திங்கள், 3 டிசம்பர், 2018

திரு ஈஸ்வரனே, ஏ எம் கே நினைவேந்தல்
கூட்டத்தை அவமதிக்க வேண்டாம்!
------------------------------------------------------------------------
திரு ஈஸ்வரன் அவர்களுக்கு,
தோழர் ஏ எம் கே மறைந்த செய்தியைக்
கேள்வியுற்றதுமே தொழிற்சங்க சார்பில்
பல்வேறு அலுவலகங்களில் அஞ்சலிக்கூட்டம்
நடைபெற்றது. அப்படி ஒரு கூட்டத்தில்
அழைப்பை ஏற்று நான் பங்கேற்றேன்.
வாயில் கூட்டமாகவோ அல்லது அலுவலகத்துள்
அறைக்கூட்டமாகவோ அஞ்சலி நிகழ்வுகள்
நடைபெற்றன.

நான் காட்பாடி சென்று சென்னை திரும்பிய மறுநாளில்
சில தொழிற்சங்கங்கள் நடத்திய ஏ எம் கே  நினைவேந்தல்
வாயில் கூட்டத்தில் பங்கேற்றேன். இத்தகைய
கூட்டங்களை தொழிலாளர்கள் தங்கள் தலைவரின்
மறைவுச் செய்தியைக் கேள்வியுற்ற உடனேயே
நடத்தினார்கள். இந்தக் கூட்டங்கள் பற்றி எல்லாம் எனக்கே முழுமையாகத் தெரியாது.அதே போல போல்ஷ்விக் கட்சித்
தோழர்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஈஸ்வரன் அவர்களே, நீங்கள் தோழர் ஏ எம் கே
அவர்களைப் பார்த்ததே கிடையாது. அவர் எப்படி
இருப்பார் என்று கூட உங்களுக்குத் தெரியாது.
ஏ எம் கே அவர்கள் மறைந்த பிறகுதான் அவருடைய
புகைப்படத்தை நாங்கள் எல்லோரும் வெளியிட்டோம்.
எங்களின் தொழிற்சங்க, அரசியல், தத்துவ
ஆசான் ஏ எம் கேயின் மறைவுக்கு தொழிலாளர்களாகிய
நாங்கள் அஞ்சலி செலுத்துவதில் உங்களின்
முகத்தில் ஏன் சுருக்கம் விழுகிறது?

ஏ எம் கே அபிமானிகளுக்குள் சிண்டு முடியலாமா
என்று முயற்சி செய்யும் கியூ பிராஞ்சு வேலையை
எங்களிடம் காட்ட வேண்டாம்.  உங்களைப் போன்ற
அந்நிய வர்க்க ஆசாமிகளை எப்படி நடத்துவது
என்று .ஏ எம் கேயின் தொண்டர்களாகிய
எங்களுக்குத் தெரியும்.

காட்பாடியில் கண்ணியம் காத்தார்கள்; கண்டன
முழக்கத்தோடு நிறுத்திக் கொண்டார்கள். சென்னைப்
பாட்டாளி வர்க்கமாகிய நாங்கள் அப்படியல்ல.
தூக்கிப் பிடித்தால் கொடியுண்டு
மடக்கிப் பிடித்தால் தடியுண்டு
என்பதுதான் எங்களின் நடைமுறை.

எனவே  ஈஸ்வரன் அவர்களே, சிண்டு முடியும்
கியூ பிராஞ்சு வேலையை இங்கு காட்ட வேண்டாம்.
இன்னமும் annihilationல் நம்பிக்கை உள்ளவன் நான்.

ஏ எம் கே என்ற நாமத்தை உச்சரிக்கக் கூட அருகதை
அற்ற நீங்கள், ஏ எம் கே நினைவேந்தல் கூட்டத்தை
அவமதிப்பதை அனுமதிக்க முடியாது; சகிக்க
முடியாது.


ஆண்டிக்கு ஏன் அம்பாரம்  கணக்கு? இதற்கெல்லாம்
பதில் சொல்ல வேண்டிய அவசியம் .எங்களுக்கில்லை.
பேச்சை நிறுத்தவும்.



கூட்டத்தில் பேசியவர்கள் ஏ எம் கே அவர்களோடு
இயக்க ரீதியாகச் செயல்பட்டவர்கள்தான்.
யாரும் குடும்ப உறுப்பினர்களோ சொந்தக்காரர்களோ
கிடையாது. எனவே பொய்மூட்டையை அவிழ்க்க
வேண்டாம். ஏ எம் கே என்ற நாமத்தை உச்சரிக்கக்கூட
அருகதை இல்லாத ஈஸ்வரனே, நீ எப்படி தொழிலாளி
வர்க்கம் ஆவாய்? உன் குட்டி முதலாளித்துவ
அற்பத்தனத்தை தயவு செய்த் நிறுத்தவும்.
ஏ எம் கே நினைவேந்தல் கூட்டத்தை  அவமரியாதை
செய்வதும் அவதூறு பேசுவதும்  தண்டனைக்குரிய
குற்றங்கள் ஆகும்.

அமைப்பு சார்ந்த பல தோழர்கள் .கூட்டத்திற்க்கு
வந்திருந்தனர். அவர்களைப்  பேச அழைத்தபோது,
"மற்றவர்களைப் பேச வையுங்கள் இளங்கோ,
அதுதான் சிறப்பு" என்று என்னிடம் கூறினர்.
எனவே எதையும் தெரியாமல், தெரிந்து கொள்ளாமல்
உளற  வேண்டாம். உம்முடன் வாதம் செய்வது
எனக்கு இழுக்கு. எனவே இதற்கு மேலும் உளறினால்
தக்க பாடம் கற்பிக்கப்படும்.    

---------------------------------------------------------------------------------------
கட்சியும் குடும்பமும்!
தோழர் ஏ எம் கே வழிகாட்டுதல்!
-----------------------------------------------------------
கட்சி என்பது வேறொன்றும் அல்ல;  அது என்
குடும்பம்தான் என்று கருதி கட்சியைத் தன்
குடும்பச் சொத்தாக ஆக்கிக்  கொண்ட  பல அரசியல்
கட்சித் தலைவர்களை நாம் அறிவோம்.

இதற்கு முற்றிலும் மாறானவர் தோழர் ஏ எம் கே.
தனது  குடும்ப நலன் உள்ளிட்ட அனைத்தையும்
கட்சியின் நலனுக்குக் கீழ்ப்படுத்தினார்.

தமது சொந்த மகளின் திருமணத்திற்குக் கூட
அவர் செல்லவில்லை. கட்சித் தோழர்கள்
திருமணத்திற்குச் செல்ல விரும்பியபோது
அவர்களையம் செல்ல வேண்டாம் என்று
தடுத்தார் ஏ எம் கே.

ஏ எம் கே அவர்கள் தடுத்ததையும் மீறி, அன்று
கோவை ஈஸ்வரன் போன்ற சில தலைவர்கள்
ஏ எம் கே அவர்களின் மகள்  திருமணத்திற்குச்
சென்றனர்.

தமது கட்சித் தோழர்களையே தமது குடும்பமாகக்
கருதி வாழ்ந்தவர் தோழர் ஏ எம் கே. இப்படி ஒரு
தலைவரை இனி காண்பதற்கில்லை!

(நியூட்டன் அறிவியல் மன்றம் நடத்திய
ஏ எம் கே நினைவேந்தல் கூட்டத்தில்
தோழர் பி இளங்கோ பேசியது)
*********************************************  
மருதுபாண்டியன் திருப்பூர் குணா ஞானம்

தோழர் அப்பு ஒரு சி ஐ ஏ ஏஜென்ட் என்று
எழுதிய தீக்கதிருக்கு பாடம் கற்பித்த ஏ எம் கே !
----------------------------------------------------------------------------------
நக்சல்பாரி இயக்கத்தை தமிழ்நாட்டில் நிறுவிய
மூவரில் ஒருவர் தோழர் எல் அப்பு. அன்று 1960களின்
இறுதியில் தீக்கதிர் ஏட்டின் அலுவலகம்
சென்னையில்தான் இருந்தது. (தற்போது மதுரையில்
உள்ளது).

அன்று தீக்கதிரில் நக்சல்பாரித் தலைவர் தோழர்
அப்புவை அவதூறு செய்யும் நோக்கில் "அப்பு ஒரு
சி ஐ ஏ ஏஜென்ட்" என்று தீக்கதிர் எழுதியது.

தீக்கதிரின் பொய்ச்செய்தியைப் படித்த
தோழர் ஏ எம் கே கடுங்கோபம் கொண்டார்.
உடனடியாக தொழிலாளர் தோழர்கள் பலரையும்
திரட்டி தீக்கதிர் அலுவலகத்தை முற்றுகையிட்டு
கண்டன முழக்கங்களை எழுப்பினார்.

இச்செய்தி காட்டுத் தீயாகப் பரவி, மென்மேலும்
தொழிலாளர்கள் தீக்கதிரைக் கண்டனம்
செய்தனர். பலர் மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்தும்
மார்க்சிஸ்ட் தொழிற்சங்கத்திலும் இருந்தும்
விலகினர். இதன் விளைவாக தீக்கதிர்
பத்திரிகையின் சர்க்குலேஷன் குறைந்தது.
தொழிலாளர் மத்தியில் தீக்கதிர் கண்டனத்துக்கு
இலக்கானது. இனி தீக்கதிரை சென்னையில் இருந்து
நடத்த முடியாது என்ற நிலை ஏற்பட்டது.

தீக்கதிர் மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இதுதான் தீக்கதிர் ஏட்டின் தலைமை அலுவலகம்
மதுரை சென்ற கதை. இதை தோழர் ஏ எம் கே
சாதித்துக் காட்டினார். இவ்வாறு நக்சல்பாரி
இயக்கமானது திரிபுவாதத்தை முறியடிப்பதில்
வெற்றி கண்டது.

(நியூட்டன் அறிவியல் மன்றம் நடத்திய
தோழர் ஏ எம் கே நினைவேந்தல் கூட்டத்தில்
தோழர் டி எஸ் எஸ் மணி பேசியதில் இருந்து)
*************************************************      

மருதுபாண்டியன் திருப்பூர் குணா

ஞானி நாகராஜன் ஆகிய இருவரும் பண்பாட்டுத்
துறைக்கு அதிக அழுத்தம் தரும்  கிராம்சியக்
கோட்பாட்டை முன்வைப்பவர்கள்.
ஞானி நாகராஜன் இருவருக்கும் மறுப்பு என்ற
தலைப்பில் இதுவரை 10 கட்டுரைகள்
எழுதி அவர்களின் மார்க்சியத்தின் மீதான
எதிர்நிலையை நியூட்டன் அறிவியல் மன்றம்
அம்பலப் படுத்தி உள்ளது.கணிசமான முகநூல்
வாசகர்கள் அக்கட்டுரைகளைப் படித்துள்ளார்.
எனவே எதுவும் தெரியாமல், அறியாமை காரணமாக
கண்டதையும் கூறக்கூடாது. இது அகநிலைக்கு
மட்டுமே முக்கியத்துவம் தந்து, புறவய மதிப்பீட்டை 
புறக்கணிக்கும் கருத்துமுதல்வாதப் .பார்வை ஆகும்.
இது மார்க்சியத்துக்கு எதிரானது.

கடந்த 30 ஆண்டுகளாக டெலிகாம் தொழிற்சங்க
அரங்கில் தோழர் ஏ எம் கேயின் போதனைகளை
நடைமுறைப்படுத்தியவன் நான். எனவே புறவயமாக
மதிப்பிடாமல் அகநிலைக் கசடுகளை வெளிப்படுத்தக்
கூடாது.
  

 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக