் படுத்த வேண்டும்.

விபத்துக்கு உள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 
பாதையில் இத்தொழில்நுட்பம் ஏற்படுத்தப் 
பட்டிருந்தால், லூப் லைனில் நின்று கொண்டிருந்த 
சரக்கு ரயிலின் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் 
மோதி இருக்காது.
******************************************  



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக