செந்தில் பாலாஜி ஜிந்தாபாத்!
காரல் மார்க்ஸ் முர்தாபாத்!
பாலன் இல்லத்தில் முத்தரசன் பரவசம்!
--------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------
பாலன் இல்லத்தில் ஒரே கொண்டாட்டம்! ஆனந்த
லஹரிதான், போங்கள்!
2024 தேர்தல் நெருங்குகிறது. இந்த முறை சபரீசனிடம்
எவ்வளவு சி கேட்க வேண்டும் என்பது குறித்து
ஆளாளுக்கு அபிப்பிராயம் சொல்லிக் கொண்டு
இருந்தார்கள்.
அங்கு நடுநாயகமாக ஒரு பெரிய நாற்காலிலயில்
உட்கார்ந்து இருந்த டி ராஜா திடீரென பெருங்குரல்
எடுத்துக் கத்தினார்: "முத்தரசன், கோட்டை
விட்டுராதீங்க, 50 சிக்கு குறையக் கூடாது
என்றார்.
தொடர்ந்து 50சி, 50சி என்று உற்சாகத்துடன்
சொல்லிக் கொண்டே இருந்தார் டி ராஜா.
ஒவ்வொரு முறையும் அவர் 50சி என்று சொல்லச்
சொல்ல, ஜிந்தாபாத், ஜிந்தாபாத் என்று வழிமொழிந்து
கொண்டே இருந்தார் மு வீரபாண்டியன்.
ஒரு கட்டத்தில் மற்ற அனைவரின் பேச்சும் நின்று விட,
50சி என்ற ராஜாவின் சத்தமும் அதைத் தொடர்ந்து
ஜிந்தாபாத் என்ற வீரபாண்டியனின் சத்தமும்
மட்டுமே கேட்டன.
50சி
ஜிந்தாபாத்!
50சி
ஜிந்தாபாத்!
மொத்த பாலன் இல்லமும் சந்தோஷத்தில் மூழ்கிக்
கிடந்தது. அப்போது அந்த அறையில் ஒதுக்குப்
புறமாக உட்கார்ந்திருந்த ஆரென்கே ஒரு
சந்தோஷத் துள்ளலோடு தனது வலது கையை
விரித்து ஐந்து விரல்களை மட்டும் காட்டினார்.
இந்த சமிக்ஞை 50சிக்கு ஆரென்கே காட்டும்
பச்சைக்கொடி என்று புரிந்து கொண்ட
காம்ரேடுகளில் சிலர் விசிலடிக்கத் தொடங்கினர்.
இந்த நேரத்தில் காவேரி மருத்துவமனைக்கு
தொலைபேசியில் பேசிய முத்தரசன், செந்தில்
பாலாஜியின் உடல்நிலை குறித்து மிகவும்
கவலையுடன் அங்குள்ள ஒரு நர்சிடம் விசாரித்தார்.
ஆனால் தான் செந்தில் பாலாஜிக்கு நேரடியாகச்
சிகிச்சை அளிக்கும் லேடி டாக்டரிடம் பேசியதாகக்
கூறினார்.
இப்போது மீண்டும் ஒரு போன் கால்! எடுத்துப்
பேசினார் முத்தரசன். மறுமுனையில் கனகராஜ்!
ஆம், பங்குத்தந்தை கனகராஜ் என்று அழைக்கப்படும்
மார்க்சிஸ்ட் கட்சியின் கனகராஜ்தான் அவர்.
கடந்த முறை சபரீசனிடம் வாங்கிய பல கோடிப்
பணத்தை மேல்கமிட்டி ஆட்களே அமுக்கிக்
கொண்டபோது, அதைக் கண்டித்து மாவட்டக்
கமிட்டி வரை பங்கு கொடுக்க வேண்டும் என்று
போராடியதால் பங்குத் தந்தை கனகராஜ்.என்று
பெயர் பெற்றவர் அவர். 50சி பத்தாது என்றும்
குறைந்தது 60சியாவது கேட்க வேண்டும் என்றும்
முத்தரசனிடம் வலியுறுத்தினார் அவர்.
அவர் பேசி முடித்ததுமே 60சி கேட்காமல்
நாம் குறைவாகக் கேட்டு விட்டோமோ என்ற
குற்ற உணர்வுக்கு இலக்கானார் முத்தரசன்.
இந்த நேரம் கட்சி அலுவலகச் செயலாளர்
(party office secretary) அந்த ஹாலுக்குள் வேகமாக
நுழைந்தார். அவர் கையில் காகிதத்தால்
சுற்றப்பட்ட பிரேம் போடப்பட்ட ஒரு படம்
இருந்தது. பார்சல் காகிதத்தைப் பிரித்து
உள்ளே உள்ள படத்தை பெருமிதத்தோடு
எல்லோருக்கும் காட்டினார் அலுவலகச்
செயலாளர். அது செந்தில் பாலாஜியின் படம்.
உடனே கூடியிருந்த அத்தனை பேரும்
கை தட்டினர். செந்தில் பாலாஜிக்கு
முட்டுக் கொடுப்பதால் அல்லவா இன்று தங்களால்
சபரீசனிடம் 50சி கேட்க முடிகிறது என்று
உணர்ந்த அனைவரும் நன்றி உணர்ச்சி மேலிட
நின்றனர்.
தரையில் இருந்த ஸ்டூலை எடுத்துப்போட்டு,
அதன்மீது ஏறி நின்ற அலுவலகச் செயலாளர்
செந்தில் பாலாஜியின் திருவுருவப் படத்தை
சுவரில் மாட்ட இடம் தேடினார். இடமில்லை
என்பதால், அங்கு சுவரில் மாட்டியிருந்த
ஜெர்மன் தேசத்து ஒரு தாடிக்காரக் கிழவரின்
படத்தைக் கழற்றி எரிச்சலுடன் தரையில்
வீசி எறிந்து விட்டு, அந்த இடத்தில் செந்தில்
பாலாஜியின் படத்தை மாட்டினார். மொத்த
பாலன் இல்லமும் கைதட்டி ஆர்ப்பரித்தது.
முக்கியமான தருணங்களில் பொருத்தமாக கோஷம்
போடுவதை குலத்தொழிலாகக் கொண்ட
கோஷப்புலி BSNL கோபாலனின் கோஷங்களால்
பாலன் இல்லம கனத்துக் கிடந்தது!
ஜிந்தாபாத் ஜிந்தாபாத்!
செந்தில் பாலாஜி ஜிந்தாபாத்!
ஜிந்தாபாத் ஜிந்தாபாத்!
சபரீசன் ஜிந்தாபாத்!
முர்தாபாத் முர்தாபாத்!
காரல் மார்க்ஸ் முர்தாபாத்!
*****************************************
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்படும் ஆரென்கே
என்பவர் யார்? ஆர் என் கே (RNK) என்பது
மூத்த தலைவர் ஆர் நல்லகண்ணு அவர்களைக்
குறிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக