செவ்வாய், 3 அக்டோபர், 2023

இயற்பியல் நோபல் பரிசு 2023!
------------------------------------------------ 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------
பியரி அகஸ்டினி (அமெரிக்கா)
ஃபெரன்க் கிரௌஸ் (ஜெர்மனி)
பெண் விஞ்ஞானி ஆனி ஃகுயில்லியர் (சுவீடன்)
ஆகிய மூவருக்கும் 2023ஆம் ஆண்டிற்கான 
இயற்பியல் நோபல் பரிசு சமமாகப் பகிர்ந்து 
அளிக்கப் படுகிறது.     

அட்டோ வினாடி (atto second) நேரமே நீடிக்கக்கூடிய 
மிக மிகச்சிறிய ஒளித்துடிப்பை (light pulse)
தங்களின் பரிசோதனைகளில் உருவாக்கிய 
மேற்கூறிய மூவரும் பரிசைப் பகிர்ந்து 
கொள்கின்றனர்.

அட்டோ வினாடி (atto second) = 10^minus 18 second.
அதாவது 0.0 000 000 000 000 000 001 வினாடி.
***********************************************     

விஞ்ஞானிகளின் பங்களிப்பு! 
பரிசு எதற்காக வழங்கப் பட்டது?
---------------------------------------------
அணுக்களிலும் மூலக்கூறுகளிலும் 
எலக்ட்ரான்கள் உள்ளன.இவை மிகக் 
குறுகிய நேரத்தில் மாற்றங்களுக்கு 
உள்ளாகின்றன. அதாவது ஒரு 
அட்டோ வினாடி அல்லது அதற்கும் குறைந்த 
நேரத்தில் எலக்ட்ரான்கள் மாற்றங்களை 
அடைகின்றன. இவற்றை அளக்க 
தனிச்சிறப்பான தொழில்நுட்பம் 
தேவைப்படுகிறது.

தற்போது இம்மூவரும் மேற்கொண்ட 
பரிசோதனைகளின் விளைவாக அட்டோ 
வினாடிக்கும் குறைந்த நேரத்தில் 
மாற்றத்துக்கு உள்ளாகும் எலக்ட்ரான்களை 
அளக்க முடிகிறது.

இம்மூவரும் உருவாக்கிய அட்டோ வினாடி 
தொழில்நுட்பத்தின் மூலம் எலக்ட்ரான்களின் 
அதிநுட்பமான மாற்றங்களை அளக்க 
இயலும். இது எலக்ட்ரானிக்ஸ் துறையில் 
புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தும்.


உண்மைதான்! அறிவியல் எல்லையற்றதுதான்!

நல்லது. நன்றி! நான் விழாவில் கலந்து 
கொள்ள சம்மதிக்கிறேன். விழா 
சென்னையில்தானே! டிசம்பர் மாதத்தில் 
என்ன தேதி என்று முடிவு செய்து விட்டீர்களா?
நான் வருகிறேன். நன்றி.
எனது மொபைல்: 94442 30176.
மின்னஞ்சல் ilangophysics@gmail.com 







 
  

     
  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக