வெள்ளி, 7 டிசம்பர், 2018

ஐ ஏ எஸ் அதிகாரியும் அமைச்சரும் சேர்ந்து
முறியடித்த வேலைநிறுத்தம்!
----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------------------------------
அருணா சுந்தரராஜன்!  இந்த  அம்மையார்
மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையின்
செயலாளராக (Secretary Telecom) இருக்கிறார்.
தொலைத்தொடர்பு ஆணையத்தின் தலைவரும்
இவரே (Chairman Telecom Commission).

இவர் ஒரு ஐஏஎஸ் அதிகாரி. இவரது படிப்பு என்ன?
இவர் தத்துவத்தில் எம் ஏ (MA Philosophy) படித்துள்ளார்.
இவர் அறிவியல் பட்டதாரியோ அல்லது பொறியியல்
பட்டதாரியோ அல்ல.

தொலைத்தொடர்புத்துறை முற்றிலும் அறிவியல்
தொழில்நுட்பத் துறை ஆகும். எனவே அறிவியலும்
தொழில்நுட்பமும் கற்றவர்களே இத்துறையை
நிர்வகிக்க இயலும்.   

ஆனால் இவரோ கலைப்பிரிவு பாடமான தத்துவத்தில்
எம் ஏ படித்தவர். கருத்துமுதல்வாதத்தின் சிறப்பு
பற்றியோ அத்வைதத்தின் மேன்மை பற்றியோ
இவர் கற்றிருக்கிறார். இவர் கற்ற கல்வி இவர்
நிர்வகிக்கும் அறிவியல் தொழில்நுட்பத் துறையோடு
ஸ்நானப் .பிராப்தி அற்றது.

இந்தியா நிலவுடைமைச் சமூக அமைப்பாக இன்னமும்
நீடிக்கிறது என்பதற்கு இது நல்ல உதாரணம்.
சாம் பித்ரோடா போன்ற தொழில்நுட்ப அறிஞர்கள்
நிர்வகித்த தொலைத்தொடர்புத் துறையை
இவரைப் போன்ற Arts Group ஆட்கள் நிர்வகிப்பது
கேலிக்கூத்து. 

சரி, தொலைத்தொடர்புத் துரையின் அமைச்சர்
யார் தெரியுமா? மனோஜ் சின்ஹா! இவர் உபி
மாநிலத்தவர். தொலைத்தொடர்புத் துறையின்
தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்
(State Minister with independent charge).

பிரமோத் மகாஜன், தயாநிதி மாறன், ஆ ராசா,
கபில் சிபல், ரவிசங்கர் பிரசாத் ஆகியோர்
தொலைத்தொடர்புத்துறையில் காபினெட்
அமைச்சர்களாக இருந்தனர். ஆனால் மோடி
இத்துறைக்கு தனிப்பொறுப்புடன் கூடிய
இணையமைச்சர் போதும் என்று தீர்மானித்து
மனோஜ் சின்ஹாவை அமைச்சராக்கி உள்ளார்.

சரி, அமைச்சர் மனோஜ் சின்ஹா என்ன 
படித்திருக்கிறார்? இதற்குக் கிடைக்கிற விடை
நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

ஆம், அமைச்சர் எம் டெக் (M.Tech) படித்துள்ளார்.
பொதுவாக அதிகாரி அதிகம் படித்தவராகவும்
அமைச்சர் தற்குறியாகவும் இருப்பது இந்திய
மரபு. இதற்குச் சிறந்த உதாரணம் நம்மூர் மு க
அழகிரி. மனிதகுல வரலாறு கண்டும் கேட்டும்
இராத தற்குறியான மு க அழகிரி மத்திய
அரசின் ரசாயனம் மற்றும் உரத்துறை
அமைச்சராக இருந்து தமிழ்நாட்டுக்கு நீங்காத
பெருமை சேர்த்தார்.

ஆனால் இந்திய மரபை மீறி, Arts Groupல் டிகிரி
வாங்கிய தற்குறி அதிகாரியையும், எம் டெக்
படித்த அமைச்சரையும் தொலைத்தொடர்புத்
துறை கொண்டிருக்கிறது. இது ஒரு விசித்திரமே.

இதைப்படிக்கும் வாசகர்கள் ஐ ஏ எஸ் அதிகாரியை 
எப்படித் தற்குறி என்று கூறலாம் என்று
கொதித்தெழலாம். அறிவியல் தொழில்நுட்பத்
துறையைப் பொறுத்தமட்டில், ஐ ஏ எஸ் அதிகாரிகள்
தற்குறிகளே.

அமைச்சர் மனோஜ் சின்ஹா உபி மாநிலத்தவர்.
உபி போன்ற பின்தங்கிய feudal மாநிலத்தில் இருந்து
கூட, ஒரு எம் டெக் படித்தவர் எம்பி ஆக முடிகிறது.
ஆனால் நம் தமிழ்நாட்டில் இது சாத்தியமா?
வாய்ப்பே இல்லை. தமிழ்நாடு திராவிடத்
தற்குறிகளுக்கு பட்ட போட்டுக் கொடுக்கப்
பட்ட இடம்.

சரி, இப்போது ஏன்  தொலைதொடர்புத் துறையின்
அமைச்சரைப் பற்றியும் துறைச்செயலாளரைப்
பற்றியும் எழுத வேண்டும்? காரணம் இருக்கிறது.

கடந்த டிசம்பர் 3 அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தம்
நடத்த அறைகூவல் விடுத்திருந்தன டெலிகாம்
தொழிற்சங்கங்கள். அந்த வேலைநிறுத்தம்
நடைபெறவில்லை. தொழிற்சங்கங்கள் வாபஸ்
பெற்று விட்டன.

வேலைநிறுத்தம் நடைபெறாதபடி அதை
முறியடித்தவர்கள் இக்கட்டுரையில் காணும்
அமைச்சரும் துறைச்செயலாளரும். எனவே
இவர்களை அறிந்து கொள்ள வேண்டிய தேவை
இருக்கிறது.

இந்த நாட்டில் ஒரு புதிய ஜனநாயகப் புரட்சி
நடந்து முடிந்தால் ஐ ஏ எஸ் கழுதைகளை
அறிவியல் மாளிகைகளில் இருந்து விரட்டி
அடிக்கலாம். அதுவரை அவை அங்கு மேய்ந்து
கொண்டுதான் இருக்கும்.
*****************************************************  

மொழி தொடர்ந்து இயங்கிக்
கொண்டிருக்கிறது.இயக்கத்தின் போக்கில்
மாறிக் கொண்டும் இருக்கிறது. சொல்லும்
பொருளும் மாறிக்கொண்டே இருக்கின்றன.
இந்த மாற்றம் இடையறாது நிகழ்கிறது.

"பொன்மலர் நாற்றம் உடைத்து" என்ற
பழமொழியில் நாற்றம் என்பது நறுமணம்
என்ற பொருளைக் கொண்டது.

நாற்றத் துழாய்முடி நாராயணன் என்கிறாள்
ஆண்டாள். நாற்றத் துழாய் ஏற்பது நறுமணமிக்க
துளசி என்று பொருள்பட்டது. இன்று நாற்றம்
என்ற சொல்லின் பொருள் மாறி விட்டது.
முற்றிலும் எதிரான பொருளைத் தருகிறது.
இன்று நாற்றம் என்றால் கெட்ட நாற்றம்
என்றே பொருள்.

வரலாற்றுச் சக்கரத்தைப் பின்னோக்கி இழுக்க
இயலாது. இன்று நாற்றம் என்ற சொல்லை
நறுமணம் என்ற பொருளில் ஆள இயலாது.
அப்படி ஆள முயலுதல் இயற்கைக்கும்
மொழியின் இயல்புக்கும் எதிரானதாக ஆகிவிடும்.

இதைப் போன்றதே நிவாரணம் என்ற சொல்லும்.
mitigation என்ற சொல்லுக்கு நிகராகவும்
relief என்ற சொல்லுக்கு நிகராகவும்
நிவாரணம் என்ற சொல் பொருள்படுகிறது.
இவ்வாறு பொருள்படுத்தல் பெருவழக்காகவும்
ஆகி விட்டது. பெருவழக்கை ஏன் மாற்ற
முயல வேண்டும்? 

"வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்"
என்கிறார் தொல்காப்பியர். செய்யுளை விட
வழக்குக்கே அதிக முக்கியம் அளிக்கிறார்.
தொல்காப்பியர் நெறியை நாம் ஏன்
புறக்கணிக்க வேண்டும்.

எனவே தற்போது உள்ளது போல, நிவாரணம்
என்ற சொல் relief, mitigation  ஆகிய ஆங்கிலச்
சொற்களுக்கு நிகரான சொல்லாக இருக்கும்
நிலை நீடிக்கட்டும்.           

   


புதன், 5 டிசம்பர், 2018

மருதுபாண்டியன்

கிருஷ்ணசாமி தியாகராஜன்  KI NATARAASAN  கி நடராசன்


இந்தியப் புரட்சிக்கும் மார்க்சிய லெனினியத்திற்கும்
தோழர் ஏ எம் கே அவர்களின் பங்களிப்பு மகத்தானது.
அவரின் தத்துவ அரசியல் நிலைபாடுகளை
வைத்துத்தான் அவரை மதிப்பிட வேண்டும்.
அமைப்பு சார்ந்த சிக்கல்களைக் கொண்டு
மதிப்பிடுவது புறவய மதிப்பீட்டைத் தவிர்ப்பதாகும்.
அது மார்க்சிய அணுகுமுறை அல்ல.

மார்க்ஸ் எங்கல்ஸ் வாழ்நாளில் அவர்கள் கூறிய
எந்தப் புரட்சியும் நடைபெறவில்லை. 1917ல்
புரட்சி நடைபெறும் வரை, மார்க்ஸ் வர்ணித்த
புரட்சி எதுவும் நடைபெறவில்லை. இதை வைத்துக்
கொண்டு மார்க்ஸ் ஏங்கல்ஸை மதிப்பிடுவது
தவறாகும். அதைப்போன்றே அமைப்புக்
காரணிகளைக்  கொண்டு ஏ எம் கே அவர்களை
மதிப்பிடுவதும் தவறாக முடியும்.

வரும் ஞாயிறன்று. "இந்தியப் புரட்சிக்கும்
மார்க்சிய லெனினியத்திற்கும் ஏ எம் கே அவர்களின்
மகத்தான பங்களிப்பு" என்ற தலைப்பில்
உரையாற்றுகிறேன். அருள் கூர்ந்து தோழர்
நடராசன் அவர்கள் அக்கூட்டத்திற்கு வந்து,
அங்கு தமது கேள்விகளை எழுப்புமாறு அன்புடன்
வேண்டுகிறேன்.
       

திங்கள், 3 டிசம்பர், 2018

திரு ஈஸ்வரனே, ஏ எம் கே நினைவேந்தல்
கூட்டத்தை அவமதிக்க வேண்டாம்!
------------------------------------------------------------------------
திரு ஈஸ்வரன் அவர்களுக்கு,
தோழர் ஏ எம் கே மறைந்த செய்தியைக்
கேள்வியுற்றதுமே தொழிற்சங்க சார்பில்
பல்வேறு அலுவலகங்களில் அஞ்சலிக்கூட்டம்
நடைபெற்றது. அப்படி ஒரு கூட்டத்தில்
அழைப்பை ஏற்று நான் பங்கேற்றேன்.
வாயில் கூட்டமாகவோ அல்லது அலுவலகத்துள்
அறைக்கூட்டமாகவோ அஞ்சலி நிகழ்வுகள்
நடைபெற்றன.

நான் காட்பாடி சென்று சென்னை திரும்பிய மறுநாளில்
சில தொழிற்சங்கங்கள் நடத்திய ஏ எம் கே  நினைவேந்தல்
வாயில் கூட்டத்தில் பங்கேற்றேன். இத்தகைய
கூட்டங்களை தொழிலாளர்கள் தங்கள் தலைவரின்
மறைவுச் செய்தியைக் கேள்வியுற்ற உடனேயே
நடத்தினார்கள். இந்தக் கூட்டங்கள் பற்றி எல்லாம் எனக்கே முழுமையாகத் தெரியாது.அதே போல போல்ஷ்விக் கட்சித்
தோழர்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஈஸ்வரன் அவர்களே, நீங்கள் தோழர் ஏ எம் கே
அவர்களைப் பார்த்ததே கிடையாது. அவர் எப்படி
இருப்பார் என்று கூட உங்களுக்குத் தெரியாது.
ஏ எம் கே அவர்கள் மறைந்த பிறகுதான் அவருடைய
புகைப்படத்தை நாங்கள் எல்லோரும் வெளியிட்டோம்.
எங்களின் தொழிற்சங்க, அரசியல், தத்துவ
ஆசான் ஏ எம் கேயின் மறைவுக்கு தொழிலாளர்களாகிய
நாங்கள் அஞ்சலி செலுத்துவதில் உங்களின்
முகத்தில் ஏன் சுருக்கம் விழுகிறது?

ஏ எம் கே அபிமானிகளுக்குள் சிண்டு முடியலாமா
என்று முயற்சி செய்யும் கியூ பிராஞ்சு வேலையை
எங்களிடம் காட்ட வேண்டாம்.  உங்களைப் போன்ற
அந்நிய வர்க்க ஆசாமிகளை எப்படி நடத்துவது
என்று .ஏ எம் கேயின் தொண்டர்களாகிய
எங்களுக்குத் தெரியும்.

காட்பாடியில் கண்ணியம் காத்தார்கள்; கண்டன
முழக்கத்தோடு நிறுத்திக் கொண்டார்கள். சென்னைப்
பாட்டாளி வர்க்கமாகிய நாங்கள் அப்படியல்ல.
தூக்கிப் பிடித்தால் கொடியுண்டு
மடக்கிப் பிடித்தால் தடியுண்டு
என்பதுதான் எங்களின் நடைமுறை.

எனவே  ஈஸ்வரன் அவர்களே, சிண்டு முடியும்
கியூ பிராஞ்சு வேலையை இங்கு காட்ட வேண்டாம்.
இன்னமும் annihilationல் நம்பிக்கை உள்ளவன் நான்.

ஏ எம் கே என்ற நாமத்தை உச்சரிக்கக் கூட அருகதை
அற்ற நீங்கள், ஏ எம் கே நினைவேந்தல் கூட்டத்தை
அவமதிப்பதை அனுமதிக்க முடியாது; சகிக்க
முடியாது.


ஆண்டிக்கு ஏன் அம்பாரம்  கணக்கு? இதற்கெல்லாம்
பதில் சொல்ல வேண்டிய அவசியம் .எங்களுக்கில்லை.
பேச்சை நிறுத்தவும்.



கூட்டத்தில் பேசியவர்கள் ஏ எம் கே அவர்களோடு
இயக்க ரீதியாகச் செயல்பட்டவர்கள்தான்.
யாரும் குடும்ப உறுப்பினர்களோ சொந்தக்காரர்களோ
கிடையாது. எனவே பொய்மூட்டையை அவிழ்க்க
வேண்டாம். ஏ எம் கே என்ற நாமத்தை உச்சரிக்கக்கூட
அருகதை இல்லாத ஈஸ்வரனே, நீ எப்படி தொழிலாளி
வர்க்கம் ஆவாய்? உன் குட்டி முதலாளித்துவ
அற்பத்தனத்தை தயவு செய்த் நிறுத்தவும்.
ஏ எம் கே நினைவேந்தல் கூட்டத்தை  அவமரியாதை
செய்வதும் அவதூறு பேசுவதும்  தண்டனைக்குரிய
குற்றங்கள் ஆகும்.

அமைப்பு சார்ந்த பல தோழர்கள் .கூட்டத்திற்க்கு
வந்திருந்தனர். அவர்களைப்  பேச அழைத்தபோது,
"மற்றவர்களைப் பேச வையுங்கள் இளங்கோ,
அதுதான் சிறப்பு" என்று என்னிடம் கூறினர்.
எனவே எதையும் தெரியாமல், தெரிந்து கொள்ளாமல்
உளற  வேண்டாம். உம்முடன் வாதம் செய்வது
எனக்கு இழுக்கு. எனவே இதற்கு மேலும் உளறினால்
தக்க பாடம் கற்பிக்கப்படும்.    

---------------------------------------------------------------------------------------
கட்சியும் குடும்பமும்!
தோழர் ஏ எம் கே வழிகாட்டுதல்!
-----------------------------------------------------------
கட்சி என்பது வேறொன்றும் அல்ல;  அது என்
குடும்பம்தான் என்று கருதி கட்சியைத் தன்
குடும்பச் சொத்தாக ஆக்கிக்  கொண்ட  பல அரசியல்
கட்சித் தலைவர்களை நாம் அறிவோம்.

இதற்கு முற்றிலும் மாறானவர் தோழர் ஏ எம் கே.
தனது  குடும்ப நலன் உள்ளிட்ட அனைத்தையும்
கட்சியின் நலனுக்குக் கீழ்ப்படுத்தினார்.

தமது சொந்த மகளின் திருமணத்திற்குக் கூட
அவர் செல்லவில்லை. கட்சித் தோழர்கள்
திருமணத்திற்குச் செல்ல விரும்பியபோது
அவர்களையம் செல்ல வேண்டாம் என்று
தடுத்தார் ஏ எம் கே.

ஏ எம் கே அவர்கள் தடுத்ததையும் மீறி, அன்று
கோவை ஈஸ்வரன் போன்ற சில தலைவர்கள்
ஏ எம் கே அவர்களின் மகள்  திருமணத்திற்குச்
சென்றனர்.

தமது கட்சித் தோழர்களையே தமது குடும்பமாகக்
கருதி வாழ்ந்தவர் தோழர் ஏ எம் கே. இப்படி ஒரு
தலைவரை இனி காண்பதற்கில்லை!

(நியூட்டன் அறிவியல் மன்றம் நடத்திய
ஏ எம் கே நினைவேந்தல் கூட்டத்தில்
தோழர் பி இளங்கோ பேசியது)
*********************************************  
மருதுபாண்டியன் திருப்பூர் குணா ஞானம்

தோழர் அப்பு ஒரு சி ஐ ஏ ஏஜென்ட் என்று
எழுதிய தீக்கதிருக்கு பாடம் கற்பித்த ஏ எம் கே !
----------------------------------------------------------------------------------
நக்சல்பாரி இயக்கத்தை தமிழ்நாட்டில் நிறுவிய
மூவரில் ஒருவர் தோழர் எல் அப்பு. அன்று 1960களின்
இறுதியில் தீக்கதிர் ஏட்டின் அலுவலகம்
சென்னையில்தான் இருந்தது. (தற்போது மதுரையில்
உள்ளது).

அன்று தீக்கதிரில் நக்சல்பாரித் தலைவர் தோழர்
அப்புவை அவதூறு செய்யும் நோக்கில் "அப்பு ஒரு
சி ஐ ஏ ஏஜென்ட்" என்று தீக்கதிர் எழுதியது.

தீக்கதிரின் பொய்ச்செய்தியைப் படித்த
தோழர் ஏ எம் கே கடுங்கோபம் கொண்டார்.
உடனடியாக தொழிலாளர் தோழர்கள் பலரையும்
திரட்டி தீக்கதிர் அலுவலகத்தை முற்றுகையிட்டு
கண்டன முழக்கங்களை எழுப்பினார்.

இச்செய்தி காட்டுத் தீயாகப் பரவி, மென்மேலும்
தொழிலாளர்கள் தீக்கதிரைக் கண்டனம்
செய்தனர். பலர் மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்தும்
மார்க்சிஸ்ட் தொழிற்சங்கத்திலும் இருந்தும்
விலகினர். இதன் விளைவாக தீக்கதிர்
பத்திரிகையின் சர்க்குலேஷன் குறைந்தது.
தொழிலாளர் மத்தியில் தீக்கதிர் கண்டனத்துக்கு
இலக்கானது. இனி தீக்கதிரை சென்னையில் இருந்து
நடத்த முடியாது என்ற நிலை ஏற்பட்டது.

தீக்கதிர் மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இதுதான் தீக்கதிர் ஏட்டின் தலைமை அலுவலகம்
மதுரை சென்ற கதை. இதை தோழர் ஏ எம் கே
சாதித்துக் காட்டினார். இவ்வாறு நக்சல்பாரி
இயக்கமானது திரிபுவாதத்தை முறியடிப்பதில்
வெற்றி கண்டது.

(நியூட்டன் அறிவியல் மன்றம் நடத்திய
தோழர் ஏ எம் கே நினைவேந்தல் கூட்டத்தில்
தோழர் டி எஸ் எஸ் மணி பேசியதில் இருந்து)
*************************************************      

மருதுபாண்டியன் திருப்பூர் குணா

ஞானி நாகராஜன் ஆகிய இருவரும் பண்பாட்டுத்
துறைக்கு அதிக அழுத்தம் தரும்  கிராம்சியக்
கோட்பாட்டை முன்வைப்பவர்கள்.
ஞானி நாகராஜன் இருவருக்கும் மறுப்பு என்ற
தலைப்பில் இதுவரை 10 கட்டுரைகள்
எழுதி அவர்களின் மார்க்சியத்தின் மீதான
எதிர்நிலையை நியூட்டன் அறிவியல் மன்றம்
அம்பலப் படுத்தி உள்ளது.கணிசமான முகநூல்
வாசகர்கள் அக்கட்டுரைகளைப் படித்துள்ளார்.
எனவே எதுவும் தெரியாமல், அறியாமை காரணமாக
கண்டதையும் கூறக்கூடாது. இது அகநிலைக்கு
மட்டுமே முக்கியத்துவம் தந்து, புறவய மதிப்பீட்டை 
புறக்கணிக்கும் கருத்துமுதல்வாதப் .பார்வை ஆகும்.
இது மார்க்சியத்துக்கு எதிரானது.

கடந்த 30 ஆண்டுகளாக டெலிகாம் தொழிற்சங்க
அரங்கில் தோழர் ஏ எம் கேயின் போதனைகளை
நடைமுறைப்படுத்தியவன் நான். எனவே புறவயமாக
மதிப்பிடாமல் அகநிலைக் கசடுகளை வெளிப்படுத்தக்
கூடாது.
  

 



ஆனைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம்
என்பது போல், களப்பணியில் தொடர்ந்து
ஈடுபட்டுவரும் அரங்க குணசேகரன்  பேசுவது
நியாயமல்ல. தோழர் ஏ எம் கே நினைவேந்தல்
கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

நினைவேந்தல் உரையாற்றியவர்களும்
பார்வையாளர்களும்  தோழர் ஏ எம் கே பற்றி
நன்கறிந்தவர்கள்; பலர் அவருடன் நெருங்கிப்
பழகியவர்கள். அனைவரும் தங்களின்
போற்றுதலுக்குரிய தலைவருக்கு சிறப்பாக
செவ்வணக்க அஞ்சலி செலுத்தினர்.

கூட்டத்திற்குத் தலைமையேற்ற நான் கூட்டத்தின்
சிறப்பு பற்றிக் கூறுவது தற்புகழ்ச்சியாக அமையும்.
நீங்கள் கூட்டத்தில் பங்கேற்ற தோழர்களைக்
கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

புலவர் கலியபெருமாளின் இளைய மகன்
தோழர் நம்பியார் கூட்டத்திற்கு வருகை
தந்தார். அவரை மேடையில் அமர வைத்து
நினைவேந்தல் உரையாற்ற அழைத்தேன்.
அவரின் பெயர் நிகழ்ச்சி நிரலில் இல்லை என்பதும் 
அவர் கூட்டத்திற்கு வருவார் என்பதும்
எனக்கு முன்னமே தெரியாது.

அருள்கூர்ந்து தோழர்கள் தியாகு, டி எஸ் எஸ் மணி, பி அண்ட் சி
நடராசன், VMS, சங்கரசுப்பு, இல கோவிந்தசாமியின்
புதல்வி மஞ்சுளா ஆகியோரிடம் கூட்டத்தைப்
பற்றிக் கேட்டுத் தெளிவு பெறுங்கள்.எல்லா
நக்சல்பாரி அமைப்புகளில் இருந்தும் அணிகள்
ஆதரவாளர்கள் பங்கேற்று தோழர் ஏ எம் கே
அவர்களுக்கு செவ்வணக்க அஞ்சலி செலுத்தினர்.
      

சனி, 1 டிசம்பர், 2018

ஆண்மைக் குறைவு ஏற்படுவதாக இதுவரை
எந்த ஆய்வம் இல்லை. நிரூபிக்கவும் படவில்லை.
கதிர்வீச்சினால் பாதிப்பு என்று எடுத்துக் கொண்டால்,
அது சிசுக்கள், குழந்தைகள் ஆகிய பிரிவினர் மீது
மட்டுமே பாதிப்பு ஏற்படுத்தக் கூடியது. வயது வந்த
ADULT பிரிவினரை செல்போன் கதிர்வீச்சு பாதிக்காது.

செல் போன் கோபுரங்களின் கதிர்வீச்சு மிகவும்
பலவீனமானது. ஆனால் செல்போன்களின்
கதிர்வீச்சு 10 மடங்கு அதிகமானது. எனவே
அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல்
SAR (Specific Asorption Rate) அளவு கொண்ட
செல்போன்களைத் தயக்கமின்றித் தூர எறியுங்கள்.

வளர்ச்சி முற்றுப்பெறாத குழந்தைகளின்
செல்போன் பயன்பாடு மிகவும் கட்டுக்குள்
இருக்க வேண்டும். வளர்ச்சி முற்றுப்பெற்றுள்ள
அடல்ட்களை செல்போன் கதிர்வீச்சு எதுவும்
செய்ய இயலாது. ஆண்மைக் குறைவை
செல்போன் கதிர்வீச்சு ஏற்படுத்த இயலாது.
ஒரு ionising radiation மட்டுமே (உதாரணம்: எக்ஸ்ரே
கதிர்வீச்சு) அடல்ட்களைப் பாதிக்க இயலும்.

எந்தவிதமான பாதிப்பும் ஏற்படக்கூடாது
என்பதற்காகத்தான் SAR அளவை ITU
நிர்ணயித்துள்ளது.
  

இதெல்லாம் உண்மை அல்ல என்பதற்கு
என்னிடம் நிரூபணம் உள்ளது. நீங்கள் கூறும்
காலக்கட்டத்தில் நடந்த பல்வேறு அகில இந்தியப்
பொதுவேலைநிறுத்தங்களில் (All India industrial general strikes) 
சரியான பாட்டாளி வர்க்க நிலைபாடு என்ன
என்பதை ஏ எம் கே அவர்கள் மஜஇக பிரசுரங்கள்
வாயிலாகவும், நான் எங்கள் NFTE சங்கம் சார்பாக
வெளியிட்ட அறிக்கைகள் வாயிலாகவும்
வெளிப்படுத்தி உள்ளார். வேலைநிறுத்தம் குறித்து
நான் NFTE சங்கப் பெயரில் வெளியிட்ட அறிக்கைகள்
யாவும் தோழர் ஏ எம் கே அவர்களின் கருத்துக்களே.
எனவே தொழிற்சங்க இயக்கத்தைப் புறக்கணித்து
துரோகம் செய்தார் என்பதெல்லாம், சகிக்க இயலாத
அவதூறுகள் ஆகும்.


தெய்வ சுந்தரம் நயினார் 
மருதுபாண்டியன் இரா செந்தழல் ஞானம் கிருஷ்ணசாமி தியாகராஜன்

தோழர் ஏ எம் கே நினைவேந்தல்!   த ஜீவானந்தம்

  திருப்பூர் குணா

தோழர் பாஸ்கர் விஸ்வநாதன் முத்து அவர்களுக்கு,
-------------------------------------------------------------------------------------------
நினைவேந்தல் கூட்டத்தில் பேசுகிற தோழர் VMS
எனப்படும் வே மீனாட்சி சுந்தரம் சிம்சனில்
பணியாற்றியவர். அவரின் தொழிற்சங்கத்திற்கு
தோழர் ஏ எம் கே அவர்கள் அப்போது தலைவராக
இருந்தார். தோழர் ஏ எம் கே அவர்களின் தலைமையில்
தோழர் மீனாட்சி சுந்தரம் பல்வேறு போராட்டங்களில்
பங்கேற்றுள்ளார். அந்த நினைவுகளை அவர்  என்னிடம்
பகிர்ந்து கொண்டார்.

இன்னொரு பேச்சாளரான மஞ்சுளா அவர்கள்
மறைந்த தோழர் இல கோவிந்தசாமி அவர்களின்
மகள் ஆவார்.

தோழர் எஸ் நடராசன் பி அண்ட் சி நடராசன்
என்றே அழைக்கப் பட்டவர். தோழர் ஏ எம் கே
உருவாக்கிய உழைக்கும் மக்கள் மாமன்றம்
போன்ற தொழிற்சங்க  அமைப்புகளில் குசேலரின்
தலைமையில் பணியாற்றியவர். தற்போது
PUCL அமைப்பின் தமிழ் மாநிலத் தலைவராக
இருந்து வருகிறார்.

உன்னி கிருஷ்ணன் மேனேஜிங்  டைரக்டராக
இருந்தபோது, பி அண்ட் சி மில்லை மூட
அரசு முயற்சி செய்தபோது, அதை எதிர்த்து
பெரும் போராட்டங்களை சென்னை நகரப்
பாட்டாளி வர்க்கம் அன்று கட்டி அமைத்தது.
அப்போராட்டங்களில் தோழர்  நடராசனோடு
பங்கேற்றவன் நான்.

எனவே அருள்கூர்ந்து தொழிற்சங்க வரலாற்றைத்
தெரிந்து கொண்டு, அதன் பிறகு கருத்துக்
கூறுவது நல்லது.
 

தொழிலாளியாக இருக்கும் ஒவ்வொருவரும்
கண்டிப்பாக ஒரு தொழிற்சங்கத்தில் உறுப்பினராக
இருந்தே தீர வேண்டும். தொழிற்சங்கம் நடத்துகிற
வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில்
பங்கேற்கவும் வேண்டும். இது சந்தர்ப்பவாதம்
என்று கூறுவது எவ்வளவு பேதைமை!
 தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இல்லாத
தொழிலாளிக்கு LOYAL EMPLOYEE (விசுவாச ஊழியர்)
என்று பெயர். எனவே தொழிற்சங்கத்தில்
உறுப்பினராக இருப்பது பஞ்சமாபாதகம்
என்ற தங்களின் கருத்து மேனேஜ்மென்ட்டுக்கு
ஆதரவான கருத்து.


நக்சல்பாரி இயக்கத்தின் அறைகூவல்!
------------------------------------------------------------------
தொழிற்சங்கம் வர்க்க சமரச அமைப்பாக
ஆகிவிட்டது. எனவே தொழிற்சங்கத்தை
விட்டு வெளியேறி கிராமப்புறங்களுக்குச்
செல்லுங்கள் என்ற முழக்கத்தை முன்வைத்தவர்
சாரு மஜூம்தார். ஏ எம் கே அல்ல.

நக்சல்பாரி இயக்கத்தின் அறைகூவலை ஏற்று
தோழர் ஏ எம் கே தொழிற்சங்கத்தை விட்டு
வெளியேறி கிராமப் புறங்களுக்குச் சென்றார்.
விவசாயக் கூலியாக வாழ்ந்தார். விவசாய
வேலைகளைச் செய்து குடிசைகளில் வாழ்ந்தார்.

அன்று சென்னை நகரத்தில் ஒரு லட்சம்
தொழிலாளர்களைத் திரட்டும் வல்லமை தோழர்
ஏ எம் கே அவர்களுக்கு மட்டும்தான் இருந்தது.
இந்த ஒரு லட்சம் பேரும் வெறும் பொருளாதாரக்
கோரிக்கைகளுக்காக மட்டும் ஏ எம் கேவின்
பின்னால் அணி திரண்டவர்கள் அல்ல. அப்படிப்பட்ட
மதிப்பீடு தொழிலாளி வர்க்கத்தை இழிவு படுத்தும்
மேட்டுக்குடி மனப்பான்மை ஆகும்.

சென்னை நகரத் தொழிற்சங்க வரலாற்றில்,
தொழிலாளர்களை அரசியல்படுத்தியதில்
ஏ எம் கே அவர்களின் பங்கு மகத்தானது.
அவருக்கு முன்னும் சரி, அவருக்குப் பின்னும் சரி,
வேறு எவரும் ஏ எம் கே அளவுக்கு
தொழிலாளர்களை அரசியல்படுத்தியதில்லை.

கடந்த 35 ஆண்டுகளாக இழையறாத 
தொழிற்சங்கப் பணிகளை மேற்கொண்டவன்
என்ற அடிப்படையில் என்னால் ஏ எம் கே
அவர்களின் அரசியல்படுத்தலை வேறு எவரும்
செய்யவில்லை என்று நிரூபிக்க முடியும்.
வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ
என்று பேசுவது குட்டிமுதலாளியைப் போக்கு.
அது பாட்டாளி வர்க்கப் பண்பு அல்ல.  
 

 

  

       
எந்த ஒன்றையும் ஆழமாகப் பரிசீலிக்காமல்,
வெகுமக்கள் நடுவில் எது பேசப் படுகிறதோ,
அதை ஆதரித்து  தமது கருத்தை உதிர்ப்பவர்
மறைந்த திரு ஞானி. அவர் விஞ்ஞானி அல்ல;
அறிவியல் கற்றவரும் அல்ல.

டெலிகாம் துறையின் ITS அதிகாரிகள் சங்கம்
டெலிகாம் துறையைச் சாராத சில நிபுணர்களிடம்
இது குறித்து ஆய்வு செய்து முடிவு கூறுமாறு
கேட்டுக் கொண்டது. இது நடந்தது சில
ஆண்டுகளுக்கு முன்பு. அக்குழுவானது
செல்போன் கோபுரங்களால் எவ்விதப்
பாதிப்பும் இல்லை என்று அறிக்கை அளித்தது.

இவ்வளவு காலத்தில் குருவிகள் கதிர்வீச்சால்
இறந்து போயின என்றால், மனிதர்கள் உள்ளிட்ட
பிற உயிரினங்களும் இறந்து போயிருக்க
வேண்டும். அப்படி எதுவும் இல்லை என்பதை
அனைவரும் அறிவர்.

Non ionising radiation பாதிப்பை ஏற்படுத்தாது.   

மருதுபாண்டியன் இரா

இந்தியாவில்  செல்போன் தொழில்நுட்பம்
1995ல்தான் நடைமுறைக்கு வந்தது. ஐரோப்பா
அமெரிக்காவில் செல்போன் தொழில்நுட்பம்
முன்னதாகவே வந்து விட்டது. ஆரம்பத்தில்
ஐரோப்பா அமெரிக்காவில் கதிர்வீச்சு
முறைப்படுத்தப் படாமல் இருந்தது. அதன்
பாதகங்கள் கண்டறியப்பட்டு உடனடியாகக்
களையப்பட்டன.

இந்தியா தாமதமாக இந்த தொழில் நுட்பத்துக்கு
வந்ததால், அமெரிக்காவும் ஐரோப்பாவும்
சந்தித்த கதிர்வீச்சு  குறித்த சிக்கல்கள்
நமக்கு ஏற்படவில்லை. இன்னும் சொல்லப் போனால்,
அமெரிக்க ஐரோப்பாவை விட கடுமையான
சட்டம் இந்தியாவில் உள்ளது. நமது செல்போன்
கோபுரங்கள் வெளியிடும் கதிர்வீச்சு மிகவும்
ஆற்றல் குறைந்த கதிர்வீச்சாக உள்ளது.
சட்டத்தால் அவ்வாறு முறைப்படுத்தப் பட்டுள்ளது.

செல்போன் கோபுரங்களை விட, செல்போன்கள்
அதிக அளவு கதிர்வீச்சை வெளியிடுவன. இதை
முறைப்படுத்த SAR (Specific Asorption Rate) அளவை
இந்திய அரசு வெளியிட்டு உள்ளது. உங்களின்
செல்போனில் SAR அனுமதிக்கப்பட்ட அளவை
விட அதிகமாக இருந்தால், அந்த சொல்போனைத்
தூர எறியவும்.


USSD CODEஐ உங்கள் செல் போனில் இருந்து
டயல் செய்யவும். அதாவது STAR HASH 07 HASH
என்பதை இடைவெளி இல்லாமல் டயல் செய்க.
Now dial and check. 1.6 watt per kg என்பதுதான் பாதுகாப்பான
அளவு.
  

ஒவ்வொரு செல்போனும் கொண்டுள்ள
SAR rateஐ விற்கும்போதே
வாடிக்கையாளருக்குச் சொல்ல வேண்டும்
என்று சட்டம் உள்ளது. 1.6 watt per kg என்பதை விட
அதிகமாக இருந்தால், அந்த செல்போன் தீங்கு
விளைவிக்கும். 

நீங்கள் காட்டிய SAR அளவு மிகவும் பாதுகாப்பானதே.
1.6 watt per kg என்பதை விடக் குறைவாகத்தான்
இருக்கிறது. தலைக்கு வேறு அளவு; உடலுக்கு
வேறு அளவு. உலகம் முழுவதும் எந்த நாடாக
இருந்தாலும் 1.6 watt per kg என்ற அளவு பொருந்தும்.
ஐநாவின் உறுப்பு அமைப்பான ITU இதை முடிவு
செய்துள்ளது.