செவ்வாய், 18 டிசம்பர், 2018

பொருண்மை என்பது பொருள் திணிவு
(பொருட்டிணிவு) என்ற பொருளில், அதாவது
நிறை உடைய பொருள் (object with mass) என்ற
அர்த்தத்தில் அறிவியல் பாடப் புத்தகங்களில்
ஆளப் படுகிறது. எனவே பொருண்மை என்பது
நிறை உடைய பௌதிக இருப்பு உடைய
பொருளைக் குறிக்கும் சொல்லாகும். இதுவே
பெருவழக்காக .இருக்கிறது.

material basis என்பதன் மொழிபெயர்ப்பாக
பொருண்மை என்ற சொல் குழப்பத்தைத் தருகிறது.
பொருண்மை என்றால் பௌதிக இருப்பு உடைய
தன்மையைக் குறிக்கும். அதை material base என்பதற்குப் பயன்படுத்துவது
சரியல்ல என்று கருதுகிறேன்     
மார்க்சியத்தில் அனைவருக்கும் புரியக்கூடியதும்
பெருவழக்காக இருப்பதுமான  சொற்களையே
பயன்படுத்த வேண்டும். தமிழ் மொழி
பேசுவோரிடையில் தனித்தமிழைப் பேசுவோர்
மொழிச் சிறுபான்மையினராக உள்ளனர்.
தொடர்புறுத்த வல்லதான சொற்களையே
மார்க்சியர்கள் பிரயோகிக்க வேண்டும் என்று
நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக