பிடித்து வைத்தால் பிள்ளையார்!
வழித்து எறிந்தால் சாணி!
--------------------------------------------------------
திமுகவோடு கூட்டணி வைக்க விரும்பும்
கட்சிகள் மக்கள் செல்வாக்கு ஏதுமற்ற
நிலையில் உள்ளன.
CPI, CPM, மதிமுக, விசிக கட்சிகள்
தேமுதிக மற்றும் வாசனின் புதிய கட்சியான
தமாகாவுடன் சேர்ந்து ஆறு கட்சிக் கூட்டணி
அமைத்து அதற்கு மநகூ என்றும் பெயரிட்டு
தேர்தலைச் சந்தித்தன. பலன் பெரிய பூஜ்யம்.
முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் டெப்பாசிட்
இழந்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றார்.
2014 நாடாளுமன்றத் தேர்தலில், ஜெயலலிதா
CPI, CPM கட்சிகளை கூட்டணியில் சேர்க்கவில்லை.
கம்யூனிஸ்டு காம்ரேடுகள் தனித்துப் போட்டியிட்டு
தலா 0.5 சதம் வாக்குகளைப் பெற்றார்கள்.
பிடித்து வைத்தால் பிள்ளையார்,
வழித்து எறிந்தால் சாணி என்ற நிலையில்தான்
இந்தக் கட்சிகள் இருக்கின்றன. காங்கிரசும்
அப்படித்தான் இருக்கிறது. 2009 நாடாளுமன்றத்
தேர்தலில் கலைஞர் பிடித்து வைத்தார்.
காங்கிரசார் எம்பி .ஆனார்கள். 2014 தேர்தலில்
கலைஞர் வழித்தெறிந்தார்; காங்கிரசார் சாணி
ஆனார்கள். மொத்தமுள்ள 39 தொகுதிகளில்
காங்கிரஸ் 38ல் டெபாசிட் இழந்தது.
ஜெயலலிதாவை எதிர்த்து ஆர் கே நகரில்
கல்வியாளர் வசந்தி தேவியை மநகூ
நிறுத்தியது. ஆறு கட்சிகள் வசந்திதேவியை
ஆதரித்தன. ஆனாலும் வசந்திதேவி வெறும்
5000 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட்
இழந்தார்.
ஆதரித்தது ஆறு கட்சிகள்!
கிடைத்த ஒட்டு= 5000
அதாவது சராசரியாக ஒவ்வொரு கட்சிக்கும்
உள்ள ஒட்டு 800 மட்டுமே.
இந்தக் கட்சிகள்தான் தற்போது ஸ்டாலினிடம்
இரண்டு எம்பி சீட் வேண்டுமென்று கேட்டுக்
கொண்டிருக்கிறார்கள்.
இக்கட்சிகளுக்கு தலா ஒரு சீட்டு தான் என்று
ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். இதுதான்
நிலவரம்.
******************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக