பொருள் குறித்த பண்டைய இலக்கணமும்
எமது நவீன இலக்கணமும்!
ஏற்க மறுப்போர் தமது வாதத்தை முன்வைக்கலாம்!
-----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------
பருப்பொருள் குறித்த மார்க்சியர்களின் புரிதல்
பொருள் குறித்த பண்டைய இலக்கணத்தில்
இருந்து பெறப்பட்டது. பொருள் குறித்த நவீன
இலக்கணத்தை நியூட்டன் அறிவியல் மன்றம்
முன்வைக்கிறது. இங்கு தவிர்க்க இயலாமல்
கருத்து வேறுபாடு எழுகிறது. இது பொருள் குறித்த
பண்டைய இலக்கணத்துக்கும்
நவீன இலக்கணத்துக்குமான வேறுபாடே.
பொருள் என்பது மனித சிந்தனைக்கு வெளியே
சுயேச்சையாக இருக்கிற ஒரு புறநிலை யதார்த்தம்
(objective reality) என்னும் லெனினின் வரையறை
பொருள்முதல்வாதத்தின் ஆகப்பெரிய ஒரு
முன்னடிவைப்பு ஆகும்.
பொருள் குறித்த எமது நவீன இலக்கணம்
லெனினின் வரையறையோடு முரண்பட்டதல்ல.
மாறாக, லெனின் வரையறையை இட்டு
நிரப்புவதாகும் (A complimentary to Lenin's definition and not
contradictory to it).
பௌதிக இருப்பு உடைய அனைத்தும் பொருளே;
பொருள் என்றால் அதற்கு ஒரு பௌதிக இருப்பு
இருக்க வேண்டும் என்பதே எமது நியூட்டன்
அறிவியல் மன்றம் முன்மொழியும் நவீன
இலக்கணம்.
இந்த நவீன இலக்கணம் தத்துவத்தின் தேவையில்
இருந்து பிறக்கிறது. பொருளுக்கு மானசீக இருப்பு
மட்டுமே உண்டு என்று முரசு கொட்டும்
கருத்துமுதல்வாதத்தின் முதுகெலும்பை
முறிக்கிறது இந்த நவீன இலக்கணம்.
.
புறநிலை யதார்த்தம் என்னும் லெனினின்
வரையறையுடன் பௌதிக இருப்பு என்னும்
எமது வரையறையும் சேரும்போது, இவ்விரண்டின்
சேர்க்கையானது பொருள் பற்றிய இலக்கணத்தை
முன்னிலும் கூர்மையாகவும் முன்னிலும்
துல்லியமாகவும் ஆக்கி விடுகிறது.
இப்போது பொருளின் இலக்கணம் பின்வருமாறு
அமைகிறது:
"பொருள் என்பது மனித சிந்தனைக்கு வெளியே
சுதந்திரமாக இருக்கிற ஒரு புறநிலை யதார்த்தம்;
பொருளுக்கு ஒரு பௌதிக இருப்பு உண்டு".
எமது வரையறையை ஏற்பதில் என்ன தயக்கம்?
இங்கு தேவைப்படுவதெல்லாம் பண்டைய
வரையறையில் ஊன்றி நிற்கும் தோழர்கள்
இந்த நவீன இலக்கணத்தை ஏற்றுக் கொள்ளும்
மனப்பக்குவத்தைப் பெறுவதுதான்.
ஒரு பொருள் அது பெரியதாயினும் அல்லது ஒரு
நுண்ணிய துகளாயினும் இந்தப் பிரபஞ்சப்
பெருவெளியில் அதற்கு ஒரு இடம் உண்டு;
ஒரு இருப்பு உண்டு. பொருளானது வெளிகாலத்தில்
(spacetime) ஒரு இடத்தை அடைக்கும்.
வெளிகாலத்தில் அதன் இருப்பு உணரப்படும்,
புலன்களின் வாயிலாகவோ அல்லது கருவிகளின்
வாயிலாகவோ.
ஒரு பொருளை அது எத்தனை சுதந்திர நிலைகளில்
உள்ளதோ (degrees of freedom) அத்தனை நிலைகளிலும்
சுட்டிக்காட்ட வேண்டும். இதற்காக ஹில்பெர்ட்
வெளியை (Hilbert space) அறிவியல் உருவாக்கி
உள்ளது.
இயக்கத்தில் இருக்கும் ஒரு பொருளை குறைந்தது
ஆறு அச்சுகளைக் கொண்டு சுட்ட வேண்டும்.
இவற்றில் மூன்று அச்சுகள் நிலையிட அச்சுகள்
(position coordinates). மற்ற மூன்று அச்சுகளும்
உந்த அச்சுகள் (momentum coordinates).
(உந்தம் = momentum = mass times velocity).
இந்த ஆறு அச்சுகளையும் கொண்ட அமைப்பு
phase space என்று அழைக்கப் படுகிறது.
ஒரு பொருளுக்கு பௌதிக இருப்பு இருக்கிறது
என்றால், மேற்கூறிய ஆறு அச்சுகளைக் கொண்ட
phase spaceல் அப்பொருளை சுட்ட இயல வேண்டும்.
இவ்வாறு சுட்ட இயலவில்லையெனில், அது
பொருள் அல்ல. இதுதான் பொருளின் இலக்கணம்.
மின்புலம், காந்தப் புலம் ஆகிய புலங்களும்
(fields), எலக்ட்ரான், நியூட்ரினோ ஆகிய நுண்
துகள்களும், கால்பந்து பூசணிக்காய் போன்ற
பொருட்களும் ஆற்றல் துகள்களான
போசான்களும் பொருட்களே.
ஆக, பொருள் என்பது மனித சிந்தனைக்கு
வெளியே இருக்கிற புறநிலை யதார்த்தம்
என்ற வரையறையுடன், பொருள் என்பது பௌதிக
இருப்பைக் கொண்டுள்ளது என்ற வரையறையைச் சேர்க்கும்பொழுது பொருளின் வரையறை
முழுமை அடைகிறது.
அவ்வளவுதான்! விஷயம் முடிந்தது.
It is as simple as that.
**********************************************
கருத்து என்றால் என்ன? வரையறை!
பாலியின் தவிர்த்தல் விதி (Pauli's exclusion principle)
ஹெய்சன்பெர்க்கின் நிச்சயமின்மைக்
கோட்பாடு (uncertainty principle) ஆகியவை பொருளை
மிகவும் கூர்மையாகவும் துல்லியமாகவும்
விவரிக்கிற விதிகள்.
பொருளின் பௌதிக இருப்பு என்பதை பாலியின்
தவிர்த்தல் விதி கூர்மைப் படுத்துகிறது.
ஒரு குவான்டம் நிலையில் ஒரு துகள்தான் இருக்க
முடியும் என்று பௌதிக இருப்பை இன்னும்
தெளிவாக வரையறுக்கிறது பாலியின் விதி.
பொருள்முதல்வாதம் என்னும் தத்துவத்தைப்
பொறுத்தமட்டில், இவ்விரண்டு விதிகளின்
சாரத்தை உள்வாங்கிக் கொண்டு, பொருளுக்கு
பௌதிக இருப்பு உண்டு என்னும் வரையறையை
முன்வைப்பதில் நிறைவடைகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக