வெள்ளி, 28 டிசம்பர், 2018

தமிழகத்தில் மலர்ந்த தாமரை!
-----------------------------------------------------
பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளை
வெளிமாநிலத்திலும் பரப்ப துர்கா ஸ்டாலின் முடிவு!
அவ்வாறு உ.பி  மாநிலத்தில் உள்ள வாரணாசி
எனப்படும் காசியில் பகுத்தறிவுக்
கொள்கைகளைப்  பரப்பிய காட்சியும்
அதன் மாட்சியும்!
===========================================
காசியில் வழிபாடு செய்ய வருகை தரும்
துர்கா ஸ்டாலின் அம்மையாருக்கு சகல
வசதிகளும் செய்து தரும்படி அதிகாரிகளுக்கு
உபி  முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு! 

தாமரை தமிழகத்தில் கலைஞர் இல்லத்திலும்
(ஆலிவர் ரோடு) துர்கா அம்மையார் வசிக்கும்
இல்லத்திலும் மலர்ந்து விட்டது.   
------------------------------------------
போலிப் பகுத்தறிவுக் கயமையை
அம்பலப் படுத்துவோம்!
போலிப்பகுத்தறிவு = தாமரை மலர்வது!
-------------------------------------------------------------------
இதெல்லாம் அப்பட்டமான பொய். மார்க்சிஸ்ட்
கட்சிக்கும் நக்சல்பாரிக் கட்சியான லிபரேஷனுக்கும்
உள்ள வேறுபாடு பற்றியெல்லாம் கொளத்தூர்
மணிக்குத்  தெரியாது. விரிவான கட்டுரையை
ஏற்கனவே சில ஆண்டுக்கு முன்பு எழுதியுள்ளேன்.


காசியில் துர்கா!
யோகி ஆதித்தயநாத் உத்தரவு!
--------------------------------------------------------
துர்கா ஸ்டாலின் அம்மையார் காசிக்குச்
சென்று, இறந்து போன தம் குடும்பத்து
மூத்தோர்க்கு தர்ம சாஸ்திரம் கூறுகிற
சடங்குகளைச் செய்யச் சென்றுள்ளார்.

கலைஞரின் மரணத்தை அடுத்து, கலைஞருக்குச்
செய்ய வேண்டிய ஈமக்கடன் சடங்குகளைச்
செய்யவே துர்கா அம்மையார் காசி சென்றார்.

இவரது காசி வருகை பற்றி அறிந்த உ.பி முதல்வர்
யோகி ஆதித்யநாத் அவர்கள், துர்கா ஸ்டாலின்
அம்மையாருக்கும், அவரின் குழுவினருக்கும்
தேவையான வசதிகளைச் செய்து தருமாறு
அதிகாரிகளுக்கு உத்தரவு .பிறப்பித்தார்.

ஆங்கிலமோ இந்தியோ தெரியாத துர்கா
ஸ்டாலின் அம்மையாருக்கு உதவ, தமிழ் தெரிந்த
ஒரு இளம் ஐ ஏ எஸ் அதிகாரியை நியமித்தார் 
யோகி ஆதித்யநாத்.

யோகி ஆதித்ய நாத் ஜிந்தாபாத்!
ஆன்மிகம் வாழ்க!
போலிப் பகுத்தறிவு ஓங்குக!
*******************************************

சரியான விடையும் விளக்கமும்!
-------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------
1) கணக்கில் நேரம் கேட்கப் படுகிறது.
நேரம் என்பது வேகம் மற்றும் தூரம் ஆகிய
இரண்டுடன் தொடர்பு உடையது.

2) தூரம் வேகம் நேரம் ஆகிய மூன்றையும்
 இணைக்கும் ஒரு சூத்திரம் உள்ளது.
தூரம் = வேகம் x நேரம்.
நேரம் = தூரம் divided by வேகம்,

3) கணக்கின்படி, தூரம் = 591 கோடி கிமீ
வேகம் (ஒளியின் வேகம்) = 300,000 கிமீ/நொடி
எனவே நேரம் = 5,910,000,000 divided by 300,000 நொடி
( கவனிக்கவும்: விடை "நொடி"யில் கிடைக்கும்)

4) வகுத்தால், 19700 நொடி வரும். இதை 60ஆல்
வகுத்தால் நிமிடம் கிடைக்கும். 

19700 நொடி= 19700 divided by 60 = 328.33333 நிமிடம்
= 328 நிமிடம். 328 நிமிடம் வருகிறது. இதில் 300 நிமிடம்
என்பது 5 மணி ஆகும்.  மீதி 28 நிமிடமும் உள்ளது.
எனவே 5 மணி 28 நிமிடம் ஆகிறது. இதுவே
சரியான விடையும் ஆகும்.
Therefore நேரம் = 5 மணி 28 நிமிடம்.

5) ஆக சூரியனில் இருந்து வரும் வெளிச்சம்
புளூட்டோவை அடைய ஐந்தரை மணி நேரம் ஆகும்.
காலை 6 மணிக்கு உள்ள சூரிய ஒளியை மதியம்
11.30 மணிக்குப் பார்ப்பது போல இது உள்ளது.

6) விடையளித்த அனைவருக்கும் நன்றி.
************************************************  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக