எகிப்து அதிபர் அன்வர் சதாத்தை கொலை செய்து
இஸ்ரேல் பாலஸ்தீன அமைதியை சீர்குலைத்தது யார்?
------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------
பாலஸ்தீனத்தை முன்னிட்டு 1960களின் பிற்பகுதியில்
இஸ்ரேல் எகிப்து நாடுகளுக்கு இடையே போர் நடந்தது.
பின்னர் பல ஆண்டு கால முயற்சியின் விளைவாக
இரு நாடுகளுக்கும் இடையில் சமாதானப் பேச்சு
வார்த்தை நடந்தது.
அமெரிக்காவுக்குச் சொந்தமான "காம்ப் டேவிட்"
(Camp David) என்ற இடத்தில் இரு நாட்டுத்
தலைவர்களும் பேசினர். தொடர்புடைய பிற
நாடுகளின் தலைவர்களும் பேச்சு வார்த்தையில்
பங்கேற்றனர்.
இறுதியில் 1978 செப்டம்பரில் எகிப்து அதிபர்
அன்வர் சாதத், இஸ்ரேல் அதிபர் மெனாச்சம் பெகின்
ஆகிய இருவரும் வெள்ளை மாளிகையில் அன்றைய
அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் முன்னிலையில்
சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
தொடர்ந்து 1978ஆம் ஆண்டிற்கான உலக அமைதிக்கான
நோபல் பரிசு எகிப்து அதிபர் அன்வர் சாதத், இஸ்ரேல்
அதிபர் மெனாச்சம் பெகின் ஆகிய இருவருக்கும்
பகிர்ந்து வழங்கப்பட்டது.
ஆக, பகைமை மட்டுப்பட்டு வந்தது. எல்லாம்
நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால்
பகைமை மறைந்து அமைதி தோன்றுவதை
பயங்கரவாதம் அனுமதிக்குமா? அனுமதிக்கவில்லை.
அது அக்டோபர் 1981ல் எகிப்து அதிபர் அன்வர் சாதத்தை
கொலை செய்தது. பயங்கரவாதத்திற்கு பலியானார் சாதத்.
Egyptian Islamic Jihad என்ற அமைப்பு அன்வர் சாதத்தை
படுகொலை செய்தது.
இதன் விளைவாக அமைதி முயற்சிகள் சீர்குலைந்தன.
இன்றைக்கு இந்த 2023ஆம் ஆண்டிலும் சமாதானம்
ஏற்படவில்லை என்பதை இன்றைய தலைமுறை
கண்ணாரக் காண்கிறது.
சமகால உலகில் பயங்கரவாதம் உலகிற்கும் மனித
இனத்துக்கும் ஒரே அச்சுறுத்தலாக இருக்கிறது.
பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டால்
மட்டுமே உலகம் அமைதிக் காற்றைச் சுவாசிக்கும்.
-------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
ஒரே ஒரு விஷயத்தை மட்டும் இக்கட்டுரையில் சொல்லி
இருக்கிறேன். காரணம் இந்தக் கட்டுரை வாசிப்பு இல்லாத
ஆங்கிலம் தெரியாத குட்டி முதலாளித்துவ அன்பர்களை
மனதில் கொண்டு எழுதப்பட்டது. நாலைந்து விஷயங்களை
ஒரே கட்டுரையில் சொன்னால், விஷயத்தின் கனத்தை
குட்டி முதலாளித்துவம் தாங்காது.
எனவே படுகொலை செய்யப்பட்ட இஸ்ரேல் பிரதமர்
இட்சாக் ரபின் பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
*****************************************************
முக்கிய பின்குறிப்பு:
யாரும் எக்காரணம் கொண்டும் ஹமாஸ் அமைப்பின்
பயங்கரவாதத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ
ஆதரித்து இப்பதிவில் பின்னூட்டம் இடக்கூடாது என்று
எச்சரிக்கை செய்கிறோம். காரணம் பயங்கரவாதம்
எமக்கு ஏற்புடையது அல்ல,
மேலும் பயங்கரவாத ஆதரவுக் கருத்துக்கள் இடம்
பெற்றால் அந்த முகநூல் கணக்கை முகநூல் நிர்வாகம்
துடித்து விடுகிறது என்பதை அறிக..
**********************************************
படம்: இடமிருந்து வலம்:
எகிப்து அதிபர் அன்வர் சாதத்.
இஸ்ரேல் அதிபர் மெனாச்சம் பெகின்.
------------------------------------------------------------------------
றுள்ளதாக முகநூல் நிர்வாகம் கருதினால் ண்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக