ஞாயிறு, 4 ஜூன், 2023

ஐந்து மடங்கு லாபம் ஈட்டிய எல் ஐ சியும் 
சிந்தனைக் குஷ்டரோகிகளும்!
-------------------------------------------------------- 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------------
இந்தியாவின் பிரம்மாண்டமான பொதுத்துறை 
நிறுவனங்களில் ஒன்று எல் ஐ சி. அதானியின் 
பங்குகளில் முதலீடு செய்ததால் எல் ஐ சி 
நஷ்டம் அடைந்து விட்டதாக பொய்ச செய்திகள் 
பரப்பப் பட்டன.

தனியார் நிறுவனங்களின் கைக்கூலிகள்  
எச்சில் காசு வாங்கிக் கொண்டு எல் ஐ சிக்கு 
எதிராக இழிந்த பொய்களைப் பரப்பினார்கள்.

பொய்களின் சாயம் இப்போது வெளுத்துப் போனது.
மார்ச் 2023ல் முடிவடையும் நிதியாண்டின் 4ஆவது 
குவார்ட்டரில் எல் ஐ சி ரூ 13191 கோடி லாபம் 
ஈட்டி உள்ளது.

இது கடந்த ஆண்டு (2022 4th quarter) இதே குவார்ட்டரில் 
எல் ஐ சி ஈட்டிய ரூ 2409 கோடியை விட அதிகம்.
எவ்வளவு அதிகம்? ஐந்து மடங்கு அதிகம்!

அதானி குழுமப் பங்குகளில் முதலீடு செய்து 
மக்களின் பணத்தை எல் ஐ சி வீணடித்து விட்டது 
என்று இழிந்த பொய்களைக் சொன்ன தனியார் 
நிறுவனங்களின் கைக்கூலிகள் இப்போது எல் ஐ சி 
லாபம் ஈட்டிய செய்தி  நாடெங்கும் பரவி 
வருகிறது; இப்போது இவர்கள் தங்கள் தவறை 
உணர்ந்து மன்னிப்புக் கேட்பார்களா?

தனியார் நிறுவனங்களிடம் எச்சில் காசு வாங்கிக்  
கொண்டு லட்சக் கணக்கான தொழிலாளர்களால் 
இயக்கப்படும் எல் ஐ சி என்னும் மாபெரும் 
பொதுத்துறை நிறுவனத்தை இழிவு படுத்திய   

போலி முற்போக்குகளே,
போலி இடதுசாரிகளே ,
போலி நக்சல்பாரிகளே ,
போலி மாவோயிஸ்டுகளே 
 
இனியும் திருந்தாமல் பொதுத்துறை நிறுவனங்களான 
எல் ஐ சி குறித்தும் BSNL குறித்தும் அவதூறுகளையும் 
பொய்களையும் பரப்புவீர்களேயானால் 
உங்களின் முதுகுத் தொலியை இந்தியத் தொழிலாளி 
வர்க்கம் உரிக்கும். எச்சரிக்கை!
************************************************** 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக