ஹோமியோபதி குறித்த உரையாடல்!
--------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------
மார்க்சிய மூல ஆசான்கள் ஐவரும் ஹோமியோபதி
என்னும் போலி மருத்துவத்தை ஏற்கவில்லை.
ஹோமியோபதி மருத்துவத்தைத் தோற்றுவித்த
சாமுவேல் ஹானிமன் ஒரு ஜெர்மானியர் என்ற
போதிலும், மார்க்சின் காலத்தில்தான் அவரும்
வாழ்ந்தார் என்ற போதிலும் மார்க்ஸ் அவரை
அங்கீகரிக்கவில்லை.
மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ
ஆகிய மூல ஆசான்கள் ஐவர் மட்டுமல்ல,
ஸ்டாலின் காலத்தில் சோவியத் ஒன்றியத்தில்
போல்ஷ்விக் தலைவராக இருந்த டிராட்ஸ்கியும்
ஹோமியோபதியை ஆதரிக்கவில்லை.
ஒட்டுமொத்த மார்க்சியமும் ஹோமியோபதி
என்னும் போலி அறிவியலை முற்றிலுமாக
நிராகரிக்கிறது.
மார்க்சிஸ்டுகளில் சிலர் ஹோமியோபதியை
ஆதரிக்கலாம். அவர்கள் திருந்த வேண்டும்.
அவர்கள் ஹோமியோபதியைக் கைவிட
வேண்டும். முடியாவிட்டால் மார்க்சியத்தைக்
கைவிட வேண்டும். ஹோமியோபதி, மார்க்சியம்
இரண்டையும் போட்டுக் கலக்கக் கூடாது.
மேலே சொன்ன அனைத்தும் மார்க்சிஸ்டுகளுக்கு
மட்டுமானது. மார்க்சிஸ்டு அல்லாதவர்களுக்கு
நான் எதையும் கூற விரும்பவில்லை.
ஹோமியோபதி ஒரு சமூகத் தீங்கு என்ற போதிலும்,
அது போலி அறிவியல்தான் என்ற போதிலும்
ஹோமியோபதி குறித்த ஓர் ஆரோக்கியமான
உரையாடலை நாங்கள் நிகழ்த்த விரும்புகிறோம்.
நியூட்டன் அறிவியல் மன்றம் அந்த உரையாடல்
ஏற்பாட்டுக்குப் பொறுப்பு ஏற்கும்.
எங்கள் தரப்பில் சிலர் வருவோம். MBBS
பட்டம் பெற்று மருத்துவக் கவுன்சிலில் பதிவு
செய்து கொண்ட மருத்துவர்கள் வருவோம்.
ஹோமியோபதி தரப்பில், அரசால் அங்கீகரிக்கப்பட்ட
ஹோமியோபதி கல்லூரியில் ஐந்தாண்டு படித்து
BHMS பட்டம் பெற்ற, ஹோமியோபதி கவுன்சிலில்
பதிவு செய்து கொண்ட மருத்துவர்கள் சிலரை
அனுப்பி உரையாடலில் பங்கு கொள்ளச் செய்யுங்கள்.
நியூட்டன் அறிவியல் மன்றம் இதற்கான செலவை
பொறுப்பை ஏற்றுக் கொள்ளும். நாங்கள் தயார்!
ஹோமியோபதி போலிகளே, உங்கள் பதில் என்ன?
-----------------------------------------------------------------------
பின்குறிப்பு:
எங்கள் அணியின் உறுப்பினர்களின் கல்வித்
தகுதிச் சான்றிதழ்களை உரையாடலுக்கு முன்பே
சமர்ப்பிக்கிறோம். அதே போல் BHMS டாக்டர்களும்
தங்களின் பதிவுச் சான்றிதழை சமர்ப்பிக்கக்
கோருகிறோம்.
*******************************************
சான்றிதழ்களை
அழைத்து வரலாம். உரையாடுவோம்.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக