திங்கள், 10 ஜூலை, 2023

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 
தலித் இளைஞர்கள் மீது மீண்டும் வன்கொடுமை!
மலம் தின்ன வைத்த கொடுமை!
-------------------------------------------------------------------------
இரண்டு தலித் இளைஞர்கள் ஒரு முஸ்லீம் பெண்ணிடம் 
பேசினார்கள்! அவ்வளவுதான்! எங்கள் மதப் பெண்ணிடம் 
நீங்கள் எப்படிப் பேசலாம் என்று கேட்டு ஒரே 
குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் அவ்விரு தலித் 
இளைஞர்களையும் மலம் தின்ன வைத்துள்ளனர்.

மபியில் சிவபுரி மாவட்டத்தில் வர்க்கடி கிராமத்தில்
ஜூன் 30, 2023ல் இக்கொடுமை நிகழ்ந்துள்ளது. குற்றம் 
புரிந்த பின்வரும் 7 பேரை மபி அரசு கைது செய்துள்ளது.

1) அஜ்மத் கான் 
2) வகீல் கான் 
3) ஆரிப் கான் 
4) ஷஹீத் கான் 
5) இஸ்லாம் கான் 
6) ரஹிஷா பானு 
7) சைனா பானு 

இவர்கள் மீது SC/ST வன்கொடுமைச் சட்டம் உட்பட 
பல பிரிவுகளில் வழக்கு தொடரப்  பட்டுள்ளது.
மேலும்  NSA சட்டமும் பாய்ந்துள்ளது. அத்தோடு 
விடவில்லை மபி முதல்வர் சிவராஜ்சிங் சவுஹான்.
அவர்களின் வீட்டையும் இடித்து விட்டார் சவுஹான்.

திருமாவளவன் இதைக் கண்டிப்பாரா?
நெவர் நெவர் நெவர்!
********************************************

கிழமை என்றால் உரிமை என்று பொருள்.
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் 
நட்பாம் கிழமை தரும் .
என்கிறது திருக்குறள். இங்கு கிழமை என்பது 
உரிமை என்று பொருள்படும்.
.

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக