நிலையாமை, உறுதியினமை இரண்டும்
வெவ்வேறு பொருள் தருபவை. ஆங்கிலத்தில்
நிலையாமை = INSTABILITY
உறுதியின்மை = UNCERTAINTY.
யாக்கை நிலையாமை, இளமை நிலையாமை,
செல்வம் நிலையாமை ஆகியவை பற்றி தமிழ்
நீதிநூல்கள் பேசுகின்றன. நேற்று இருந்த ஒன்று
இன்று இல்லாமல் போவது நிலையாமை.
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு
என்ற குரலில் நிலையாமை உணர்த்தப்
படுகிறது. நிலையாமையை அழிவு
உள்ளடங்கி இருக்கிறது. இதுதான் நிலையாமை.
உறுதியின்மை என்பது வேறு. ஒன்றைப் பற்றி
உறுதியாகக் கூற முடியாத நிலையே
உறுதியின்மை ஆகும். புதிதாக ஒருவரிடம்
பழக்க நேருகிறது. அவர் நல்லவரா தீயவரா
என்று நம்மால் உணர இயலவில்லை. இது
உறுதியின்மை (UNCERTAINTY) ஆகும்.
ஓஷோவும் ஆதி சங்கரரும் ஜேகேவும்
கருத்துமுதல்வாதிகள். அவர்களை
"சில கம்யூனிஸ்டுகள்" பொருள்முதல்வாதிகளாகக்
கருதுகிறார்கள் என்றால் அவர்கள்
அறிவிலிகள் என்று பொருள்படும்.
அருள்கூர்ந்து மதத்தையும் அறிவியலையும்
முடிச்சுப் போட வேண்டாம்.
மதம்
பிற்போக்கானது. அறிவியல் முற்போக்கானது.
அறிவியல் சரியானது;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக