சனி, 1 டிசம்பர், 2018

மருதுபாண்டியன் இரா செந்தழல் ஞானம் கிருஷ்ணசாமி தியாகராஜன்

தோழர் ஏ எம் கே நினைவேந்தல்!   த ஜீவானந்தம்

  திருப்பூர் குணா

தோழர் பாஸ்கர் விஸ்வநாதன் முத்து அவர்களுக்கு,
-------------------------------------------------------------------------------------------
நினைவேந்தல் கூட்டத்தில் பேசுகிற தோழர் VMS
எனப்படும் வே மீனாட்சி சுந்தரம் சிம்சனில்
பணியாற்றியவர். அவரின் தொழிற்சங்கத்திற்கு
தோழர் ஏ எம் கே அவர்கள் அப்போது தலைவராக
இருந்தார். தோழர் ஏ எம் கே அவர்களின் தலைமையில்
தோழர் மீனாட்சி சுந்தரம் பல்வேறு போராட்டங்களில்
பங்கேற்றுள்ளார். அந்த நினைவுகளை அவர்  என்னிடம்
பகிர்ந்து கொண்டார்.

இன்னொரு பேச்சாளரான மஞ்சுளா அவர்கள்
மறைந்த தோழர் இல கோவிந்தசாமி அவர்களின்
மகள் ஆவார்.

தோழர் எஸ் நடராசன் பி அண்ட் சி நடராசன்
என்றே அழைக்கப் பட்டவர். தோழர் ஏ எம் கே
உருவாக்கிய உழைக்கும் மக்கள் மாமன்றம்
போன்ற தொழிற்சங்க  அமைப்புகளில் குசேலரின்
தலைமையில் பணியாற்றியவர். தற்போது
PUCL அமைப்பின் தமிழ் மாநிலத் தலைவராக
இருந்து வருகிறார்.

உன்னி கிருஷ்ணன் மேனேஜிங்  டைரக்டராக
இருந்தபோது, பி அண்ட் சி மில்லை மூட
அரசு முயற்சி செய்தபோது, அதை எதிர்த்து
பெரும் போராட்டங்களை சென்னை நகரப்
பாட்டாளி வர்க்கம் அன்று கட்டி அமைத்தது.
அப்போராட்டங்களில் தோழர்  நடராசனோடு
பங்கேற்றவன் நான்.

எனவே அருள்கூர்ந்து தொழிற்சங்க வரலாற்றைத்
தெரிந்து கொண்டு, அதன் பிறகு கருத்துக்
கூறுவது நல்லது.
 

தொழிலாளியாக இருக்கும் ஒவ்வொருவரும்
கண்டிப்பாக ஒரு தொழிற்சங்கத்தில் உறுப்பினராக
இருந்தே தீர வேண்டும். தொழிற்சங்கம் நடத்துகிற
வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில்
பங்கேற்கவும் வேண்டும். இது சந்தர்ப்பவாதம்
என்று கூறுவது எவ்வளவு பேதைமை!
 தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இல்லாத
தொழிலாளிக்கு LOYAL EMPLOYEE (விசுவாச ஊழியர்)
என்று பெயர். எனவே தொழிற்சங்கத்தில்
உறுப்பினராக இருப்பது பஞ்சமாபாதகம்
என்ற தங்களின் கருத்து மேனேஜ்மென்ட்டுக்கு
ஆதரவான கருத்து.


நக்சல்பாரி இயக்கத்தின் அறைகூவல்!
------------------------------------------------------------------
தொழிற்சங்கம் வர்க்க சமரச அமைப்பாக
ஆகிவிட்டது. எனவே தொழிற்சங்கத்தை
விட்டு வெளியேறி கிராமப்புறங்களுக்குச்
செல்லுங்கள் என்ற முழக்கத்தை முன்வைத்தவர்
சாரு மஜூம்தார். ஏ எம் கே அல்ல.

நக்சல்பாரி இயக்கத்தின் அறைகூவலை ஏற்று
தோழர் ஏ எம் கே தொழிற்சங்கத்தை விட்டு
வெளியேறி கிராமப் புறங்களுக்குச் சென்றார்.
விவசாயக் கூலியாக வாழ்ந்தார். விவசாய
வேலைகளைச் செய்து குடிசைகளில் வாழ்ந்தார்.

அன்று சென்னை நகரத்தில் ஒரு லட்சம்
தொழிலாளர்களைத் திரட்டும் வல்லமை தோழர்
ஏ எம் கே அவர்களுக்கு மட்டும்தான் இருந்தது.
இந்த ஒரு லட்சம் பேரும் வெறும் பொருளாதாரக்
கோரிக்கைகளுக்காக மட்டும் ஏ எம் கேவின்
பின்னால் அணி திரண்டவர்கள் அல்ல. அப்படிப்பட்ட
மதிப்பீடு தொழிலாளி வர்க்கத்தை இழிவு படுத்தும்
மேட்டுக்குடி மனப்பான்மை ஆகும்.

சென்னை நகரத் தொழிற்சங்க வரலாற்றில்,
தொழிலாளர்களை அரசியல்படுத்தியதில்
ஏ எம் கே அவர்களின் பங்கு மகத்தானது.
அவருக்கு முன்னும் சரி, அவருக்குப் பின்னும் சரி,
வேறு எவரும் ஏ எம் கே அளவுக்கு
தொழிலாளர்களை அரசியல்படுத்தியதில்லை.

கடந்த 35 ஆண்டுகளாக இழையறாத 
தொழிற்சங்கப் பணிகளை மேற்கொண்டவன்
என்ற அடிப்படையில் என்னால் ஏ எம் கே
அவர்களின் அரசியல்படுத்தலை வேறு எவரும்
செய்யவில்லை என்று நிரூபிக்க முடியும்.
வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ
என்று பேசுவது குட்டிமுதலாளியைப் போக்கு.
அது பாட்டாளி வர்க்கப் பண்பு அல்ல.  
 

 

  

       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக