வியாழன், 19 அக்டோபர், 2023

ஓரினச் சேர்க்கைத் திருமணங்கள்!
உச்சநீதிமன்றம் தலையிட மறுப்பு!
ஓரினச் சேர்க்கை சரியா தப்பா?
---------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------
ஓரினச் சேர்க்கை சரியா தப்பா?
அது இயல்பானதா? அல்லது இயற்கைக்கு முரணானதா?

இந்தக் கேள்விக்கான சரியான பதில் என்ன?
யாரால் இதற்குப் பதில் சொல்ல இயலும்?

அறிவியலால் மட்டுமே இக்கேள்விக்குப் பதிலளிக்க
இயலும். அதற்கான அருகதை அறிவியலுக்கு 
மட்டுமே உண்டு.

அறிவியல் என்ன விடையளிக்கிறது என்று பார்க்கும் 
முன்னர், இப்பொருள்குறித்த சில அடிப்படை அறிவியல் 
விவரங்களைத் தெரிந்து கொள்வது அவசியம். குறிப்பாக 
ஒருவரின் sexual orientation பற்றித் தெரிந்து கொள்ள 
வேண்டும்.     

Sexual orientation என்றால் என்ன? ஒருவரின் பாலியல் 
நாட்டம் எப்படி இருக்கிறது என்பதே பாலியல் ஈர்ப்புதிசை 
(sexual orientation) எனப்படும். இது இரண்டு வகையாக 
இருக்கிறது.
1) தன் பாலின ஈர்ப்பு (homo sexual) 
2) எதிர்பாலின ஈர்ப்பு (hetero sexual) 

ஒருவர் தன்பாலின ஈர்ப்பு உடையவராகவோ 
அல்லது எதிர் பாலின ஈர்ப்பு உடையவராகவோ 
இருக்கலாம் (either homo sexual or hetero sexual). எதிர்பாலின 
ஈர்ப்பு உடையவர்கள்தான் இந்த உலகில் 
99.9 சதவீதம் பேர். தன்பாலின ஈர்ப்பு உடையோர் 
உலகில் மிகக்குறைவே!


பாலின ஈர்ப்புதிசை (sexual orientation) குறித்து ஒரு 
முக்கியமான கேள்வி இப்போது எழுகிறது.
ஒருவரின் sexual orientation அவரின் உடலின் தன்மை 
காரணமாக ஏற்படுவதா? அல்லது அவரின் 
மன விருப்பத்தின்படி ஏற்படுவதா?

கேள்வியை நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஒருவரின் sexual orientation அவரின் தேர்வுக்கு அப்பாற்பட்ட 
உடலியல் தன்மை காரணமாக ஏற்பட்டு 
அவரின் தேர்வுக்கு அப்பாற்பட்டு இருக்கிறதா? 
அல்லது அவரின் தேர்வுக்கு உட்பட்டு அவரின் 
விருப்பத்தின்படி தேர்ந்தெடுத்துக் கொள்ளக் 
கூடியதா? சுருங்கக் கூறின் Is the sexual orientation 
of a person biological or psychological? If biological it can not 
be reversed but if psychological it can be changed at one's will.

ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். பருவ வயதடைந்த 
ஒரு ஆணுக்கு பெண்கள் மீது பாலியல் ஈர்ப்பு எதுவும் 
ஏற்படாமல் சக ஆண்கள் மீது பாலியல் ஈர்ப்பு
ஏற்படுகிறது என்றால், அவர் ஹோமோசெக்சுவல் 
ஆவார்.

இவரின் தன்பாலின ஈர்ப்பை மாற்ற முடியுமா?
எடுத்துச் சொல்லியோ, அறிவுரை வழங்கியோ, 
கண்டித்தோ, தண்டித்தோ இவரின் ஹோமோசெக்சுவல் 
தன்மையை மாற்ற முடியுமா? அதாவது இவரின் 
sexual orientationஐ மாற்ற முடியுமா?

மாற்ற முடியும் என்றுதான் மிக அண்மைக்காலம் 
வரை மேற்கத்திய சமூகம் கருதியது. ஏனெனில் 
ஒருவரின் sexual orientation அவரின் தேர்வைப் பொறுத்து 
அமைவதே என்று சமூகம் கருதியது.

ஆனால் அறிவியல் மேற்கத்திய சமூகத்தின் 
முடிவை தவறானது என்று அறிவித்தது.
ஒருவரின் sexual orientation அவரின் விருப்பத்தின்படி 
அமைவதல்ல என்றும் அது உடலியல் தன்மை 
காரணமாக அமைவது என்றும் அறிவியல் 
நிரூபித்தது. 

தன்னுடைய தேர்வுக்கு உட்படாமல் 
தன் உடலின் இயல்பின்படி அமைந்து விடும் 
sexual orientationஐ ஒரு நபர் தன் மன விருப்பப்படி
மாற்றிக்கொள்ள முடியாது என்று அறிவியல் 
எடுத்துக் கூறியது. இதன் மூலம் ஒருவரின் 
sexual orientation தன்பாலின ஈர்ப்பாக அமைந்து 
விடுமெனில் அதற்காக அந்த நபரைக் குற்றவாளி 
ஆக்க முடியாது என்றும் அறிவியல் விளக்கியது.      

இதன் பிறகுதான் மேலை நாடுகளில் ஓரினச் சேர்க்கை 
குற்றநீக்கம் (decriminalisation) செய்யப்பட்டது.

கணிப்பொறியின் தந்தை என்று போற்றப்படும் 
ஆலன் டூரிங் என்னும் பிரிட்டிஷ் கணித மேதை 
தமது sexual orientationக்காக பிரிட்டிஷ் அரசால் 
1950களில் மிகவும் குரூரமாகத் தண்டிக்கப் பட்டார்.
பின்னர்தான் ஓரினச்சேர்க்கை குற்றநீக்கம் 
செய்யப்பட்டு சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப் 
பட்டன. 

இந்திய சமூகம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே 
ஓரினச்சேர்க்கை உயிரியல் ரீதியான ஒன்றுதான் என்று 
அறிந்திருந்தது. எனவே மேற்கத்திய காட்டுமிராண்டித்
தனமும் குரூரமும் இந்திய சமூகத்தில் இல்லை.
---------------------------------------------------------------
பின்குறிப்பு:
சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவியல் ஒளி இதழில் 
இக்கட்டுரையாசிரியர்  எழுதிய ஆலன் டூரிங் 
என்ற கட்டுரையைப் படியுங்கள். ஓரினச்சேர்க்கை 
குறித்த அறிவியல் விளக்கம் அக்கட்டுரையில் உள்ளது.
  ****************************************

 

  


  

     

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக