வெள்ளி, 14 டிசம்பர், 2018

இயற்பியலே இன்னும் முடிவுக்கு வராதபோது
பொருளின் வரையறையில்
நிறையைச் சேர்க்க இயலாது!
கருத்துமுதல்வாதப் பார்வைக்கு மறுப்பு!
------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------
தோழர் மதியவன் இரும்பொறைக்கும் எனக்குமான
உரையாடல் பின்வருமாறு அமைந்தது.

நான்: செவல்பட்டிக்கு வழி என்ன தோழர்?
மதியவன்: செவலைக் காளையை விலைக்குத்
தர மாட்டேன் தோழர்.
நான்: செவலைக்காளையை நான் விலைக்குக்
கேட்கவில்லை; செவல்பட்டிக்கு வழி என்ன?
மதியவன்: நீங்க லச்ச ரூவா கொடுத்தாலும் நான்
செவலைக் காளையை விலைக்குத் தரமாட்டேன்.  

இந்த உரையாடலில் இருந்து நான் என்னை
விடுவித்துக் கொள்ள வேண்டும் போலும்.
கலியுகமே முடிந்தாலும் அவர் செவல்பட்டிக்கு
வழி சொல்ல மாட்டார். நிற்க.

அவரது நீண்ண்ண்ண்ட பதிவில் இருந்து அவரின்
உள்ளக்கிடக்கை என்ன, அதாவது அவர்
சொல்ல வருவது என்ன என்பதைப் புரிந்து
கொள்வது உள்ளபடியே ஒரு Herculean task.
(நீண்ண்ண்ண்ண்ட பதிவு என்பதை தட்டச்சுப்
பிழையாகக் கருதிட வேண்டாம்; அதை
ஒற்றளஃபடையாகப் பயன்படுத்தி உள்ளேன்.
அடுத்து Herculean task என்பதை பகீரதப் பிரயத்தனம்
என்று புரிந்து கொள்ளவும்).       

இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்.

கைக்கிளைத் தன்மை வாய்ந்த இந்த உரையாடலின் 
தீவிரத்தில், இந்த விவாதத்தின் கருப்பொருள்
குறித்தே தோழர் மதியவன் மறந்து விட்டார்.
இது தத்துவப்பொருள் சார்ந்த விவாதம்;
அறிவியல் பொருள் சார்ந்த  விவாதம் அல்ல.
(The orientation of the debate is philosophy and not physics).

பொருள்முதல்வாத நோக்கில் பொருளுக்கு (matter)
என்ன வரையறை என்பதே விவாதத்தின்
கருப்பொருள். பொருள் என்பது புறநிலை
யதார்த்தம் என்ற லெனினிய வரையறையுடன்
பொருளுக்கு பௌதிக இருப்பு உண்டு என்ற
வரையறையையும் சேர்க்க வேண்டும் என்பதே
நியூட்டன் அறிவியல் மன்றத்தின் முன்வைப்பு.
பௌதிக இருப்பு என்பதை யாப்புறுத்துவதும்
அதை  நிரூபிப்பதமே எமது ஒற்றைப்பணி.

அறிவியல் என்பது Pure science.
தத்துவம் என்பது Applied science.
ஃபோட்டானுக்கு rest mass உண்டா? பொருட்களின்
rest energy, kinetic energy ஆகியவை எல்லாம்
அறிவியலின் கவலைகள். தத்துவத்தின்
கவலைகள் அல்ல.

எனவே, தத்துவ ரீதியாக பொருளை
வரையறுக்கும்போது, rest mass, kinetic energy போன்ற
விவரங்களை இயற்பியல் கையாளுவது போல,
அதே rigorous mannerல் தத்துவம் கையாளுவதில்லை.
மாறாக, இயற்பியல் கூறும் அனைத்து
விவரங்களின் சாரத்தில் (essence) மட்டுமே தத்துவம்
அக்கறை கொள்கிறது.

நியூட்ரினோ என்னும் துகளின் பூஜ்யமற்ற நிறை
(non zero mass) போன்ற விவரங்களுக்குச் செல்லாமலே
இந்த விவாதத்தைச் சிறப்பாக நடத்த இயலும்.
12ஆம் வகுப்பு இயற்பியல்  புத்தகத்தில் உள்ள
செய்திகளை எல்லாம் இங்கு மீண்டும் கூற
வேண்டிய தேவை இல்லை. இருப்பினும் தனது  
தரப்பிலும் அறிவியல் அடிப்படை உண்டு என்று 
நிரூபிக்கும் முயற்சியே தோழர் மதியவனின்
இந்த exhibitionism என்று புரிந்து கொள்கிறேன்.
      
பொருள் என்றால் அதற்கு நிறை இருந்தே ஆக
வேண்டுமா வேண்டாமா என்பது இயற்பியலின்
அக்கறை. ஒரு dynamical systemஐ ஒரு  phase spaceல்
ஆறு அச்சுகளைக் கொண்டு  சுட்டுவது
இயற்பியலின் வேலை; அதைத் தத்துவம் செய்ய
வேண்டிய தேவை இல்லை.               

இயற்பியலின் நுண்விவரங்களுக்குள்
(minutest details)  புகுந்து கொண்டு  நிறை பற்றியோ
நியூட்ரினோ பற்றியோ தீர்ப்பு வழங்குவது
தத்துவத்தின் வேலை அல்ல. இயற்பியலின்
சாரத்தை கிரகிப்பது மட்டுமே தத்துவத்தின்
வேலை. அந்த வேலையை ஒழுங்காகச் செய்யும்
வரை தத்துவம் .உயிர் வாழும். செய்ய
முடியாதபோது தத்துவம் மண்டையைப்
போட்டு விடும்.

ஆக.  நிறை பற்றித் தீர்ப்பு வழங்குவது தற்போது
இந்த விவாதத்தின் கருப்பொருளுக்குத் .
தேவையற்றது. அது குறித்து இயற்பியல்
ஒரு திட்டவட்டமான முடிவுக்கு வந்த பின்னால்,
அதன் சாரத்தை தத்துவம் கிரகித்துக்
கொள்ளட்டும். Pre matured decisions தேவையில்லை.

ஆக, கூட்டிக் கழித்துப் பார்த்தால்,பொருள்
பற்றிய தத்துவ வரையறையில், பொருளுக்கு
ஒரு பௌதிக இருப்பு உண்டு என்ற அம்சம்
இடம் பெற வேண்டும் என்பதையே நியூட்டன்
அறிவியல் மன்றம் யாப்புறுத்துகிறது.

தத்துவ வரையறையில் நிறை!
----------------------------------------------------
பொருட்கள் அணுக்களால் ஆனவை. அணுக்கள்
துகள்களைக் கொண்டிருக்கின்றன. சுருங்கக்
கூறின், பொருள் என்பது குவார்க்குகள் (quarks)
மற்றும்  லெப்டான்கள் என்னும் துகள்களால்
ஆனவை. இவ்வாறு துகள் இயற்பியல் (particle physics)
கூறுகிறது. (புரோட்டான் என்பது குவார்க்குகளால்
ஆனது. எலக்ட்ரான் என்பது ஒரு லெப்டான் ஆகும்.
இங்கு கூறப்படுவது baryonic matterஐ மட்டுமே.
Dark matterஐப் பற்றி இங்கு கூறவில்லை.
இயற்பியலானது Dark matter விஷயத்தில் இன்னும்
ஒரு முடிவுக்கு வரவில்லை).

இயற்பியலே இன்னும் ஒரு முடிவுக்கு வராத
ஒரு விஷயத்தில், அதாவது dark matterக்கு
நிறை உண்டா என்றோ வேறு பண்புகள்
உண்டா என்றோ இயற்பியலே இன்னும்
முடிவுக்கு வராத ஒரு விஷயத்தில், எல்லாம்
தெரிந்த ஏகாம்பரமாகத் தன்னைக் கருதிக்
கொண்டு நிறையிருப்பு என்றெல்லாம்
ஆர்ப்பரிக்கிற சிறுபிள்ளைத்தனம் நியூட்டன்
அறிவியல் மன்றத்துக்கு இல்லை. அவை ஆகுல நீர.

துகள் கொள்கை பற்றி முந்திய பத்தியில்
பார்த்தோம். அதன் பிறகு, குவாண்டம் புலக்
கொள்கை (quantum field theory) வந்தது.
இக்கொள்கைப்படி எல்லாம் புலங்களே.

Classical field, quantum field ஆகியவையும் பொருட்களே
என்று நாங்கள் கூறுகிறோம். இந்தப் புலங்களை
யாரும் நிறுத்துப் பார்த்து, ஒவ்வொரு
புலத்திற்குமான நிறை இவ்வளவு என்று
இயற்பியலில் எந்த முடிவையும் யாரும்
கூறவில்லை. எனவே பொருள் பற்றிய தத்துவ
வரையறையில் நிறை என்பதை ஒரு அம்சமாகக்
கொள்ள இயலாது.              

தோழர் மதியவனின் கருத்துமுதல்வாதப் பார்வை!
---------------------------------------------------------------------------------------
////1. பருப்பொருள் இலக்கணத்தில் பூதியல் இருப்பை 
மறுக்க முடியுமா என்று கேட்கிறார். முடியும் 
என்கிறோம்/// என்கிறார் தோழர் மதியவன்.

மதியவனின் இக்கூற்று பெரும் அதிர்ச்சியை
அளிக்கிறது. ஏனெனில் இது கருத்துமுதல்வாதப்
பார்வை; பார்வை; பெர்க்லி பாதிரியாரின் பார்வை!

பொருளுக்கு பௌதிக இருப்பு கிடையாது; வெறும்
மானசீக இருப்பு மட்டுமே உண்டு என்பதுதான்
கருத்துமுதல்வாதத்தின் உயிர். தோழர் மதியவன்
பௌதிக இருப்பை மறுக்க முடியும் என்று
அடித்துக்கூறும் போது, அவர் ஆதிசங்கரரின்
வாரிசு ஆகி விடுகிறார்.

மதியவனின் கருத்துமுதல்வாதப் பார்வையை
ஏற்பதற்கில்லை. பொருளுக்கு பௌதிக இருப்பு
உண்டு. இதை உணர்ந்து கொள்ள M.Sc Physics
படிக்க வேண்டியதில்லை. அன்றாட வாழ்க்கையில்
நாம் அல்லும் பகலும் அனுவரதமும் உணர்கிற
விஷயம்தான் இது.

ஒரு நாற்காலியில் ஏன் ஒருவர் மட்டுமே உட்கார
முடிகிறது? இரண்டு அல்லது மூன்று பேர் ஏன்
ஓவர் நாற்காலியில் உட்கார முடிவதில்லை?
காரணம்  இதுதான்.இரண்டு அல்லது மூன்று
பேர் அதிக  இடத்தை அடைப்பார்கள். அவ்வளவு
இடம் அந்த ஒரு நாற்காலியில் கிடையாது.       
நாற்காலிக்கு ஒரு பௌதிக இருப்பு உண்டு.
மனிதர்களுக்கும் ஒரு பௌதிக இருப்பு உண்டு.
இந்த உண்மையை மறுப்பது நம்மை "அலகை"யாக
ஆக்கி விடும்.

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்.    
**************************************************************

மருதுபாண்டியன்   கிருஷ்ணசாமி  தியாகராஜன்  நலங்கிள்ளி


மதியவனின் பதிவைப் படிக்கும்போது ஏன்
இந்தக்குறள் நினைவுக்கு வருகிறது?


பொருள் என்றால் பௌதிக இருப்பு.
கருத்து என்றால் மானசீக இருப்பு.
இதுதான் வரையறை.
கருத்துக்கு பௌதிக இருப்பு கிடையாது.
பொருளுக்கும் பௌதிக இருப்பு கிடையாது
என்றால், பொருளும் கருத்தும் ஒன்றுதான்
என்றாகி விடுகிறது. இதுதான் ஆதிசங்கரரின்
அத்வைதம்.

ஏற்றுத்தானே ஆக வேண்டும்! அது அவர்களின்
கருத்துதானே!
 

அவர்கள் உடனடியாக எந்த மறுப்பையும்
தெரிவிக்கவில்லை. பார்ப்போம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக