மனம், கருத்து,சிந்தனை, மன உணர்வு ஆகியவை
அனைத்தும் பற்றி ஆழமாகவும் தீவிரமாகவும்
விவாதிக்கலாம்; விவாதிக்க வேண்டும். ஆனால்
அது degree course பாடம். அதற்கு முன்பு plus two
பாடங்களை .முடித்து விடலாம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, " சிந்தனையும்
பொருளாக இருக்கக் கூடுமோ?"என்று ஒரு
கட்டுரை எழுதினேன். டெக்மார்க் என்ற அமெரிக்க
இயற்பியலாளரின் ஆராய்ச்சி பற்றிய கட்டுரை
அது. மனதில் எழும் சிந்தனை ஒரு பொருளாக
இருக்கும் பட்சத்தில் அதற்கு "பெர்செப்ட்ரோனியம்"
(PERCEPTRONIUM) என்று பெயரிட்டார் டெக்மார்க்.
அது குறித்த செய்திக் கட்டுரையை இத்துடன்
இணைத்துள்ளேன். படிக்கவும்.
இந்த விவாதத்தில் முதல் முறையாக கோட்பாட்டு
ரீதியிலான ஒரு கேள்வியை, சிறந்த கேள்வியை,
கிடுக்கிப்பிடி போடும் கேள்வியை எதிர்கொள்கிறேன்.
எனவே சற்று நேரத்தில் விடையளிக்கிறேன்.
--------------------------------------------------------------------------------------------
ஒரு சமூகத்தின் பொருள் உற்பத்தி முற்றிலும்
புறவயமான ஒரு மெய்ம்மை. ஆலை. கருவிகள்,
சாதனங்கள், இடுபொருட்கள், உழைப்போர்,
இறுதியில் வெளிவரும் சரக்கு (finished goods)
ஆகிய அனைத்துமே பௌதிக இருப்பை
உடையவை. எனவே பொருள் உற்பத்தியானது
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை
புறவயமான மெய்ம்மையாக யாக உள்ளது;
பௌதிக இருப்பைக் கொண்டுள்ளது.
அதே நேரத்தில், இந்தப் பொருளுற்பத்தி பற்றிய
கோட்பாடுகள் மனித சிந்தனையே ஆகும்.
உற்பத்தி உறவுகள் என்னும் கருத்தாக்கம்
அல்லது உற்பத்தி உறவுகளைப் பற்றிய
சித்தாந்தம் (அல்லது தத்துவம்) என்பது
எந்தவொரு சித்தாந்தத்தையும் போல
கருத்தே. இது பொருளாகாது. எனவே
இதற்கு பௌதிக இருப்பு கிடையாது.
எந்தவொரு தத்துவமும் கருத்தாக்கமும்
கொள்கை கோட்பாடும் புறஉலகைப் பற்றிய
பொருளைப் பற்றிய கருத்துக்களே. அவை
பொருளாகா. அவற்றுக்கு பௌதிக இருப்பு
இல்லை. மானசீக இருப்பு மட்டுமே உண்டு.
வெளிகாலத்தில் (space time) அவற்றைச் சுட்ட
இயலாது; வெளிகாலத்தில் அவை உணரப்படாது.
ஒரே ஒரு மின்னேற்றத்தை (unit electric charge)
வெளிகாலத்தில் (space time) ஓர் இடத்தில்
வைத்தால், அந்த ஒற்றை chargeஐச் சுற்றி
ஒரு மின்புலம் (electric field) உண்டாகிறது.
இந்த மின்புலத்தை வெளிகாலத்தில்
உணர முடியும். இதை அளவிட முடியும்
(quantifiale and measurable). ஏனெனில் இந்தப் புலத்திற்கு
பௌதிக இருப்பு உண்டு. ஆனால் ஒரு
கருத்தை கோட்பாட்டை தத்துவத்தை
வெளிகாலத்தில் உணர இயலாது. ஏனெனில்
அவற்றுக்கு பௌதிக இருப்பு கிடையாது.
தத்துவம் மக்களைப் பற்றிக் கொண்டால் அது
ஒரு பௌதிக சக்தியாகி விடும் என்கிறார் மார்க்ஸ்.
19ஆம் நூற்றாண்டின் பொருள்முதல்வாதப்
பார்வை அது. மார்க்ஸ் காலத்தில் (1818-1883)
பொருள் குறித்த, இன்று நாம் அறிந்துள்ள
இயற்பியல் முடிவுகள் எவையும் வெளியாகவில்லை.
மார்க்ஸ் காலத்தில் அரிஸ்ட்டாட்டில் கூறிய
பொருள் பற்றிய இலக்கணமே (four elements theory)
அறிவியல் உலகில் நிலவியது.
வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தைத் துளியும்
மறுக்கவில்லை. பொருள் பற்றிய வரையறையில்
காலத்துக்கேற்ற ஒரு சேர்க்கை சேர்க்கப்பட
வேண்டும் என்பதே இங்கு நான் வலியுறுத்துவது.
Material basis பற்றித் தாங்கள் பேசுகிறீர்கள்.
நான் physical presence பற்றிப் பேசுகிறேன்.இரண்டுக்கும்
பாரதூரமான வேற்றுமை உள்ளது. என்னுடைய
தரப்பை நான் போதிய அளவுக்கு விளக்கவில்லை
என்று எண்ணுகிறேன்.
Physical presence இல்லை என்று கூறுவது வரலாற்றுப்
பொருள்முதல்வாதத்தை மறுப்பதாகாது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக