வெள்ளி, 14 ஜூலை, 2023


வள்ளலாரின் கற்பனாவாதம்!
--------------------------------------------
அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை என்னும் 
முழக்கத்தால் அறியப்படும் வள்ளலார் இந்து மதத்தைச் 
சேர்ந்த ஓர் ஆன்மிகவாதி. ஒரு சிலர் சித்தரிப்பது 
போல் வள்ளலார் கடவுள் மறுப்பாளரோ அல்லது 
சனாதன எதிர்ப்பாளரோ அல்லர்.

ஜீவகாருண்யம் வள்ளலார் வலியுறுத்திய ஒழுக்கம்.
புலால் மறுத்தல், பெண்ணாசையை மறத்தல் ஆகிய 
நெறிகளை மக்களுக்கு அவர் போதித்தார்.

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற 
உத்தமர்தம் உறவு வேண்டும் 
என்று தொடரும் பாடலில் 
மருவு பெண்ணாசையை மறக்க வேண்டும் 
என்று ஆண்களுக்கு உபதேசித்தார் வள்ளலார்.  

சமுகத்தில் அமைதி நிலவ வேண்டும் என்று 
வள்ளலாருக்கு ஒரு விருப்பம் இருந்தது. தமது 
விருப்பத்தை நிறைவேற்ற அவர் திட்டம் 
எதையும் வகுக்கவில்லை. உருப்படியான 
நடைமுறை சாத்தியமான வழிவகை எதையும் 
கூறவில்லை. 

மாறாக பெண்ணாசையை மறத்தல், புலால் மறுத்தல், 
ஜீவகாருண்யம் ஆகியவற்றையே கூறினார். அவர் 
விரும்பிய சமூக அமைதி அவருடைய wishful thinking
மட்டுமே. இவ்வாறு கற்பனாவாதத்தில் மூழ்கிக் 
கிடந்தார் வள்ளலார்.

வள்ளலாரோ அவரின் போதனைகளோ சமூக மாற்றத்துக்குப் 
பயன்படும் என்று கருதுவது பேதைமையுள் எல்லாம் 
பேதைமை. வள்ளலார் நல்லவர். ஆனால் கற்பனாவாதி.

காரல் மார்க்சையம் அவரின் தத்துவத்தையும் 
கைகழுவி விட்ட கபோதிகள் வள்ளலாரிடம் போய் 
அடைக்கலம் தேட முயல்கிறார்கள். அந்தோ பரிதாபம்!
-------------------------------------------------------------------------------    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக