வியாழன், 27 டிசம்பர், 2018

சூரியனில் இருந்து 591 கோடி கிலோமீட்டர்
தொலைவில் உள்ள குறுங்கோளான  புளூட்டோவுக்கு
சூரிய ஒளி வந்து சேர எவ்வளவு நேரம் ஆகும்? 

ஒவ்வொருவரும் இந்தக் கணக்கைச்
செய்ய வேண்டும். பெரிய பெரிய ஃபார்முலா
எதுவும் தேவையில்லை. பத்தாம் வகுப்பு
கணக்குதான் இது. எனினும் எட்டாம் வகுப்பு
மாணவனால் சரியான விடை எழுத முடியும்.

வருகிறதே!


எங்களின் அறிவியல் நிகழ்ச்சிக்கு (நிகழ்ச்சி நடைபெறும்போது)  வாருங்கள். காட்டுகிறேன்.


நிகழ்ச்சிகள் எனது பென்சன் பணத்தில் நடக்கின்றன.
PENSION REVISION வந்தால்  ஐஸ்கிரீம் உண்டு.

கணக்கை எப்படிப் போட்டீர்கள் என்பதை
நான் அறிவேன். பிறர் அறிய வேண்டாமா?

தமிழ் மோகன் Ramkumar R Thakku ஆகிய இருவரும்
சரியான விடை எழுதி உள்ளனர். அவர்களை
விளக்கம் அளிக்குமாறு கூறியுள்ளேன்.
எமது விடை இன்றிரவு வெளியாகும்.

ஒளியின் வேகம் என்பது மாறாதது. அது நொடிக்கு
3 லட்சம் கிமீ என்று எடுத்துக் கொள்க.
(Maximum attainable speed of light  in vaccum is a constant) 
இந்தக் கணக்கில் தூரம் 591 கோடி கிமீ
என்று கொடுக்கப்பட்டு உள்ளது. ஒளி பயணம்
செய்யும் வழி நெடுக எவ்விதத் தடையும் இல்லை
என்பது நாம் மேற்கொள்ள வேண்டிய அனுமானம்
(assumption, Space is almost empty except some local irregularities)

பின் என்ன? நேரம் = தூரம் divided by வேகம்.
அவ்வளவுதான்.

பொதுவான வாசகர்களுக்காக 10,12 வகுப்புகளின்
கணக்கு கொடுக்கும்போது, MSc, PhD போர்ஷனில்
உள்ள பாடங்களை உள்ளே புகுத்த வேண்டாம் என்று
கேட்டுக்  கொள்கிறேன்.    


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக