திங்கள், 26 ஜூன், 2023

நெருக்கடி நிலை என்னும் பாசிசத்தை 
வெட்கமின்றி ஆதரித்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி!
-----------------------------------------------------------------------------------
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, 1975 ஜூன் 25ஆம் நாள் 
அன்றைய பிரதமர் இந்திரா நாடு முழுவதும் 
உள்நாட்டு நெருக்கடி நிலையைப் பிரகடனம் 
செய்தார்.

நெருக்கடி நிலைக்காலத்தில் மக்களுக்கு உயிர் 
வாழும் உரிமை உண்டா என்று அன்று உச்ச 
நீதிமன்றத்தில் அரசுத் தலைமை வழக்கறிஞரிடம் 
நீதியரசர் கேட்டார். உயிர் வாழும் உரிமையை 
நெருக்கடிநிலை பறித்து விட்டது மை லார்ட்
என்று பதில் கூறினார் அரசுத் தலைமை வழக்கறிஞர்.

இவ்வளவு கொடிய நெருக்கடி நிலையை 
அன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (CPI)
ஆதரித்தது. அத்தனை எதிர்க்கட்சிகளையும்
(ஸ்தாபன காங்கிரஸ். ஜனசங்கம், சோஷலிஸ்டுகள்,
மார்க்சியக் கம்யூனிஸ்ட், நக்சல்பாரிகள்)  
பாசிச இந்திரா ஒடுக்கியபோது, இந்திராவை 
ஆதரித்து ஆதாயம் அடைந்தனர் போலிக் 
கம்யூனிஸ்டுகளான CPI கட்சியினர்.

இதுதான் CPI எனப்படும் போலிக் கம்யூனிஸ்ட் 
கயவாளிகளின் யோக்கியதை!
**********************************************    

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக