ஐ ஏ எஸ் அதிகாரியும் அமைச்சரும் சேர்ந்து
முறியடித்த வேலைநிறுத்தம்!
----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------
அருணா சுந்தரராஜன்! இந்த அம்மையார்
மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையின்
செயலாளராக (Secretary Telecom) இருக்கிறார்.
தொலைத்தொடர்பு ஆணையத்தின் தலைவரும்
இவரே (Chairman Telecom Commission).
இவர் ஒரு ஐஏஎஸ் அதிகாரி. இவரது படிப்பு என்ன?
இவர் தத்துவத்தில் எம் ஏ (MA Philosophy) படித்துள்ளார்.
இவர் அறிவியல் பட்டதாரியோ அல்லது பொறியியல்
பட்டதாரியோ அல்ல.
தொலைத்தொடர்புத்துறை முற்றிலும் அறிவியல்
தொழில்நுட்பத் துறை ஆகும். எனவே அறிவியலும்
தொழில்நுட்பமும் கற்றவர்களே இத்துறையை
நிர்வகிக்க இயலும்.
ஆனால் இவரோ கலைப்பிரிவு பாடமான தத்துவத்தில்
எம் ஏ படித்தவர். கருத்துமுதல்வாதத்தின் சிறப்பு
பற்றியோ அத்வைதத்தின் மேன்மை பற்றியோ
இவர் கற்றிருக்கிறார். இவர் கற்ற கல்வி இவர்
நிர்வகிக்கும் அறிவியல் தொழில்நுட்பத் துறையோடு
ஸ்நானப் .பிராப்தி அற்றது.
இந்தியா நிலவுடைமைச் சமூக அமைப்பாக இன்னமும்
நீடிக்கிறது என்பதற்கு இது நல்ல உதாரணம்.
சாம் பித்ரோடா போன்ற தொழில்நுட்ப அறிஞர்கள்
நிர்வகித்த தொலைத்தொடர்புத் துறையை
இவரைப் போன்ற Arts Group ஆட்கள் நிர்வகிப்பது
கேலிக்கூத்து.
சரி, தொலைத்தொடர்புத் துரையின் அமைச்சர்
யார் தெரியுமா? மனோஜ் சின்ஹா! இவர் உபி
மாநிலத்தவர். தொலைத்தொடர்புத் துறையின்
தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்
(State Minister with independent charge).
பிரமோத் மகாஜன், தயாநிதி மாறன், ஆ ராசா,
கபில் சிபல், ரவிசங்கர் பிரசாத் ஆகியோர்
தொலைத்தொடர்புத்துறையில் காபினெட்
அமைச்சர்களாக இருந்தனர். ஆனால் மோடி
இத்துறைக்கு தனிப்பொறுப்புடன் கூடிய
இணையமைச்சர் போதும் என்று தீர்மானித்து
மனோஜ் சின்ஹாவை அமைச்சராக்கி உள்ளார்.
சரி, அமைச்சர் மனோஜ் சின்ஹா என்ன
படித்திருக்கிறார்? இதற்குக் கிடைக்கிற விடை
நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
ஆம், அமைச்சர் எம் டெக் (M.Tech) படித்துள்ளார்.
பொதுவாக அதிகாரி அதிகம் படித்தவராகவும்
அமைச்சர் தற்குறியாகவும் இருப்பது இந்திய
மரபு. இதற்குச் சிறந்த உதாரணம் நம்மூர் மு க
அழகிரி. மனிதகுல வரலாறு கண்டும் கேட்டும்
இராத தற்குறியான மு க அழகிரி மத்திய
அரசின் ரசாயனம் மற்றும் உரத்துறை
அமைச்சராக இருந்து தமிழ்நாட்டுக்கு நீங்காத
பெருமை சேர்த்தார்.
ஆனால் இந்திய மரபை மீறி, Arts Groupல் டிகிரி
வாங்கிய தற்குறி அதிகாரியையும், எம் டெக்
படித்த அமைச்சரையும் தொலைத்தொடர்புத்
துறை கொண்டிருக்கிறது. இது ஒரு விசித்திரமே.
இதைப்படிக்கும் வாசகர்கள் ஐ ஏ எஸ் அதிகாரியை
எப்படித் தற்குறி என்று கூறலாம் என்று
கொதித்தெழலாம். அறிவியல் தொழில்நுட்பத்
துறையைப் பொறுத்தமட்டில், ஐ ஏ எஸ் அதிகாரிகள்
தற்குறிகளே.
அமைச்சர் மனோஜ் சின்ஹா உபி மாநிலத்தவர்.
உபி போன்ற பின்தங்கிய feudal மாநிலத்தில் இருந்து
கூட, ஒரு எம் டெக் படித்தவர் எம்பி ஆக முடிகிறது.
ஆனால் நம் தமிழ்நாட்டில் இது சாத்தியமா?
வாய்ப்பே இல்லை. தமிழ்நாடு திராவிடத்
தற்குறிகளுக்கு பட்ட போட்டுக் கொடுக்கப்
பட்ட இடம்.
சரி, இப்போது ஏன் தொலைதொடர்புத் துறையின்
அமைச்சரைப் பற்றியும் துறைச்செயலாளரைப்
பற்றியும் எழுத வேண்டும்? காரணம் இருக்கிறது.
கடந்த டிசம்பர் 3 அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தம்
நடத்த அறைகூவல் விடுத்திருந்தன டெலிகாம்
தொழிற்சங்கங்கள். அந்த வேலைநிறுத்தம்
நடைபெறவில்லை. தொழிற்சங்கங்கள் வாபஸ்
பெற்று விட்டன.
வேலைநிறுத்தம் நடைபெறாதபடி அதை
முறியடித்தவர்கள் இக்கட்டுரையில் காணும்
அமைச்சரும் துறைச்செயலாளரும். எனவே
இவர்களை அறிந்து கொள்ள வேண்டிய தேவை
இருக்கிறது.
இந்த நாட்டில் ஒரு புதிய ஜனநாயகப் புரட்சி
நடந்து முடிந்தால் ஐ ஏ எஸ் கழுதைகளை
அறிவியல் மாளிகைகளில் இருந்து விரட்டி
அடிக்கலாம். அதுவரை அவை அங்கு மேய்ந்து
கொண்டுதான் இருக்கும்.
*****************************************************
மொழி தொடர்ந்து இயங்கிக்
கொண்டிருக்கிறது.இயக்கத்தின் போக்கில்
மாறிக் கொண்டும் இருக்கிறது. சொல்லும்
பொருளும் மாறிக்கொண்டே இருக்கின்றன.
இந்த மாற்றம் இடையறாது நிகழ்கிறது.
"பொன்மலர் நாற்றம் உடைத்து" என்ற
பழமொழியில் நாற்றம் என்பது நறுமணம்
என்ற பொருளைக் கொண்டது.
நாற்றத் துழாய்முடி நாராயணன் என்கிறாள்
ஆண்டாள். நாற்றத் துழாய் ஏற்பது நறுமணமிக்க
துளசி என்று பொருள்பட்டது. இன்று நாற்றம்
என்ற சொல்லின் பொருள் மாறி விட்டது.
முற்றிலும் எதிரான பொருளைத் தருகிறது.
இன்று நாற்றம் என்றால் கெட்ட நாற்றம்
என்றே பொருள்.
வரலாற்றுச் சக்கரத்தைப் பின்னோக்கி இழுக்க
இயலாது. இன்று நாற்றம் என்ற சொல்லை
நறுமணம் என்ற பொருளில் ஆள இயலாது.
அப்படி ஆள முயலுதல் இயற்கைக்கும்
மொழியின் இயல்புக்கும் எதிரானதாக ஆகிவிடும்.
இதைப் போன்றதே நிவாரணம் என்ற சொல்லும்.
mitigation என்ற சொல்லுக்கு நிகராகவும்
relief என்ற சொல்லுக்கு நிகராகவும்
நிவாரணம் என்ற சொல் பொருள்படுகிறது.
இவ்வாறு பொருள்படுத்தல் பெருவழக்காகவும்
ஆகி விட்டது. பெருவழக்கை ஏன் மாற்ற
முயல வேண்டும்?
"வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்"
என்கிறார் தொல்காப்பியர். செய்யுளை விட
வழக்குக்கே அதிக முக்கியம் அளிக்கிறார்.
தொல்காப்பியர் நெறியை நாம் ஏன்
புறக்கணிக்க வேண்டும்.
எனவே தற்போது உள்ளது போல, நிவாரணம்
என்ற சொல் relief, mitigation ஆகிய ஆங்கிலச்
சொற்களுக்கு நிகரான சொல்லாக இருக்கும்
நிலை நீடிக்கட்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக