வியாழன், 19 அக்டோபர், 2023

 மார்க்சியம் கற்பது எப்படி?
கற்றலை எங்கிருந்து தொடங்குவது?
--------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-----------------------------------------------------
1) மார்க்சியம் ஒரு அறிவியல் என்று மூச்சுக்கு 
முந்நூறு முறை முழங்குகிறோம். மார்க்சியம் 
ஒரு அறிவியல் என்பதால், அறிவியலைக் 
கற்காமல் மார்க்சியத்தைக் கற்க முடியாது.
No science means No Marxism.

2) அறிவியலைக் கற்கத் தொடங்குவதன் மூலம்
மார்க்சியத்தைக் கற்கத் தொடங்க வேண்டும்.

3) முதலில் 9, 10 வகுப்புகளின் கணிதம், அறிவியல்
பாடப் புத்தகங்களை வாங்கிக் கொள்ள வேண்டும்.
அவற்றில் உள்ள பாடங்களை அக்கறையுடன் 
படிக்க வேண்டும். குறைந்தது மூன்று மாத 
காலம் மேற்கூறிய நான்கு புத்தகங்களையும் 
படிக்க வேண்டும். (IX Maths, IX Science, X Maths, X Science).

4) படிப்பது என்பது வாசிப்பு அல்ல. வாசிப்பையும் 
விடஉயர்ந்தது படிப்பு. 
(வாசிப்பு = Reading; படிப்பு = studying) 
கணிதப் புத்தகத்தில் உள்ள கணக்குகளைச்  
செய்து பார்க்க வேண்டும். அதுதான் படிப்பது 
என்பதற்கான அர்த்தம். 14 செமீ ஆரமுள்ள ஒரு 
வட்டத் தகட்டின் பரப்பளவு என்ன என்ற கணக்கு 
பாடப்புத்தகத்தில் இருக்கும். அதைச் செய்து 
பார்த்து பரப்பளவைக் காண வேண்டும்.

5) கணிதம் அறிவியலைக் கற்க வேண்டும் என்பதன் 
பொருள் இவற்றைத் தவிர வேறு எதையும் 
கற்கக் கூடாது என்பதல்ல. நீங்கள் எதை 
வேண்டுமானாலும் படிக்கலாம். அனால் 
கணிதம் அறிவியலைப் படிப்பது கட்டாயம்.

6) 9, 10 வகுப்புகளின் கணித அறிவியல் புத்தகங்களை 
குறைந்தது 3 மதம் படிக்க வேண்டும். மூன்று மாதம் 
கழிந்த பின்னர், அடுத்த கட்ட படிப்பிற்குச் செல்ல 
வேண்டும். 

7) எனவே 11,12 வகுப்புகளின் கணிதம், இயற்பியல், 
வேதியியல், உயிரியல் பாடப் புத்தகங்களை 
வாங்கிக் கொள்ளுங்கள்.
அவற்றை அக்கறையுடன் படிக்கத் தொடங்குகள்.
குறைந்தது இரண்டு ஆண்டு காலம் இப்புத்தகங்களைப் 
படிக்க வேண்டும். புரிந்து கொள்ள முயல 
வேண்டும்; புரிந்து கொள்ள வேண்டும் என்பது 
கட்டாயம்.

8..  புத்தகங்களைப்  படிக்கும்போது முற்றிலுமாக 
உங்களுக்குப் புரியாத பாடங்கள் இருக்கும்.
உங்கள் வீட்டிலோ தெருவிலோ உள்ள 
ப்ளஸ் டூ மாணவர்கள் அல்லது கல்லூரி 
மாணவர்களிடம் பாடம் கற்றுக் கொள்ள 
வேண்டும். இல்லையேல் டியூஷன் வைத்துக் 
கொண்டாவது கற்க வேண்டும்.

0) கணிதம் அறிவியல் பாட நூல்களை நீங்கள் 
படிப்பது ப்ளஸ் டூ தேர்வு எழுதுவதற்காக அல்ல.
அறிவியலில் குறைந்தபட்சத் புரிதலைப் 
பெறுவதற்காக என்பதை மனத்தில் 
கொள்ளுங்கள்.

10) இவற்றோடு Science Reporter, அறிவியல் ஒளி 
ஆகிய அறிவியல் இதழ்களையும் படிக்க 
வேண்டும். இவை நூலகங்களில் கிடைக்கும்.
இல்லையேல் சந்தா செலுத்தி வாங்கிப் படியுங்கள்.
வாழ்க்கையில் ஒரு அறிவியல் கட்டுரையைக்கூட 
முழுசாகப் படிக்காதவன் மார்க்சியம் பற்றிப் 
பேசுவதற்கான அருகதையற்றவன் ஆகிறான்.

11) மார்க்சியத்தைக் கற்பதற்கு வேறு குறுக்கு 
வழி எதுவும் இல்லை. அறிவியலைஃ கற்காதவனால் 
ஒருபோதும் மார்க்சியத்தைக் கற்க முடியாது;
பொருள்முதல்வாதத்தைக் கற்க முடியாது  
-------------------------------------------------------------------
பின்குறிப்பு:
1) மெய்யான அக்கறையுடன் மார்க்சியம் கற்க 
விரும்புவோருக்கான வழிகாட்டி இது.

2) ஏற்கனவே அறிவியல் கற்றவர்களுக்கு 
இக்கட்டுரை தேவையில்லை.
********************************************************
          

4)    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக