புதன், 5 டிசம்பர், 2018

மருதுபாண்டியன்

கிருஷ்ணசாமி தியாகராஜன்  KI NATARAASAN  கி நடராசன்


இந்தியப் புரட்சிக்கும் மார்க்சிய லெனினியத்திற்கும்
தோழர் ஏ எம் கே அவர்களின் பங்களிப்பு மகத்தானது.
அவரின் தத்துவ அரசியல் நிலைபாடுகளை
வைத்துத்தான் அவரை மதிப்பிட வேண்டும்.
அமைப்பு சார்ந்த சிக்கல்களைக் கொண்டு
மதிப்பிடுவது புறவய மதிப்பீட்டைத் தவிர்ப்பதாகும்.
அது மார்க்சிய அணுகுமுறை அல்ல.

மார்க்ஸ் எங்கல்ஸ் வாழ்நாளில் அவர்கள் கூறிய
எந்தப் புரட்சியும் நடைபெறவில்லை. 1917ல்
புரட்சி நடைபெறும் வரை, மார்க்ஸ் வர்ணித்த
புரட்சி எதுவும் நடைபெறவில்லை. இதை வைத்துக்
கொண்டு மார்க்ஸ் ஏங்கல்ஸை மதிப்பிடுவது
தவறாகும். அதைப்போன்றே அமைப்புக்
காரணிகளைக்  கொண்டு ஏ எம் கே அவர்களை
மதிப்பிடுவதும் தவறாக முடியும்.

வரும் ஞாயிறன்று. "இந்தியப் புரட்சிக்கும்
மார்க்சிய லெனினியத்திற்கும் ஏ எம் கே அவர்களின்
மகத்தான பங்களிப்பு" என்ற தலைப்பில்
உரையாற்றுகிறேன். அருள் கூர்ந்து தோழர்
நடராசன் அவர்கள் அக்கூட்டத்திற்கு வந்து,
அங்கு தமது கேள்விகளை எழுப்புமாறு அன்புடன்
வேண்டுகிறேன்.
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக