வியாழன், 13 ஜூலை, 2023

 கணக்கின் விடையும் விளக்கமும்:

---------------------------------------------
விடை: அந்த எண்கள்: 5, 8, 12.

விளக்கம்:
------------------
இந்தக் கணக்கு எப்படி IIT கேள்வித்தாளில்
இடம்பெற்றது என்று வாசகர்கள்
வியப்படையலாம்.

ஆனால், அன்று 1983இல் AP,GP பாடங்கள்
11ஆம் வகுப்பில்தான் இருந்தன.
இன்று அவை 10ஆம் வகுப்பிலேயே
இடம் பெற்றுள்ளன.

AP, GP யின் பண்புகள் இந்தக்
கணக்கின் விடைகாணப்
பயன்படுகின்றன. இதோ பாருங்கள்:

3,4,5,..... என்பது ஓர் AP. இங்கு நடுவில்
உள்ள 4 = (5+3)/2 என்பது ஒரு AP யின்
பண்பு. எனவே இதை வைத்து ஒரு
சமன்பாட்டை உருவாக்குகிறோம்.

அடுத்து, 10, 100, 1000,.....என்ற GPயைக்
கருதுக. இங்கு நடுவில் உள்ள 100இன்
வர்க்கம் = 100^2 = 10 x 1000 என்பதைக்
கருதுக. இதைக் கொண்டு
ஒரு சமன்பாட்டை அமைக்கலாம்.

தற்போது 3 சமன்பாடுகள் உள்ளன.
1) a+b+c = 25
2) 2a = b +2
3) c ^2= 18 b

இவற்றைத் தீர்த்தால், a, b, c = முறையே 5, 8, 12 என்ற
விடை கிடைக்கிறது.
-----------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக