கருத்தின் வரையறை!
--------------------------------------
இந்த பிரபஞ்சத்தின் வயது 14 பில்லியன்
ஆண்டுகள். அதாவது பொருளின் வயது
1400 கோடி ஆண்டு. ஆனால் கருத்தின் வயது
அதிகபட்சமாக 15,000ஆண்டுகள்.
கருத்து என்பதே உயிரினம் தோன்றி, வளர்ந்து
ஆறாம் அறிவைப் பெற்று சிந்திக்கத்
தொடங்கிய பின்னரே பிறக்கிறது.
கருத்து என்பது அகநிலை அம்சம். அதற்கு
ஒரு பௌதிக இருப்பு இல்லை. இந்த பிரபஞ்சத்தில்
பொருளே இல்லையென்றால், கருத்தும் இல்லை.
எனவே கருத்து இரண்டாம்பட்சமானது (secondary).
பொருள் முதன்மையானது.
பிரபஞ்சத்தை இயக்கும் விதிகள் பொருளின்
விதிகளே; கருத்தின் விதிகள் அல்ல. கோள்கள்
சூரியனைச் சுற்றுவது கெப்ளரின் விதிகளால்தானே
தவிர கடவுளின் கட்டளையால் அல்ல.
கருத்து இல்லாமல் பொருள் இருக்கும். ஆனால்
பொருள் இல்லாமல் கருத்து இருக்க இயலாது.
ஒரு மனிதன் இல்லாமல், அவனின் மூளை
இல்லாமல், அந்த மூளை என்னும் பொருளின்
சிந்தித்தல் என்னும் செயல் இல்லாமல்
கருத்து என்பதே இல்லை.
பொருள் எப்போதுமே (always) சுயேச்சையானது.
ஆனால் கருத்து அப்படியல்ல. எனவே
பொருளுக்கும் கருத்துக்கும் உள்ள உறவு
எஜமான்-அடிமை (master-slave) உறவு. இவற்றில்
இருந்து கருத்தைத் துல்லியமாக வரையறுக்க
இயலும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக