எந்த ஒன்றையும் ஆழமாகப் பரிசீலிக்காமல்,
வெகுமக்கள் நடுவில் எது பேசப் படுகிறதோ,
அதை ஆதரித்து தமது கருத்தை உதிர்ப்பவர்
மறைந்த திரு ஞானி. அவர் விஞ்ஞானி அல்ல;
அறிவியல் கற்றவரும் அல்ல.
டெலிகாம் துறையின் ITS அதிகாரிகள் சங்கம்
டெலிகாம் துறையைச் சாராத சில நிபுணர்களிடம்
இது குறித்து ஆய்வு செய்து முடிவு கூறுமாறு
கேட்டுக் கொண்டது. இது நடந்தது சில
ஆண்டுகளுக்கு முன்பு. அக்குழுவானது
செல்போன் கோபுரங்களால் எவ்விதப்
பாதிப்பும் இல்லை என்று அறிக்கை அளித்தது.
இவ்வளவு காலத்தில் குருவிகள் கதிர்வீச்சால்
இறந்து போயின என்றால், மனிதர்கள் உள்ளிட்ட
பிற உயிரினங்களும் இறந்து போயிருக்க
வேண்டும். அப்படி எதுவும் இல்லை என்பதை
அனைவரும் அறிவர்.
Non ionising radiation பாதிப்பை ஏற்படுத்தாது.
மருதுபாண்டியன் இரா
இந்தியாவில் செல்போன் தொழில்நுட்பம்
1995ல்தான் நடைமுறைக்கு வந்தது. ஐரோப்பா
அமெரிக்காவில் செல்போன் தொழில்நுட்பம்
முன்னதாகவே வந்து விட்டது. ஆரம்பத்தில்
ஐரோப்பா அமெரிக்காவில் கதிர்வீச்சு
முறைப்படுத்தப் படாமல் இருந்தது. அதன்
பாதகங்கள் கண்டறியப்பட்டு உடனடியாகக்
களையப்பட்டன.
இந்தியா தாமதமாக இந்த தொழில் நுட்பத்துக்கு
வந்ததால், அமெரிக்காவும் ஐரோப்பாவும்
சந்தித்த கதிர்வீச்சு குறித்த சிக்கல்கள்
நமக்கு ஏற்படவில்லை. இன்னும் சொல்லப் போனால்,
அமெரிக்க ஐரோப்பாவை விட கடுமையான
சட்டம் இந்தியாவில் உள்ளது. நமது செல்போன்
கோபுரங்கள் வெளியிடும் கதிர்வீச்சு மிகவும்
ஆற்றல் குறைந்த கதிர்வீச்சாக உள்ளது.
சட்டத்தால் அவ்வாறு முறைப்படுத்தப் பட்டுள்ளது.
செல்போன் கோபுரங்களை விட, செல்போன்கள்
அதிக அளவு கதிர்வீச்சை வெளியிடுவன. இதை
முறைப்படுத்த SAR (Specific Asorption Rate) அளவை
இந்திய அரசு வெளியிட்டு உள்ளது. உங்களின்
செல்போனில் SAR அனுமதிக்கப்பட்ட அளவை
விட அதிகமாக இருந்தால், அந்த சொல்போனைத்
தூர எறியவும்.
USSD CODEஐ உங்கள் செல் போனில் இருந்து
டயல் செய்யவும். அதாவது STAR HASH 07 HASH
என்பதை இடைவெளி இல்லாமல் டயல் செய்க.
Now dial and check. 1.6 watt per kg என்பதுதான் பாதுகாப்பான
அளவு.
ஒவ்வொரு செல்போனும் கொண்டுள்ள
SAR rateஐ விற்கும்போதே
வாடிக்கையாளருக்குச் சொல்ல வேண்டும்
என்று சட்டம் உள்ளது. 1.6 watt per kg என்பதை விட
அதிகமாக இருந்தால், அந்த செல்போன் தீங்கு
விளைவிக்கும்.
நீங்கள் காட்டிய SAR அளவு மிகவும் பாதுகாப்பானதே.
1.6 watt per kg என்பதை விடக் குறைவாகத்தான்
இருக்கிறது. தலைக்கு வேறு அளவு; உடலுக்கு
வேறு அளவு. உலகம் முழுவதும் எந்த நாடாக
இருந்தாலும் 1.6 watt per kg என்ற அளவு பொருந்தும்.
ஐநாவின் உறுப்பு அமைப்பான ITU இதை முடிவு
செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக