மார்ஷல் திட்டம் என்றால் என்ன?
--------------------------------------------------
தோழர் நிர்மல்குமார் அவர்களுக்கு,
1) மார்ஷல் திட்டம் என்பது வேளாண்மைத் திட்டமோ
பசுமைப் புரட்சித் திட்டமோ அல்ல.
2) 2ஆம் உலகப்போர் முடிந்ததும், போரினால்
ஏற்பட்ட சேதாரங்களில் இருந்து ஐரோப்பிய
நாடுகளை மீட்கும் திட்டமே இது. தகர்க்கப்பட்ட
பாலங்களை மீண்டும் கட்டுவது, குண்டுவீச்சில்
தரைமட்டமான கட்டிடங்களை மீண்டும் கட்டுவது,
சாலைகளைச் சீரமைப்பது இன்ன பிற உடனடிப்
பணிகளை மேற்கொண்ட ஒரு முதலுதவித் திட்டமே இது.
3) இத்திட்டத்தின் பெயர் ERP ஆகும். அதாவது
European Recovery Programme ஆகும். இதை முன்மொழிந்தவர்
அமெரிக்க அதிபர் ட்ரூமன் (Truman). அமெரிக்காவின்
Secretary of State ஜார்ஜ் மார்ஷல் என்பவரின்
பெயரால் இது மார்ஷல் திட்டம் என்று அழைக்கப்
படுகிறது.
4) இதில் பயனடைந்தவை மேற்கு ஐரோப்பாவைச்
சேர்ந்த 16 நாடுகள். இதற்காக ட்ரூமன் நிர்வாகம்
ஒதுக்கிய தொகை 13.3 பில்லியன் அமெரிக்க
டாலர்கள்.(1 பில்லியன் = 100 கோடி).
5) இது ஒரு குறுகிய காலத் திட்டம். இது செயல்பட்ட
காலம் 1948-51.
6) பசுமைப் புரட்சிக்கும் மார்ஷல் திட்டத்திற்கும்
அணுவளவு சம்பந்தமும் இல்லை. பசுமைப் புரட்சி
என்ற சொல்லாடலே மார்ஷல் திட்டம் செயல்பட்ட
காலத்தில் உலக நாடுகளின் அஜண்டாவில்
கிடையாது.போரின் சிதைவுகளில் இருந்து
ஐரோப்பிய நாடுகளை மீட்பது ஒன்றுதான்
மார்ஷல் திட்டத்தின் நோக்கமாக இருந்தது.
7) 1970களில் வேலைக்காக நான் போட்டித்
தேர்வுகளை எழுதிக் கொண்டிருந்தபோது,
மார்ஷல் திட்டம் பற்றிக் கேள்வி கேட்கப்
பட்டது. Careers Digest பத்திரிகையில் இருந்து
படித்ததை நான் எழுதினேன். அதை மீண்டும்
சரிபார்த்த பின்னரே இதை எழுதுகிறேன்.
8) தோழர் நிர்மல் குமார் அவர்களே,
நீங்கள் படித்தவர். ஆங்கிலம் தெரிந்தவர்.
எனவே நீங்களே மார்ஷல் திட்டம் பற்றி
அறிந்து கொள்ள முடியும். உண்மையைப்
புரிந்து கொள்ள முடியும்.
-----------------------------------------------------------
மார்ஷல் திட்டத்தை உருவாக்கியவர் பிரிட்டனைச்
சேர்ந்தவர் என்பது உண்மை அல்ல. அமெரிக்க ராணுவ
அதிகாரியும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமனிடம்
US Secretary of Stateகப் பணிபுரிந்தவருமான
General George C Marshal என்பவரின் பெயரால்
இத்திட்டம் அறியப்படுகிறது. இத் திட்டத்தின்
அதிகாரபூர்வமான பெயர் ERP (European Recovery
Program) என்பதாகும். முதல் உலகப்போருக்கும்
மார்ஷல் திட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை.
ஏ எம் கே அவர்கள் கூறாததை அவர் கூறியதாகப்
பொய் கூறுவது நேர்மையற்ற செயல்.
அறிவு நாணயம் இன்றி அவதூறுகளை
அரங்கேற்றுவது பலவீனத்தையே வெளிப்படுத்தும்.
இந்நிலையில் விவாதமோ உரையாடலோ
நிகழ்த்த இயலாது.
மார்ஷல் திட்டத்தில் பயனடைந்தவை மேற்கு
ஐரோப்பிய நாடுகள் மட்டுமே. அதுவும்
16 நாடுகள் மட்டுமே.
கிழக்கு ஐரோப்பிய நாடுகள் தோழர் ஸ்டாலின்
தலைமையில் சோவியத் ஒன்றியத்தைச் சார்ந்து
இயங்கியவை. அங்கு எந்த மார்ஷல் திட்டமும்
கிடையாது. தோழர் ஸ்டாலின் அதை அனுமதிக்கவும்
இல்லை.
தோழர் நிர்மல்குமார் கவனத்திற்கு,
மாலட்டோவ் திட்டம்!
--------------------------------
மார்ஷல் திட்டத்திற்கு மாற்றாக தோழர் ஸ்டாலின்
மாலட்டோவ் திட்டத்தை (Molotov Plan) உருவாக்கினார்.
மாலட்டோவ் சோவியத் ஒன்றியத்தின் வெளியுறவுத்
துறை அமைச்சர். கிழக்கு ஐரோப்பிய
நாடுகளுக்கு பொருளாதார உதவியை இத்திட்டம்
வழங்கியது. இதன் மூலம் மார்ஷல் திட்டத்தை
வெற்றிகரமாக முறியடித்தார் தோழர் ஸ்டாலின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக