quantum3 காரண காரியப் பொருத்தம்
நிகழ்வுகளும் முக்கியம்.
1) மழை பெய்கிறது. இது ஒரு நிகழ்வு.
2) விளக்கு வெளிச்சத்தைப் பாய்ச்சியதுமே
பொருளின் நிழல் விழுகிறது. நிழல் விழுவது
ஒரு optical phenomenon. இது ஒரு நிகழ்வு.
3) சூரிய சந்திர கிரகணங்கள் ஏற்படுகின்றன.
இவை நிகழ்வுகள். .
4) ஒரு இடத்தில் ஒரு காந்தத்தை வைக்கிறோம்.
காந்தத்தைச் சுற்றிலும் உள்ள இடத்தில்
காந்தத்தின் இருப்பு உணரப் படுகிறது.
இவ்வாறு காந்தத்தின் இருப்பு உணரப்படும்
இடம் காந்தப் புலம் (magnetic field) ஆகும்.
இது ஒரு நிகழ்வு ஆகும்.
5) அது போல மின்சார chargeஐ ஒரு இடத்தில்
வைத்தால், அந்த chargeஐச் சுற்றி ஒரு
மின்புலம் உண்டாகிறது. இப்புலம் ஒரு
நிகழ்வாகும்.
6) இது போல ஈர்ப்புப் புலமும் (gravitational field)
ஒரு நிகழ்வே.
மேற்கூறிய அனைத்து நிகழ்வுகளும் பொருள்
என்ற வகைமையில் வரும். These are all matter.
இந்நிகழ்வுகள் கருத்தாகாது.
1526ல் நடைபெற்ற முதலாவது பானிபட் போரும்
1757ல் நடைபெற்ற பிளாசிப் போரும், முதல்
இரண்டாம் உலகப் போர்களும் கார்கில் போரும்
நிகழ்வுகளே.
மாங்கொட்டையை வீசிய இடத்தில் மாஞ்செடி
முளைப்பதும், உயிரினங்கள் உயிரோடு
இருப்பதும் நிகழ்வுகளே.இந்நிகழ்வுகள்
அனைத்தும் பொருளே; கருத்து அல்ல.
-------------------------------------------------------------
பின்குறிப்பு:
இந்தப் பிரபஞ்சத்தில் இதுவரை கணக்கற்ற
அறிவியல் பரிசோதனைகள் நிகழ்ந்துள்ளன.
அவற்றுள் மிகவும் பிரசித்தி பெற்றது
Double slit experiment என்னும் இரட்டைத் துளைப்
பரிசோதனை. இது ஒரு நிகழ்வு. எனவே இது
பொருள் ஆகும்.
இயற்பியலில் சிந்தனைப் பரிசோதனைகளும்
(thought experiments) உண்டு. இதுவரையிலான
சிந்தனைப் பரிசோதனைகளில் புகழ் பெற்றது
குவான்டம் தியரியில் வரும் ஷ்ராடிங்கரின்
பூனைப் பரிசோதனை ஆகும்.
(Schrodinger's cat experiment).
ஆக இரண்டு மாபெரும் பரிசோதனைகளைப்
பார்த்தோம். ஒன்று: பௌதிக ரீதியாக
நடைபெறும் physical experiment. இன்னொன்று
கற்பனையில் நடைபெறும் சிந்தனைப்
பரிசோதனை (thought experiment). இப்போது
நமது கேள்வி. இவ்விரண்டு பரிசோதனைகளில்
எது பொருள்? எது கருத்து? அல்லது இரண்டுமே
பொருள்தானா?
(சிந்தனைப் பரிசோதனை என்பது இயற்பியலின்
எந்த விதியையும் மீறாமல் நடக்கும் பரிசோதனை
ஆகும். விதி மீறல் அனுமதிக்கப் படாது).
பின்குறிப்பு-2:
குவான்டம் தியரியை நன்கறிந்தவர்கள் மட்டும்
கேள்விக்கு விடையளிக்கவும்.
பின்குறிப்பு-3:
இந்தக் குறுங்கட்டுரை பதிப்புரிமைக்கு
உட்பட்டது.
**********************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக