சனி, 27 நவம்பர், 2021

 இரண்டாம் ஆட்டம்  நடந்து கொண்டிருக்கிறது!

-----------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-----------------------------------------------------------------

உலக  சதுரங்க சாம்பியன் போட்டி 2020க்குரியது 

தற்போது துபாயில் நடந்து வருகிறது.

இன்று (நவம்பர் 27 இரண்டாம் ஆட்டம்!


சாம்பியன் கார்ல்சன் (வெள்ளை)

சாலஞ்சர் நெப்போ (கறுப்பு)


இரண்டாம் ஆட்டம் இன்று இந்திய நேரப்படி 

மாலை 6 மணிக்குத் தொடங்கியது.

இக்கட்டுரையை எழுதும் இந்த நேரத்தில் 

(2125 hours) இருவரும் 32ஆவது நகர்த்தலைச் 

செய்து முடித்துள்ளனர்.கார்ல்சன் தனது 

33ஆம் நகர்த்தலை சிந்தித்துக் கொண்டிருக்கிறார்.


நேற்றைய ஆட்டம் டிராவில் முடிந்தது.

இருவரும் தலைக்கு 0.5 புள்ளி பெற்றுள்ளனர்.


இன்றைய ஆங்கில இந்து ஏட்டில் ஸ்போர்ட்ஸ் 

பக்கத்தில் நேற்றைய ஆட்டம் பற்றிய 

செய்தி வெளிவந்துள்ளது. 45 நகர்த்தல்களும் 

தரப் பட்டுள்ளன.


தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில ஏட்டில் 

இன்று 22 பக்கங்கள். என்றாலும் நேற்றைய 

ஆட்டம் பற்றி ஒரு வார்த்தை கூட எழுதவில்லை.


ஆங்கிலப் பத்திரிகையே எழுதாதபோது

இந்தத் தமிழ்ப் பத்திரிக்கை எழுதும்?

அதாவது தமிழ்ப் பத்திரிகைகளில் இன்று வரை 

ஆட்டத்தின் நகர்த்தல்களை ஒருபோதும் 

எழுதியதில்லை.


சதுரங்கத்தில் ஆர்வமும் ஓரளவு திறமையும் 

உள்ள ஒருவருக்கு தமிழ் மட்டும்தான் தெரியும்,

ஆங்கிலம் தெரியாது என்றால், அவரால் 

ஆட்டத்தின் நகர்த்தல்களை அறிந்து கொள்ள 

வழியே இல்லாமல் போகிறது.


ஆங்கிலம் உற்பத்தி மொழி. எனவே சதுரங்கம் 

பற்றி ஆங்கில ஏடுகள் எழுதுகின்றன.


ஒளிபரப்பு உரிமையை வாங்கியுள்ள பல்வேறு 

நிறுவனங்கள் உதாரணமாக chesscom 

chess 24 ) ஆங்கிலத்தில் ஆட்ட வர்ணனையை 

வழங்குகின்றன. 


FIDE அமைப்பு அதிகாரபூர்வமான அமைப்பு.

அதில் விஸ்வநாதன் ஆனந்த் நேற்று 

வர்ணனை செய்தார்.


CHESS.COMல்  பேபியானோ கரோனா 

வர்ணனை செய்கிறார்.


டிசம்பர் 16ல் இந்த சதுரங்கத் திருவிழா 

நிறைவடையும். அதுவரை சதுரங்க 

லஹரிதான்!


மறைந்த மார்க்சிய மூல ஆசான் லெனின் 

உயிரோடு இருந்தால், இந்நேரம் அவர் 

தமது கடும் வேலைப்பளுவுக்கு இடையிலும்

உலக சதுரங்கப் போட்டியை ஆர்வத்துடன் 

கண்டு களித்திருப்பார். 


நான் அடிக்கடி சொல்லி வருகிறேன்! ஆங்கிலம்தான் 

இந்தியாவின் உற்பத்தி மொழியாக இருக்கிறது 

என்று ஆயிரம் முறை சொல்லி உள்ளேன்.


எனவே தமிழின் வாய்ப்புகள் அனைத்தையும் 

தட்டிப் பறிப்பது ஆங்கிலமே. இந்த உண்மையை 

உணர வேண்டும்.


சமஸ்கிருதத்தில் சதுரங்க ஆட்ட வர்ணனை 

செய்யப் படுகிறதா? இல்லை. ஏனெனில் 

சமஸ்கிருதம் உற்பத்தி மொழியாக இல்லை.

எனவே அடிமுட்டாள்தனமானதும் கயமைத்

தனமானதுமான சம்ஸ்கிருத எதிர்ப்பு என்ன 

செய்கிறது? அது ஆங்கிலத்தை வாழ 

வைக்கிறது.


ஆங்கிலம் வாழட்டும்! நமக்கு ஆட்சேபம் இல்லை.

ஆனால் தமிழின் இடத்தில் ஆங்கிலம் வந்து 

அமர்ந்து கொள்ளக் கூடாது  


தமிழின் நாற்காலி தமிழுக்கே!

தமிழின் நாற்காலியில் ஆங்கிலம் வந்து 

அமரக் கூடாது.


ஆனால் அமர்ந்திருக்கிறது.

தமிழ் தமிழ் என்று போலிக்கூச்சல் போடும் 

இழிந்த லும்பன்களால் ஆங்கிலத்தை 

விரட்ட முடியுமா?


கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சதுரங்கம் 

குறித்தும், உலக சதுரங்கப் போட்டி குறித்தும் 

தமிழில் எழுதி வருகிறேன். இந்த உலகில் 

நான் ஒருவன் மட்டுமே சதுரங்கம் பற்றி

தமிழில் எழுதி வருகிறேன்.


ஆனால் தமிழ் தமிழ் என்று போலிக் கூச்சல் 

போடும் எந்த ஒரு கழிசடையும் என்னையோ 

எனது கட்டுரைகளையோ ஆதரிக்கவில்லை.


உயிர் வாழத் தகுதியற்ற கழிசடைகளான

நீங்கள் பூமிக்குப் பாரமாக இருந்து கொண்டு 

மூச்சு விட்டுக் கொண்டு இருக்கிறீர்கள்!

நிலைக்குப் போரை என்கிறார் 

வள்ளுவர் உங்களை!


நாளைக்குள் சதுரங்கம் பற்றிய என்னுடைய 

கட்டுரையை அறிவியல் ஒளிக்கு அனுப்பி 

வைக்க வேண்டும். நாள் மிகவும் கடந்து 

விட்டது. பதிப்பாளர் கோபித்துக் கொள்ளும்முன் 

கட்டுரை எழுத வேண்டும்.


இன்றைய ஆட்டம் முடியும்வரை என்னால் 

வேறு எதிலும் கவனம் செலுத்த முடியாது.

எனவே இன்று இரவு கண் விழித்து கட்டுரையை 

எழுதி நாளை காலை 11க்குள் அனுப்ப வேண்டும்.


One of the toughest match என்று சொல்வதா 

அல்லது toughest ever match என்று சொல்வதா 

என்று எனக்குத் தெரியவில்லை.


2016இலும் (கார்ல்சன் vs செர்ஜி கர்ஜகின்)

2018இலும் (கார்ல்சன் vs பேபியானோ கரோனா)

உலக சாம்பியன் போட்டியில் 12 ஆட்டங்களும் 

டிரா ஆனது. எனவே இப்போது FIDE அமைப்பு 

14 ஆட்டங்கள் என்று நிர்ணயித்துள்ளது.


இந்த இரண்டாம் ஆட்டமும் டிரா ஆகும் வாய்ப்பு 



.


அதிகம். P (draw) = 0.8 என்று கணிக்கிறேன்.


Probability = 0.8 என்றால் என்ன அர்த்தம் என்று 

தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள்.

Probability of an impossible event = 0.

Probability of a sure event = 1

Probability always lies between 0 and 1.

************************************************ 

  

 

வியாழன், 25 நவம்பர், 2021

 மாடு முட்டி கோபுரங்கள் சாய்வதில்லை 

மாணிக்கம் கூழாங்கல் ஆவதில்லை 

BSNL ஒருபோதும் அழிவதில்லை!

------------------------------------------------------

சத்யம் டிவியில் விவாதம்!

பொருள்: 

தாறுமாறாய் எகிறும், எகிறப்போகும்

செல்போன் கட்டணங்கள்!


இந்நிகழ்ச்சியில் நியூட்டன் அறிவியல் மன்றம் 

பங்கேற்று, தனியார் மயக் கைக்கூலிகளின்

உடம்பில் பழுக்கக் காய்ச்சிய இரும்பால் 

சூடு போடுகிறது.


இந்த வீடியோவைப் பாருங்கள்.

இதில் தோழர் இளங்கோவின் உரைவீச்சு 

இடம்பெறும் நேரம் பின்வருமாறு:-


7.45 நிமிடம் முதல் 15 நிமிடம் வரை 

25.40நிமிடம் முதல் 37 நிமிடம் வரை 

51 நிமிடம் முதல் 58 நிமிடம் வரை.

------------------------------------------------


திங்கள், 22 நவம்பர், 2021

 கணிதமே சதுரங்கம்! 2018 november issue of ariviyal oli.

--------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------
முற்றிலும் கணித விதிகளுக்குக் கட்டுப்பட்டது சதுரங்க
விளையாட்டு. இது இந்தியாவில்தான் முதலில் தோன்றியது.
ஒரு கணித நிபுணர்தான் சதுரங்க விளையாட்டைக்
கண்டு பிடித்தார்.

இன்று உலகிலேயே ரஷ்யாவில்தான் சதுரங்கம் மிகப்
பரவலாக விளையாடப் படுகிறது. அன்றைய சோவியத்
ஒன்றியத்தின் அதிபர் லெனின், தமது நண்பரும் எழுத்தாளருமான  மாக்சிம் கார்க்கியுடன் ஒய்வு நேரத்தில் சதுரங்கம் விளையாடுவார்.
சதுரங்கம் என்பது ஒரு மனப்பயிற்சிக்கூடம்
(Chess is the gymnasium of mind) என்று லெனின் வர்ணித்தார்.

சதுரங்கம் ஓர் உளவியல் படுகொலை (Chess is a psychic murder)
என்றார் அமெரிக்காவின் பாபி பிஷர் (Bobby Fisher 1943-2008). இவர்
1972-75 காலக்கட்டத்தில் உலக சாம்பியனாக இருந்தவர்.

1500 ஆண்டுகளுக்கு முன்பு, பொ ச ஆறாம் நூற்றாண்டில்
இந்தியாவில் தோன்றியதே சதுரங்கம் என்பது வரலாற்று
ஆய்வாளர்கள் பெரிதும் ஏற்றுக்கொண்ட கருத்து. இந்தியாவில்  தோன்றி பாரசீகம் வழியாக ஐரோப்பா சென்றது சதுரங்கம்.
ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர்தான், ஐரோப்பாவில்
பொ ச 15ஆம் நூற்றாண்டில்தான், சதுரங்கம் பரவலான செல்வாக்குப் பெற்றது.

இந்தியாவின் அண்மைக்கால சதுரங்க வரலாற்றை
ஆமு, ஆபி என்று, அதாவது ஆனந்த்துக்கு முன்,
ஆனந்துக்குப் பின் என்று இரண்டாகப் பிரிக்கலாம்.
ஆனந்துக்கு முன் இந்தியாவில் யாருமே கிராண்ட் மாஸ்டர்
கிடையாது. ஆனந்துதான் இந்தியாவின் முதல் கிராண்ட்
மாஸ்டர். 1988ல் தம் 18ஆம் வயதில் ஆனந்த் கிராண்ட் மாஸ்டர்
ஆனார். இந்தியாவில் தற்போது 50 கிராண்ட் மாஸ்டர்கள்
உள்ளனர் (ஜூன் 2018 நிலவரப்படி).

அதே நேரத்தில் உலகிலேயே அதிக கிராண்ட் மாஸ்டர்களைக்
கொண்ட நாடு ரஷ்யாதான். ரஷ்யாவில் 240 கிராண்ட் மாஸ்டர்கள்
உள்ளனர். அடுத்து 94 கிராண்ட் மாஸ்டர்களுடன் இரண்டாம் இடத்தில் அமெரிக்கா உள்ளது (2018 நிலவரப்படி).

ஆனந்துக்கு முன் இந்தியாவின் சதுரங்க நாயகராக
இருந்தவர் தமிழரான மானுவல் ஆரன் (Manuel Aaron). இவர் இந்தியாவின் முதல் சர்வதேச மாஸ்டர் (International Master) ஆவார்.

உலக சதுரங்க சம்மேளனம் (FIDE = Federation Internationale des Echecs)
மட்டுமே சர்வதேச மாஸ்டர் (IM), கிராண்ட் மாஸ்டர் (GM) ஆகிய
பட்டங்களை (titles) வழங்கும் உரிமை படைத்தது. சதுரங்கத்தில்
மிக  உயர்ந்த பட்டம் கிராண்ட் மாஸ்டர் ஆகும்.இதைப்
பெறுவதற்கு ஒரு ஆட்டக்காரர், பிற நிபந்தனைகளை
நிறைவு செய்வதுடன், ஈலோ மதிப்பீட்டில் (Elo Rating)
2500 புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும்.
சர்வதேச மாஸ்டர் பட்டத்தைப் பெறுவதற்கு ஈலோ
மதிப்பீட்டில் 2400 புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும். பிற
நிபந்தனைகளையும் நிறைவு செய்திருக்க வேண்டும்.

சதுரங்க வீரர்களின் ஆட்டத்திறனை மதிப்பிடும்
முறையே ஈலோ மதிப்பீடு ஆகும். இம்முறையை
உருவாக்கியவர் ஹங்கேரிய அமெரிக்கரான இயற்பியல்
பேராசிரியரும் சதுரங்க நிபுணருமான ஆர்பட் இம்ரே ஈலோ
(Arpad Imre Elo 1903-1992) ஆவார். அவரின் பெயரால் இம்முறை
ஈலோ மதிப்பீடு (Elo rating) என வழங்கப் படுகிறது.

இந்தியாவின் விசுவநாதன் ஆனந்த் (தற்போது வயது 49)
ஐந்து முறை உலக சாம்பியன்  பட்டத்தை வென்றுள்ளார்.
டெஹ்ரானில் 2000ல் நடந்த போட்டியில் வென்று
முதன் முறையாக உலக சாம்பியன் ஆனார். தொடர்ந்து
2007, 2008,2010,2012 ஆகிய ஆண்டுகளில் நடந்த
போட்டிகளில் வென்று தமது பட்டத்தைத் தக்க வைத்துக்
கொண்டார். சதுரங்கம் விளையாடும் அனைவருக்கும்
ஆனந்த் மகத்தான உத்வேகம் அளித்தார்; இந்தியாவில்
சதுரங்கத்தின் பரவலுக்கும்  வளர்ச்சிக்கும் ஆதர்சமாக
இருந்தார். இந்திய அரசு ஆனந்துக்கு பத்மஸ்ரீ,
பத்மபூஷண், பத்ம  விபூஷண் ஆகிய விருதுகளை
வழங்கி கெளரவித்துள்ளது.

அண்மைக்கால இந்திய வரலாற்றில் நுண்ணறிவுத் திறன்
அதிகமான முதல் மூவர் என்று  ராமானுஜன், சி வி ராமன், விஸ்வநாதன் ஆனந்த் ஆகிய மூவரும் (Top three Indians with
the highest IQ) மதிப்பிடப் படுகின்றனர். இதை மறுத்து
வேறு மூவர் அடங்கிய மாற்றுப் பட்டியலை முன்மொழிய
இயலாது என்பது கண்கூடு. எனவே டெண்டுல்கருக்கு
வழங்கியது போல, ஆனந்துக்கும் பாரத ரத்னா
வழங்கிச் சிறப்பிக்க வேண்டியது இந்திய அரசின்
கடமையாகும்.

சதுரங்க விளையாட்டில் கணினி புகுத்தப்பட்டது முதல்
இது நாலுகால் பாய்ச்சலில் பரவலாகி .வருகிறது.
 விளையாடுவதற்கு துணை கிடைக்காத நிலையை
கணினி போக்கி விடுகிறது. இன்று ஒரு அலைபேசியில்
சர்வ சாதாரணமாக எவரும் சதுரங்கம் விளையாட
முடியும். அலைபேசியின் மென்பொருளில்
அடங்கியுள்ள கணினி உங்களுடன் விளையாடும்.

உலகின் தலைசிறந்த சதுரங்க வீரர் காரி காஸ்பரோவ்.
உலக சாம்பியனான இவர் 1996 பிப்ரவரியில் டீப் ப்ளூ (Deep Blue) என்னும் கணினியுடன் சதுரங்கம் விளையாடினார்.
ஐபிஎம் (IBM) நிறுவனம் தயாரித்த இக்கணினி 6 அடி 5 அங்குலம் உயரமும் 1270 கிலோகிராம் நிறையும் கொண்டது. ஒரு வினாடிக்கு
100 மில்லியன் (10 கோடி) ஆட்ட நிலைகளை (Game positions)
மதிப்பிட்டு முடிவெடுக்க வல்லது இக்கணினி.

மொத்தம் ஆறு ஆட்டங்கள் நடந்தன. இதில் முதல்
ஆட்டத்தில் டீப் ப்ளூ கணினியானது காஸ்பரோவை
வென்றது. மனிதனை எதிர்த்து கணினி வென்றது என்ற
செய்தி கேட்டு உலகமே அதிர்ந்தது. எனினும் மீதியிருந்த ஐந்து ஆட்டங்களில் மூன்றை வென்றும் இரண்டை டிரா செய்தும்
4-2 என்ற ஸ்கோர் கணக்கில் காஸ்பரோவ்
கணினியைத் தோற்கடித்து ஆட்டத்தொடரை வென்றார்.

சதுரங்கத்தின் அடிப்படை கணிதமே என்பது மட்டுமின்றி,
"கணிதமே சதுரங்கம், சதுரங்கமே கணிதம்" என்னும்
அளவுக்கு கணிதமும் சதுரங்கமும் ஈருடலும் ஓருயிருமாக
இருப்பவை. காரி காஸ்பரோவ் போன்ற உலக
சாம்பியனையே கணினி தோற்கடித்தது என்ற வரலாறு
இந்த உண்மையை உறுதிப் படுத்துகிறது.

டாக்டர் மாக்ஸ் யூவ் (Dr Max Euwe 1901-1981) என்ற நெதர்லாந்து நாட்டின் கணித அறிஞர் 1935ல் உலக சாம்பியன் ஆனார். உலக சாம்பியனாக
ஒரு கணித அறிஞர் ஆவது என்பது சதுரங்கத்தில் மட்டுமே
சாத்தியம். இவர் உலக சதுரங்க சம்மேளனத்தின் (FIDE) தலைவராகவும் 1970 முதல் 1978 வரை எட்டு ஆண்டுகள் பணியாற்றினார்.

சதுரங்கம் தோன்றியபோதே அதைச்சார்ந்து பல கணிதப்
புதிர்களும் கூடவே தோன்றின. ஒரு பண்டைக் காலப்
புதிர் இன்றும் உயிர்ப்புடன் திகழ்கிறது.

சதுரங்கப் பலகையில் 64 கட்டங்கள் உள்ளன. இதில் முதல்
கட்டத்தில் ஒரு நெல்மணியை வைக்க வேண்டும். அடுத்த
கட்டத்தில் இரண்டு மடங்கு நெல்மணியும், தொடர்ந்து
ஒவ்வொரு கட்டத்திலும் முந்திய கட்டத்தில் வைக்கப்பட்ட
நெல்மணிக்கு இரு மடங்கு என்ற அளவில் வைத்துக்
கொண்டே வர வேண்டும். அப்படியானால் எவ்வளவு
நெல்மணிகளை வைக்க வேண்டும் என்பதுதான் புதிர்.

மிக எளிய முறையில் இப்புதிரை விடுவிக்கலாம்.
1+2+4+8+......... என்று கணக்கிட்டால் 64 கட்டங்களிலும்
சேர்த்து மொத்தம் 18,446,744,073,709,551,615 நெல்மணிகள்
வைக்கவேண்டி இருக்கும். அதாவது 18 குயின்டிலியன்
நெல்மணிகள் ஆகும். (1 quintillion = 10^18). பொச 13ஆம் நூற்றாண்டில், பண்டைய இந்தியாவில் தோன்றியதே
இப்புதிர் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
18 குயின்டிலியன் நெல்மணிகளின் நிறை லட்சம் கோடி
மெட்ரிக் டன் என்ற அளவில் இருக்கக் கூடும். இது ஓராண்டின்
உலக நெல் உற்பத்தியை விடப் பல்லாயிரம் மடங்கு
அதிகமானதாக இருக்கக் கூடும்.

சதுரங்கத்தில் குதிரை மிகவும் ஆர்வமூட்டுவது. குதிரை
மட்டும்தான் தன்னுடைய பாதையில் வேறு காய்கள்
இருந்தாலும், அவற்றைத் தாண்டிச் செல்லும். மற்றக்
காய்களுக்கு இல்லாத சலுகை இது. சதுரங்கப் பலகையின்
நடுவில் உள்ள ஒரு கட்டத்தில் ஒரு குதிரையை வைத்தால்,
அதே செல்லக்கூடிய எட்டுக் கட்டங்களையும் இணைத்தால்
அது ஒரு எண்கோணமாக (octagon) இருக்கும்.

குதிரையின் சுற்றுலா (Knight"s tour) என்பது  சதுரங்கத்தில்
மிகவும் புகழ் பெற்ற இன்னொரு புதிர். சதுரங்கப் பலகையில்
ஏதேனும் ஒரு கட்டத்தில் அமரும் குதிரை 64 கட்டங்களுக்கும்
செல்ல வேண்டும். எந்தக் கட்டமும் விடுபடக் கூடாது.
எந்தக் கட்டத்திலும் ஒரு முறைக்கு மேல் இருத்தல் கூடாது.
இதுதான் புதிர்.

காஷ்மீரக் கவிஞர் ருத்ரதர் (Rudrata) ஒன்பதாம் நூற்றாண்டைச்
சேர்ந்தவர். இவர் காவிய அலங்காரம் என்னும் நூலை  இயற்றியுள்ளார். இதில் சதுரங்கத்தில் உள்ள குதிரையின்
சுற்றுலா பற்றிக் குறிப்பிட்டுள்ளார். சதுரங்கம் பற்றிய மிகவும்  தொன்மையான குறிப்பாக இது உள்ளது.

லியனார்டு ஆய்லர் (Leonard Euler 1707-1783) என்னும் சுவிஸ் கணித
அறிஞர் குதிரையின் சுற்றுலாப் புதிருக்கு விடை கண்டுள்ளார்.
சதுரங்கப் பலகையின் இடது ஓரத்தில் உள்ள முதல் கட்டத்தில்
இருந்து (A1) புறப்படும் குதிரை 64 கட்டங்களுக்கும் செல்கிறது.

தற்போது கணினி அறிவியலில், குறிப்பாக வரைபடக் கொள்கையில்  (Graph Theory) ஹாமில்டன் பாதைச் சிக்கல்
(Hamiltonian path problem) என்பதாக இப்புதிர் அழைக்கப்படுகிறது.
நவீன கணிதம் 8x8 சதுரங்கப் பலகையில் குதிரையின் சுற்றுலாவுக்கு 26,534,728,821,064 தீர்வுகளை அதாவது 26 டிரில்லியன் தீர்வுகளைக் கண்டறிந்துள்ளது.

சதுரங்கப் புதிர்கள் கணக்கற்றவை. அவை அனைத்தையும்
இக்கட்டுரையில் விவரிக்க இயலாது. எனினும் இவற்றுள் மிகவும் புகழ்பெற்ற சதுரங்க ராணிப்புதிரைப் பார்ப்போம். ஒரு சதுரங்கப்
பலகையில் 8 ராணியை ஒன்றையொன்று வெட்டாமல்
வைக்க வேண்டும். எப்படி வைப்பது? இதுதான் புதிர்.

இப்புதிரை முதன் முதலாக 1848ல் ஜெர்மன் சதுரங்க
நிபுணர் மாக்ஸ் பெஸ்ஸல் (Max Bezzel  1824-1871) உருவாக்கினார்.
உலகப்புகழ் பெற்ற ஜெர்மன் கணித அறிஞர் காரல் பிரடெரிக்
காஸ் (Karl Frederick Gauss 1777-1855) இப்புதிருக்கு விடை கண்டார்.
இதற்கு மொத்தம்  92 தீர்வுகள் உள்ளன. இவற்றில் எளிய ஒரு
தீர்வைப் பார்ப்போம். பின்வரும் கட்டங்களில் எட்டு
ராணிகளை வைத்தால் (a5, b3, c1, d7, e2, f8, g6, h4) ஒன்றையொன்று வெட்டாது.

சதுரங்கத்தில் இரண்டு நகர்த்தல்களில் ராஜாவைச்
சிறைபிடிப்பது (Two moves mate problem) என்பது மிகவும் பிரபலமான
கணக்கு. வெள்ளைக்காய்களைக் கொண்டவர் முதலில்
நகர்த்தி வெற்றி பெற வேண்டும் (white to play and win). இந்தக்
கணக்கில் மொத்தமே இரு தரப்புக்கும் சேர்த்து மூன்று
நகர்த்தல்கள் மட்டுமே வரும். மூன்றாவது நகர்த்தல்
சிறைபிடிக்கும் நகர்த்தல் (mating move) ஆகும். சதுரங்கத்தில்
திறனை மேம்படுத்த விரும்புவோர் இத்தகைய
கணக்குகளைச் செய்து பழக வேண்டும்.

இன்றளவும் உலக சாம்பியன் போட்டி ஆண்களுக்கும்
பெண்களுக்கும் தனித்தனியாகவே நடத்தப்பட்டு
வருகிறது. சதுரங்கத்தில் பெண்களும் தங்களின்
திறனை மேம்படுத்திக் கொண்டால், உலக சாம்பியன்
பட்டம் என்பது ஆண் பெண் இருபாலருக்கும்
பொதுவானதாக அமையும். வருங்காலத்தில் இது
சாத்தியம் ஆகும்.
***********************************************************

சனி, 20 நவம்பர், 2021

 சதுரங்கம் 

-----------------

சில ஆண்டுகளுக்கு முன்பு சதுரங்கம் குறித்து 

ஓர் அறிவியல் கட்டுரை எழுதினேன். அறிவியல் 

ஒளி ஏட்டில் அது பிரசுரமானது.


அந்தக் கட்டுரையை எழுதும்போது நிறைய 

இடர்ப்பாடுகளை சந்தித்தேன்.சதுரங்க அறிவியல் 

சார்ந்து தமிழில் சொற்கள் அறவே இல்லை.


Queen side castling என்பது பற்றி ஓரிரு வாக்கியங்கள் 

எழுத வேண்டும். எழுத இயலவில்லை.


queen's gambit declined என்பது பற்றியும் ஓரிரு

வாக்கியங்கள் எழுத வேண்டும். தமிழில் சொல் 

இல்லை.


எட்டுக்கோடித் தமிழர்களின் பொண்டாட்டிமார்கள் 

ஒருசேரத் தாலியறுத்தாலும் மேற்கூறிய 

விஷயங்களை தமிழில் எழுதுவது கடினம்.   


என்னால் தேவையான புதிய சொல்லை உருவாக்கி

எழுத முடியும். ஆனால் படிக்கும் வாசகர்களுக்குப் 

புரியாமல் போகும்.


ஆங்கிலத்தில் இந்தத் தொல்லை இல்லை.

ஏன்? ஆங்கிலம் உற்பத்தி மொழியாக 

இருக்கிறது. உற்பத்தி மொழி என்பது 

ஒரு மார்க்சியக் கருத்தாக்கம். அது 

புரியவில்லை என்றால் பயனில்லை.


இந்தியாவின் பொருள் உற்பத்தி ஆங்கிலத்தில் 

நடைபெறுகிறது. இந்தியாவின் பொருள் உற்பத்தி 

மொழி ஆங்கிலம் ஆகும்.


தமிழ் உற்பத்தி மொழியாக இல்லை. இதனால் 

தமிழில் சொல் இல்லை. நிலவுடைமைச் சமூக 

அமைப்பில் உயர்ந்து விளங்கிய தமிழ், 

முதலாளியச் சமூகத்தில் தனது மதிப்பை 

இழந்தது. உற்பத்தி மொழியாக ஆங்கிலம் 

ஆகிவிட்டதனால், தமிழ் அரியணையில் 

இருந்து கீழே இறங்கி தரையில் உட்கார்ந்து 

கொண்டு இருக்கிறது.  

  

ஒரு விஷயத்தைக் குறிப்பதற்கு ஆங்கிலத்தில் 

ஆயிரமாயிரம் சொற்கள்!

கிரிக்கெட்டில் நடுவரை அம்பயர் என்கிறான்.

கால்பந்தில் நடுவரை ரெஃபரி (Referee) என்கிறான்.

சதுரங்கத்தில் ஆர்பிட்டர் (Arbiter) என்கிறான்.

தமிழில் அம்பயர் என்றாலும் 

ரெஃபரி என்றாலும் 

ஆர்பிட்டர் என்றாலும் 

நடுவர் என்றுதான்.தாலியறுக்க வேண்டும்.


இன்னொரு சொல்லை பார்ப்போம்.

Chief என்ற சொல். Congress chief, DMK chief 

என்பார்கள். தமிழில் தலைவர் என்கிறோம்.


President  என்றாலும் தமிழில் தலைவர்தான்

Chairman என்றாலும் தலைவர்தான்.

Leader என்றாலும் தலைவர்தான்.


என்னுடைய 17ஆவது வயதில் இருந்து நான் 

மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன்.

அறிவியலை தமிழில் எழுதுவதும் கடினம்.

மொழிபெயர்ப்பதும் கடினம். காரணம் 

தமிழ் என்பது உற்பத்தியில் இல்லாத மொழி.

 .     

இவ்வளவு கஷ்டங்களுக்கு இடையிலும் தற்போது 

சதுரங்கம் பற்றி நிறைய எழுதியுள்ளேன் முகநூலில்.

இது முகநூல் வாசகர்களுக்காக.


சதுரங்கத்தில் நான் உருவாக்கிய 

தமிழ்ச் சொற்கள்!

Queen;s gambit accepted/declined = 

ராணியின் பலிப்பொருள் ஏற்பு/மறுப்பு.


எனது சதுரங்கக் கலைச்சொல் ஆக்கம்!

King side castling = ராஜாவின் கோட்டைக் காப்பு.

Queen side castling = ராணியின் கோட்டைக் காப்பு.   



ராஜாவின் கடிமதில் என்றும் 

ராணியின் கடிமதில் என்றும் கூறலாம்.

அது சாதாரண மக்களுக்குப் புரியாது.


கடிமதில் = காவல் மிக்க மதில். 

கடி என்ற சொல் பல பொருளைத் 

தரும் சொல்லாகும்.


கடியென் கிளவி காப்பே கூர்மை 

விரையே விளக்கம் அச்சம் சிறப்பே.  


சுருக்கமாக இருக்கிறது. உங்களுக்கும் 

எனக்கும் நம் காலத் தலைமுறைக்கும் 

கடிமத்தில் என்றால் புரியும். 


இன்றைய தலைமுறை மிக்க குறைந்த 

பலவீனமான தமிழறிவு உடையோருக்கு 

ஏற்ற விதத்தில் கோட்டைக்காப்பு என்ற 

சொல்லை உருவாக்கி உள்ளேன்.

   

தமிழுக்கு அமுதென்று பேர் என்று சொன்னால் 

இன்றைய தலைமுறைக்குப் புரியவில்லை!

எனவே தமிழுக்கு அல்வான்னு பேரு என்று 

எளிமையிலும் எளிமையாக எழுதுகிறேன்!

-------------------------------------------------------------- 

நியூட்டன் அறிவியல் மன்றம் 

---------------------------------------------------------

சதுரங்கத்தைத் தமிழில் எழுதி வருகிறேன் 

நான். வேறு எவரும் எழுதவில்லை. நான் 

மட்டுமே எழுதி வருகிறேன்.


எனவே சதுரங்கம் பற்றிய கலைச்சொற்கள் 

பலவற்றை ஆக்கி உள்ளேன்.

உதாரணத்துக்கு ஒன்றிரண்டு.


Queen's gambit accepted = ராணியின் பலிப்பொருள் ஏற்பு.

Queen's gambit declined = ராணியின் பலிப்பொருள் மறுப்பு.


King side castling = ராஜாவின் கோட்டைக் காப்பு.

Queen side castling = ராணியின் கோட்டைக் காப்பு.   

மிக எளிமையான தமிழாக்கம் இது.


King side castling = ராஜாவின் கடிமதில் 

Queen side castling = கடிமதில்.

இப்படியும் கூறலாம்.ஆனால் இது 

அனைவருக்கும் புரியாது.


கடிமதில் = காவல் மிக்க மதில். 

கடி என்ற சொல் பல பொருளைத் 

தரும் சொல்லாகும்.


கடியென் கிளவி காப்பே கூர்மை 

விரையே விளக்கம் அச்சம் சிறப்பே.  


என் காலத் தலைமுறைக்கும் 

கடிமத்தில் என்றால் புரியும். 

இன்றைய இங்கிலீஷ் மீடியம் பிள்ளைகளுக்கு?


இன்றைய தலைமுறை மிக்க குறைந்த 

பலவீனமான தமிழறிவு உடையோருக்கு 

ஏற்ற விதத்தில் கோட்டைக்காப்பு என்ற 

சொல்லை உருவாக்கி உள்ளேன்.


தமிழுக்கு அல்வான்னு பேரு!

*********************************************   


 




  

   


 

 அன்றும் இன்றும்!

உலக சதுரங்க சாம்பியனை முடிவு செய்வது எப்படி?

--------------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

---------------------------------------- 

நவம்பர் 2013ல் சென்னையில் நடந்த 

ஆனந்த்-கார்ல்சன் உலக சாம்பியன் போட்டியில் 

யாருக்கு வெற்றி என்பது பின்வருமாறு 

தீர்மானிக்கப் பட்டது.


அதிக பட்சம் 12 ஆட்டங்கள் அனுமதிக்கப் 

படுகின்றன. இதில் யார் முதலில் 6.5 புள்ளிகள் 

எடுக்கிறாரோ அவரே வெற்றி பெற்றவர் ஆவார்.


ஆனந்த்-கார்ல்சன் போட்டியில் 10 ஆட்டங்கள் 

முடிந்தபோதே கார்ல்சன் 6.5 புள்ளிகள் பெற்று 

விட்டார். எனவே அவர் உலக சாம்பியன் 

ஆகி விட்டார்.


தற்போது 2020க்கான உலக சதுரங்க சாம்பியன் 

போட்டி துபாயில் 2021 நவம்பர் 24-டிசம்பர் 16

தேதிகளில் நடைபெறுகிறது.


இதில் நடப்பு சாம்பியன் கார்ல்சனை, சாலஞ்சர்   

நெப்போ (ரஷ்யா) எதிர்த்து ஆடுகிறார். இதில் 

சாம்பியனைத் தீர்மானிக்கும் விதி இம்முறை 

மாற்றப் பட்டுள்ளது.


இதன்படி அதிக பட்சம் 14 ஆட்டங்கள் நடைபெறும்.

இதில் யார் முதலில் 7.5 புள்ளிகள் பெறுகிறாரோ 

அவரே வெற்றியாளர்.


********************************************************  

    

பின்குறிப்பு:

இந்தப் பதிவில் சொல்லப்பட்ட விஷயங்களை 

எந்த ஒரு தமிழ்ப் பத்திரிகையையோ அல்லது 

தமிழ் டிவியோ சொல்லாது. எனவே இங்கு நான் 

கூறியுள்ள தகவல்களின் அருமையை 

உணருங்கள்.


இந்தப் பதிவு அனைவருக்குமானது அல்ல.

சதுரங்க ஆர்வலர்களுக்கு மட்டுமேயானது இது.


   

வெள்ளி, 19 நவம்பர், 2021

 சதுரங்க வினாடி வினா:

வினாக்களும் விடைகளும்!
------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------
வினாக்கள்:
---------------
1) இந்தியாவில் இன்றைய தேதியில் எத்தனை
சதுரங்க கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளனர்?

2) உலக சதுரங்க நடப்பு சாம்பியன் யார்?

3) உலக சதுரங்க சாம்பியன் போட்டி எத்தனை
ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும்?

4) இந்தியா தனது சதுரங்க முதல் கிராண்ட்
மாஸ்டரை எந்த ஆண்டில் பெற்றது? யார் அவர்??

5) 1948க்குப் பின்னரான உலக சதுரங்க
சாம்பியன்கள் எவரேனும் 5 பேரைக் கூறுக.

6) விஸ்வநாதன் ஆனந்துக்கு முன், சர்வதேச
அளவிலான போட்டிகளில் விளையாடிய
இந்திய சதுரங்க வீரர் யார்?

7) உலகிலேயே மிகக் குறைந்த வயதில் சதுரங்க
கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றவர் யார்?
எந்த நாட்டவர்? எந்த வயதில் (ஆண்டு,மாதம்)
பட்டம் வென்றார்?

😎 சதுரங்கத்தில் எந்தெந்த நிலைமைகளில்
டிரா (draw) ஏற்படும்?

9) 2021 நவம்பரில் துபாயில் நடைபெறும்
உலக சதுரங்க சாம்பியன் போட்டியில்
நடப்பு சாம்பியனை எதிர்த்து ஆடப்போகும்
சாலஞ்சர் (challenger) யார்? எந்த நாட்டவர்?

10) உலக சதுரங்க சாம்பியன் போட்டியின்
முடிவு எவ்வாறு தீர்மானிக்கப் படுகிறது?

சதுரங்க வினாடி வினா:
-------------------------------
விடைகள்:
------------
1) இந்தியாவில் 72 கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளனர்.

2) நடப்பு உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன் (நார்வே)

3) இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை
நடைபெறும் உலக சாம்பியன் போட்டி
இரட்டைப்படை ஆண்டில் நடைபெற வேண்டும்.
தற்போதைய போட்டி 2020ஆம் ஆண்டுக்கானது.
கொரோனா காரணமாக 2021ல் நடைபெறுகிறது.

4)1988ல் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர்
ஆனார் விஸ்வநாதன் ஆனந்த்.

5) 1948க்குப் பின்னர், அதாவது FIDE அமைப்பு
செயல்படத் தொடங்கிய பிறகு, உலக
சாம்பியன்கள்: பாபி ஃபிஷர், அனடோலி கார்ப்போவ்,
காரி காஸ்பரோவ், விஸ்வநாதன் ஆனந்த்,
மாக்னஸ் கார்ல்சன்.

6) மானுவல் ஆரன், தமிழர், தூத்துக்குடி ஊரினர்,
IM (International Master) விருது பெற்றவர்.
ஆனால் GM விருது ஏறவில்லை.

7) மிக்க இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம்
வென்றவர் அபிமன்யு மிஸ்ரா. இவரின் பெற்றோர்
இந்தியர்கள். எனினும் அமெரிக்காவில் குடியேறி
குடியுரிமை பெற்றதால் அமெரிக்கர்கள்.
தமது 12 வயது, 4 மாதம், 25 நாளில் அமெரிக்கரான
இவர் கிராண்ட் மாஸ்டர் ஆனார். இவரின் பிறந்த
தேதி:பெப்ரவரி 5ஆம் தேதி, 2009.

இதற்கு முன்பு செர்ஜி கர்ஜகின் என்னும் சிறுவன்தான்
மிக்க இளம் வயதில், 12 வயது 7 மாதத்தில் GM ஆகி
இருந்தார். 19 ஆண்டுகளாக நீடித்த இந்த
ரெக்கார்டை அபிமன்யு மிஸ்ரா முறியடித்தார்.
8) பின்வரும் 3 நிலைமைகளில் சதுரங்கத்தில்
டிரா ஏற்படும்.
அ) ஆட்டக்காரர்கள் பரஸ்பர சம்மதத்துடன்
டிரா செய்தல்.
ஆ) STALEMATE which means the King has no legal
move possible though he is not under any check.
இ) perpetual check. (இது பற்றி வாசகர்களே முயன்று
அறிந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன்).

9) சாலஞ்சர் ரஷ்ய நாட்டவரான நெப்போ.
இவரின் முழுப்பெயர் Ian Alexandrovich Nepomniachtchi.

10) உலக சாம்பியனைத் தீர்மானிக்கும் முறை:
உலக சாம்பியனும் சாலஞ்சரும் அதிகபட்சம்
14 ஆட்டங்கள் ஆடுவார்கள்.இது classic chess ஆகும்.
யார் முதலில் 7.5 புள்ளிகள் பெறுகிறார்களோ
அவரே வெற்றியாளர்.

இருவரும் தலைக்கு 7 புள்ளிகளுடன் சமநிலையில்
இருந்தால் டை பிரேக்கர் ஆட்டங்கள் மூலம்
முடிவு காணப்படும்.
------------------------------------------------------------
பின்குறிப்பு:
1) பெற்றோர்கள் சதுரங்கம் பற்றி அறியாமல்
இருக்கலாம். உங்கள் பிள்ளைகளை
இந்த வினாடி வினாவில் பங்கு பெற வையுங்கள்.

2) வாசகர்களிடம் இருந்து போதிய ஆதரவு இல்லாத
காரணத்தால், சதுரங்க வினாடி வினாவை
இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். ஆதரவு
இருந்தால், பின்னர் பார்ப்போம்.
************************************************************** .

வியாழன், 18 நவம்பர், 2021


chess chess

---------------------------------------------------

கால்பந்து என்பது உடல் சார்ந்த விளையாட்டு.

அது போல, சதுரங்கம் என்பது மூளை சார்ந்த 

விளையாட்டு (brain game). மேலும் சதுரங்கம் 

கணித விதிகளால் ஆளப்படும் விளையாட்டு.

எனவே சதுரங்கம் ஆட அறிவுத் திறன் தேவை. 


எனவே, சதுரங்கம் விளையாடினால் மேதாவியா 

என்ற கேள்வி பெருத்த அறியாமையை வெளிப்படுத்தும் 

கேள்வியாகும்.. எப்படி கால்பந்து விளையாட 

உடல் வலிமை தேவையோ, அதைப்போல சதுரங்கம் 

விளையாட மூளை தேவை; அறிவுத்திறன் தேவை.

எனவே சதுரங்கம் விளையாடினாள் மேதாவியா 

என்றால், ஆம், மேதாவிதான் என்று நியூட்டன் 

அறிவியல் மன்றம் அடித்துக் கூறுகிறது.

இதை உணர்ந்து கொள்ள M.Sc படிக்க வேண்டியதில்லை.

காமன் சென்ஸ் இருந்தாலே போதும்.  


சதுரங்கம் என்றால் என்ன என்று லெனின் 

வரையறுத்தார். Chess is the gymnasium of mind 

என்றார் லெனின். மூளைக்குப் பயிற்சி அளிக்கும் 

விளையாட்டு என்றார் லெனின். லெனின் சொன்னதே 

சரியென்று அன்றும் இன்றும் அறிவியல் ஏற்றுக் 

கொண்டுள்ளது..


ஓஷோ என்பவர் என்ன சொல்கிறார்? சதுரங்கம் 

டைம்பாஸ் பண்ண உதவும் ஒரு விளையாட்டு,

அவ்வளவுதான் என்கிறார். இது முற்றிலும் தவறு. 

தவறு மட்டுமல்ல பெரும் அறியாமையை

வெளிப்படுத்துகிற ஒரு கூற்று ஆகும். 


ஓஷோ என்பவர் எவ்விதத்திலும் பொருட்படுத்தத் 

தக்கவர் அல்லர். பகுத்தும் தொகுத்தும் அலசி 

ஆராய்ந்தும் ஒரு கருத்தைச் சொல்பவர் அல்லர் 

அவர். போகிற போக்கில் வாயில் வந்ததை உளறி 

வைத்து விட்டு ஓடிப்போகும் ஒரு பொறுப்பற்றவர் அவர்.


நான் பெரிதும் முயன்றும் உழைத்தும் சமூகத்தில் 

இளைஞர்களிடையே மாணவர்களிடையே 

தன்னம்பிக்கையை ஊக்கத்தை உற்சாகத்தை 

படிப்பில் கல்வியில் ஆர்வத்தை ஏற்படுத்தும் 

விதத்தில் பதிவுகளை எழுதுகிறேன். அது பலருக்கு 

ஒரு inspirationஆக இருக்க வேண்டும் என்ற 

நோக்கத்துடன். கிடைக்கிற feedback எனது 

நோக்கம் நன்றாக நிறை உள்ளது என்று காட்டுகிறது.


ஆனால், மதிப்புக்குரிய டிராட்ஸ்கி ஓஷோ அவர்களே,

உங்களின் பின்னூட்டங்களும் ஓஷோ என்பவரின் 

அறியாமை நிறைந்த கூற்றுகளும் சமூகத்தில் 

அவநம்பிக்கையை விதைக்கக் கூடியவை. 

இளைஞர்களையும் மாணவர்களையும் சோர்வடையச் 

செய்பவை. எதிர்மறைத் தன்மை வாய்ந்தவை.

எள்ளளவும் பயனற்றவை. எனவே இத்தகைய 

பிற்போக்குக்  கருத்துக்களை ஏற்க இயலாது.

அனுமதிக்க இயலாது. நன்றி. வணக்கம்.


 

 




 



  

 உலக சாம்பியன் போட்டியின் வர்ணனையாளராக 

விஸ்வநாதன் ஆனந்த்!

----------------------------------------------------------------- 

நியூட்டன் அறிவியல் மன்றம் 

------------------------------------------------------

உலக சாம்பியன் சதுரங்கப் போட்டி துபாயில் 

நவம்பர் 24ல் தொடங்குகிறது. டிசம்பர் 16ல் 

முடிகிறது.


நடப்பு சாம்பியன் மாக்னஸ் கார்ல்சனும் (நார்வே) 

சாலஞ்சர் நெப்போவும் (ரஷ்யா) . 

மோதுகின்றனர்..


உலக சாம்பியன் சதுரங்கப் போட்டியில் 

விஸ்வநாதன் ஆனந்தை 

அதிகாரபூர்வ வர்ணனையாளராக 

FIDE நியமித்து உள்ளது.


5 முறை உலக சாம்பியனாக இருந்த தமிழரும் 

இந்தியருமான விஸ்வநாதன் ஆனந்த் 

உலக சாம்பியன் போட்டியின் வர்ணனையாளர் 

என்பதில் நாம் பெருமை அடைகிறோம்.

*********************************************************


VJD முறையை ஆதரித்து 

சுனில் கவாஸ்கர் பேச்சு!

இச்செய்தியை ஒவ்வொருவரும் 

படிக்க வேண்டும்.


கவாஸ்கரின் பேச்சு தமிழில் இருக்கிறதா 

என்று ஒரு முட்டாள்தனமான கேள்வியைக் 

கேட்டு எரிச்சலூட்ட வேண்டாம் என்று 

பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.


சதுரங்கத்தைப் பற்றி தமிழில் ஏதாவது 

இருக்குமேயானால் அது நான் எழுதியது 

மட்டும்தான். என்னைத் தவிர வேறு யார் 

எவரும் சதுரங்கம் பற்றி தமிழில் எழுதவில்லை;

எழுதப் போவதும் இல்லை.


எந்தப் பத்திரிகையோ டிவியோ சதுரங்கம் 

பற்றி தமிழில் எழுதாது.


VJD முறை என்றால் என்ன என்று தெரியுமா?

டக்வொர்த் லூயிஸ் முறை என்றால் என்ன 

என்று தெரியுமா? பலருக்கும் தெரியாது.

தெரிந்து கொள்ளுங்கள்.


இங்கிலாந்து முறை வேண்டாம்!

இந்தியாவின் சுதேசி முறையான 

VJD முறையே வேண்டும் என்கிறார் கவாஸ்கர்.


நியூட்டன் அறிவியல் மன்றத்தின் கருத்துக்கு 

க்வாஸ்கரின் கூற்று வலு சேர்க்கிறது.

*******************************************************     

  

இந்திய எஞ்சீனியர் வி ஜெயதேவன் 

கண்டறிந்த VDJ முறையை ஆதரிக்காத 

இந்திய பத்திரிகைகளுக்கு சுனில் 

கவாஸ்கர் கண்டனம் தெரிவித்தார்.

அருள்கூர்ந்து இணைக்கப்பட்ட ஆங்கிலச் 

செய்தியைப் படியுங்கள். படிக்காமல் 

SKIP பண்ணாதீர்கள்.  

   தற்குறிப் 

  

புதன், 17 நவம்பர், 2021

BCCI தலைவரும் அமித்ஷாவின் புதல்வருமான 

ஜெய் ஷா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

(கடந்த ஆண்டு 2021 நவம்பரில் எழுதிய பதிவு)

----------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-----------------------------------------------------------

மதிப்புக்குரிய ஐயா,

தாங்கள் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 

தலைமைப் பொறுப்பில் இருக்கிறீர்கள்.

கிரிக்கெட் ஆட்டம் அடிக்கடி மழையினால் 

தடைப்படும். இதனால் தேவையான ஓவர்கள்

பந்து வீச இயலாமல் போகும்.


இந்நிலையில் டக்வொர்த் லூயிஸ் முறை (LWS)

முறை பின்பற்றப்பட்டு ஆட்டத்தின் முடிவை 

அறிவிக்க முடிகிறது. இந்தியாவிலும் உலகிலும் 

டக்வொர்த் லூயிஸ் முறை பின்பற்றப் படுகிறது.


டக்வொர்த், லூயிஸ் ஆகிய இருவரும் இங்கிலாந்தின் 

புள்ளியியலாளர்கள் (Statisticians). இவர்கள் ஒய்வு பெற்ற 

பின் பேராசிரியர் ஸ்டெர்ன் இதை நடத்தி வருகிறார்.


இந்த முறையில் உள்ள பல்வேறு குறைகள் 

காலப்போக்கில் வெளிப்படத் தொடங்கின.

இந்த முறையின் குறைபாடுகளால் அதிருப்தி அடைந்த 

இந்திய இஞ்சீனியர் வி ஜெயதேவன் என்பவர் 

இதற்கு மாற்றாக வேறொரு முறையை உருவாக்கினார்.


அவர் உருவாக்கிய முறை அவரின் பெயராலேயே 

VJD முறை (V JAYA DEVAN) முறை என்று அழைக்கப் 

படுகிறது.


சுனில் கவாஸ்கர் அவர்கள் VJD முறை சிறப்பாக 

இருப்பதை அறிந்து சில போட்டிகளில் VJD முறையை 

அறிமுகம் செய்தார். சந்தேகத்துக்கு இடமில்லாத 

அளவில் இந்தியாவின் VJD முறை இங்கிலாந்தின் 

டக்வொர்த் லூயிஸ் முறையை விடத் துல்லியமானது.

இது பல்வேறு ஆட்டங்களில் நிரூபிக்கப் பட்டு இருக்கிறது.


எனவே இங்கிலாந்து முறையான டக்வொர்த் லூயிஸ் 

முறையைக் கைவிட்டு இந்திய முறையான VJD முறையை 

உலகம் முழுவதும் கிரிக்கெட்டில் பின்பற்ற வேண்டும்.


முதல் கட்டமாக எதிர் வரும் 2022 முதல் இந்தியாவில் 

ஆடப்படும் அனைத்து விதமான கிரிக்கெட் ஆட்டங்களிலும் 

போட்டிகளிலும் (Test matches, ODIs, T-20 etc) டக்வொர்த் லூயிஸ் 

முறை கைவிடப்பட்டு VJD முறை பின்பற்றப் பட வேண்டும்.

இந்தியாவில் இனி VJD முறைதான் பின்பற்றப்படும் 

என்று அரசும் BCCI அமைப்பும் பகிரங்கமாக 

அறிவிக்க வேண்டும்.


அடுத்த கட்டமாக உலகெங்கும் எந்த நாட்டில் கிரிக்கெட் 

விளையாட்டுப் பட்டாலும், அங்கு இந்திய VJD முறை 

பின்பற்றப்பட வேண்டும். இதற்கு BCCI ஆவன 

செய்ய வேண்டும்.


தேசபக்தி மிகுந்த பாஜக ஆட்சி நடக்கும்போதும்,

தேசபக்தி மிகுந்த அமித்ஷாவின் புதல்வர்

ஜெய் ஷா அவர்கள் BCCI அமைப்பின் தலைமையில் 

இருக்கும்போதும் எந்த எளிய கோரிக்கை 

நிச்சயம் நிறைவேறும் என்று நம்புகிறோம்.

********************************************

    

    

 

   

   

 மிக்க இளம் வயதில் சதுரங்க கிராண்ட் மாஸ்டர் 

பட்டம் பெற்ற சென்னை தமிழ்ச் சிறுவன்!

ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா GM!

------------------------------------------------------------

பிரக்ஞானந்தா 11 வயது நிரப்புவதற்கு முன்பே 

சர்வதேச மாஸ்டர் (IM = International Master) 

பட்டம் வென்றவர்.


2018ல் கிராண்ட் மாஸ்டர் பட்டமும் வென்றார் 

பிரக்ஞானந்தா.


இவர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றது 

பிரம்மாண்டமான உலக சாதனை.

உலகிலேயே மிக்க இளம் வயதில் கிராண்ட் 

மாஸ்டர் பட்டம் வென்ராவர்கள் இதுவரை 

ஐந்தே ஐந்து பேர் மட்டுமே. அதில் இவரும்

ஒருவர்.


தமது 12 வயது, 10 மாதம், 13 நாளில் 

பிரக்ஞானந்தா கிராண்ட் மாஸ்டர் பட்டம் 

வென்றார். 1980களில் விஸ்வநாதன் ஆனந்த் 

தமது 18 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் 

வென்றது பெரும் வியப்பாக இருந்தது.


இந்த மில்லேனியத்தில் பிறந்த சிறுவர்கள் 

12 வயதிலேயே கிராண்ட் மாஸ்டர் ஆகி 

விடுகிறார்கள்.


இந்தச் சிறுவனைப் பற்றித் தெரிந்து 

கொள்ளுங்கள். இவன் தமிழன். சென்னையில் 

வசித்து வருபவன்.


இச்சிறுவனுக்கு ஒளிமயமான எதிர்காலம் 

வாய்க்கட்டும் என்று நியூட்டன் அறிவியல் 

மன்றம் மனசார வாழ்த்துகிறது.

********************************************* 

 

 2700க்கு மேல் Elo rating பெற்றுள்ள 

சீனியர் கிராண்ட் மாஸ்டர்களை 

இளஞ்சிறுவன் பிரக்ஞனந்தா 

செப்டம்பர் 2017ல் தோற்கடித்தபோது.  


முகநூல் நிறுவனம் தன் பெயரை

meta என்று மாற்றி இணையப் 

புரட்சி செய்கிறது. இது பற்றி வீடியோ 

வெளியிடப் போகிறேன்.


meta குறித்து கட்டுரை எழுத விருப்பம் 

இல்லை.அது மிகுந்த நேர விரையம் 

ஏற்படுத்துகிறது. எனவே ஒரு 8 நிமிட 

வீடியோ வெளியிட்டு நேரத்தை மிச்சம் 

பிடிக்கப் போகிறேன். 

    


Elo Rating என்றால் என்ன?

டக்வொர்த் லூயிஸ் முறை என்றால் என்ன?

VJD முறை என்றால் என்ன?

விடை எழுதுங்கள் வாசகர்களே.




ஈலோ ரேட்டிங் என்றால் என்ன?

------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

---------------------------------------------

இவர்தான் இயற்பியல் பேராசிரியர் அர்ப்பாட் ஈலோ.

ஹங்கேரிக்காரர் அமெரிக்காவில் குடியேறியவர்.

Arpad Elo (1903-1992).


இவர் சதுரங்க வீரர்களின் ஆட்டத் தரவரிசையை 

உருவாக்கினார். (Chess players ratings by Elo).


இன்று உலகில் முதல் இடத்தில் அதிகமான 

ஈலோ ரேட்டிங்கில் இருக்கும் சதுரங்க வீரர் யார்?

உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன்.

இவரின் ஈலோ ரேட்டிங் = 2882.


விஸ்வநாதன் ஆனந்தின் தற்போதைய 

ஈலோ ரேட்டிங் என்ன? அவர் பெற்றிருந்த  

அதிகபட்ச ஈலோ ரேட்டிங் என்ன?    

விடை: தற்போது = 2751.

career highest = 2817. 

 

சதுரங்கத்தின் கடவுள் யார்?

காரி காஸ்பரோவ்.


2800க்கு மேல் ஈலோ ரேட்டிங் பெற்ற 

சதுரங்க வீரர்கள் எத்தனை பேர்?

யார் யார்?


கடைசிக் கேள்விக்கு வாசகர்கள் 

விடை தெரிந்து கொள்ள வேண்டும். 


Physics இல்லாமலோ science இல்லாமலோ 

எந்த விளையாட்டையும்  யாராலும் 

நடத்த முடியாது.


ஒலிம்பிக் போட்டிகளும் ஒருங்கிணைந்த 

அறிவியலும் என்ற என் கட்டுரையை 

(அறிவியல் ஒளியில் வெளியானது)

படித்தீர்களா?


பின்குறிப்பு:

சதுரங்கத்தின் கடவுளை நான் தரிசித்தேன்.

அவரிடம் பேசினேன்.

காரி காஸ்பரோவ் அவர்களைச்  சந்திக்கும் பேறு 

எனக்கு வாய்த்தது. வணங்கினேன் அவரை.

எனது மரியாதையை அன்பைத் தெரிவித்தேன்.  

YouaretheGodofchess என்று அவரிடம் சற்றே 

அதிகரித்த டெசிபெல்லில் கூறினேன்.

அவரின் மனைவியாரும் உடன் இருந்தார்.

சிரித்தார்; விடை பெற்றுக் கொண்டோம்.


2013 நவம்பரில் சென்னையில் நடந்த 

 அந்த இரண்டு நிமிடச் சந்திப்பு எனக்குப் 

பெரும் நிறைவையும் பெருமிதத்தையும் 

தந்தது; இன்னமும் தருகிறது. ஆனந்த் 

vs கார்ல்சன் உலக சாம்பியன் போட்டியைப் 

பார்க்க அவர் சென்னை வந்திருந்தபோது 

இந்தப் பேறு எனக்கு வாய்த்தது.



   


---------------------------------------------------- 


 தனித்தமிழ் என்று பேசும் தமிழின் பகைவர்கள்!

மொழியின் இயக்கம் அறியாத தற்குறிகள்!

இவர்கள் உயிர் வாழத் தகுதியற்றவர்கள்!

----------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

--------------------------------------------------

பஸ் வருகிறது என்று எழுதினான் பையன்.

தப்பு தப்பு, பஸ் என்று எழுதக் கூடாது. 

ஸ் என்பது கிரந்த எழுத்து. எனவே தமிழ் 

மரபுப்படி, பசு வருகிறது என்று எழுத வேண்டும் 

என்று திருத்தினான் தகப்பன். தனித்தமிழ்த் 

தகப்பன். 


பசு வருகிறது என்று எழுதிய நோட்டை 

வகுப்பில் ஆசிரியரிடம் காட்டினான் மாணவன்.

பையனின் முதுகுத்தோலை உரித்தார் ஆசிரியர்.

நிற்க.


ஹில்பெர்ட் என்றால் யார் என்று தெரியுமா?

தெரியாது. டேவிட் ஹில்பெர்ட் என்பவர் 19ஆம் 

நூற்றாண்டில் பிறந்த ஜெர்மன் கணித மேதை.

தமிழ்நாட்டில் லட்சத்தில் ஒருவருக்கு ஹில்பெர்ட்டைப் 

பற்றித் தெரியும். 


சில மாதங்களுக்கு முன், உலகின் Top Ten கணித

மேதைகளைப் பற்றி அறிவியல் ஒளி ஏட்டில் ஒரு 

நீண்ட கட்டுரை எழுதி இருந்தேன். அதைப் 

படித்தீர்களா? அந்தப் பத்துப்பேரில் டேவிட் 

ஹில்பெர்ட்டும் ஒருவர்.


டேவிட் ஹில்பெர்ட் mathematical physics துறையில் 

கணிசமாகப் பங்களித்தவர். அவர் உருவாக்கிய 

வெளி (space) அவரின் பெயரால் ஹில்பெர்ட்டின் 

வெளி  (Hilbert's space) என்று அழைக்கப் படுகிறது.


ஹில்பெர்ட் குறித்தும், ஹில்பெர்ட்டின் வெளி குறித்தும் 

தமிழில் ஏதேனும் கட்டுரை எழுதப் பட்டுள்ளதா?

எத்தனை கட்டுரைகள் எழுதப் பட்டுள்ளன? யார் யார் 

எழுதி உள்ளனர்? உயர் கல்வி தமிழில் வேண்டும் என்று 

போலியாகக் கூச்சல் போடும் தற்குறிகளே, இதற்கு 

உங்களால் பதில் சொல்ல முடியுமா?


இன்று உலகில் வாழும் மக்கள் 7.9 பில்லியன்.

அதாவது 790 கோடி. (1 பில்லியன் = 100 கோடி).

இந்த 790 கோடிப்பேரில் எத்தனை பேர் 

ஹில்பெர்ட்டின் வெளி (Hilbert's space) பற்றி 

தமிழில்  கட்டுரை எழுதி உள்ளார்கள்?


இக்கட்டுரையாசிரியரைத் தவிர, வேறு  யாரும் 

எழுதவில்லை. இதுவரை ஹில்பெர்ட்டின் வெளி 

குறித்து யாரும் தமிழில் எழுதியதில்லை.


பஸ் என்பதை பசு என்று எழுதுவதா தமிழ்ப்பற்று?

இல்லை. ஹில்பெர்ட்டின் வெளி குறித்து தமிழில் 

எழுதி, தமிழிலும் அறிவியலைச் சொல்ல இயலும் 

என்று நிரூபிப்பதுதான் தமிழ்ப் பற்று.


அறிவியல் ஒளியின் நடப்பு இதழில் (நவம்பர்)

கடவுள் வருகிறார் என்ற தலைப்பில் ஒரு புனைவை 

எழுதி உள்ளேன். அதில் ஹில்பெர்ட்டின் வெளி 

பற்றி எழுதி உள்ளேன்.


ஹில்பெர்ட்டின் வெளி என்பது உயர் கணிதம் மற்றும் 

உயர் இயற்பியல் சார்ந்தது. ஹில்பெர்ட் வெளி குறித்து 

தமிழில் ஆயிரம் கட்டுரைகள் இருந்தால் மட்டுமே 

உயர்கல்வியைத் தமிழில் கொண்டு வர முடியும்.


டேவிட் ஹில்பெர்ட் பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில் 

என்ன எழுதப் பட்டுள்ளது என்று பார்த்து என்னிடம் 

கூறுமாறு சில மாணவர்களைக் கேட்டுக் கொண்டேன்.

ஹில்பெர்ட் பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரை 

இல்லை என்றனர் மாணவர்கள்.


எனவே தமிழ் விக்கிப்பீடியாவில் நானே தேடினேன். டேவிட் 

ஹில்பெர்ட் பற்றி எழுதி இருக்கிறார்கள். எப்படித் 

தெரியுமா? இப்படித்தான்! "டேவிடு இல்பேர்ட்டு" என்று.

இது தமிழை எழுதும் முறை அல்ல. தமிழை எவர் 

ஒருவர் எழுதினாலும் தொடர்புறுத்த வல்ல மொழி 

என்ற நிலையில் நின்றுகொண்டுதான் எழுத வேண்டும்.


காலாவதியாகிப்போன இலக்கணங்களைக் கட்டிக்

கொண்டு அழும் தற்குறிகள் தமிழின் பகைவர்கள்.

இவர்கள் மொழியின் இயக்கவியல் பற்றியோ 

சதா சர்வ காலமும் இயங்கிக் கொண்டிருப்பதுதான் 

உயிருள்ள மொழியின் பண்பு  என்ற உண்மையையே 

அறியாதவர்கள். 


தமிழ் என்பது தொடர்புறுத்த வல்ல மொழியாக  

(communicable language) இருக்க வேண்டும். எந்த மொழி 

தொடர்புறுத்த வல்லதோ அதுவே உயிர்ப்புள்ள 

மொழியாகும். 


பஸ் வருகிறது என்பதை பசு வருகிறது என்று 

எழுதுபவன் தமிழின் கழுத்தை நெரிக்கிறான். 

தமிழ் தொடர்புறுத்த வல்ல மொழியாக இருக்கக் 

கூடாது என்பதே அவனின் இழிந்த நோக்கம்.  

உயிர்ப்புள்ள மொழியான தமிழை செத்த மொழியாக 

ஆக்குவதற்கு முயல்பவன் உயிர் வாழத் தகுதியற்றவன்.

  

தமிழ் தமிழ் என்று கூச்சலிடும் போலிகளே,

உங்களின் பொய்யான தமிழ்ப்பற்று தமிழைக்  

காயப்படுத்துகிறது. இது உங்களின் மூளையில்

உறைக்கட்டும்.

************************************************






     

      


            



திங்கள், 15 நவம்பர், 2021

 நவம்பர் 14 யாருடைய பிறந்த நாள்?

ஏன் அதைக் கொண்டாடவேண்டும்?

டாக்டர் பிரடெரிக் பான்டிங்கின் 

பிறந்த நாளே நவம்பர் 14.

----------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-------------------------------------------------

நீரழிவு நோய்க்கு மருந்தாகும் இன்சுலினைக் 

கண்டுபிடித்த டாக்டர் பிரடெரிக் பான்டிங்கின்

பிறந்த நாள்தான் நவம்பர் 14.


டாக்டர் பான்டிங்கின் பிறந்த நாளை ஆண்டுதோறும் 

உலக நீரழிவு நாளாகக் கொண்டாட வேண்டும் 

என்று ஐநா சபை முடிவு செய்தது. அதன்படி 

நவம்பர் 14 உலக நீரழிவு நாளாகக் கொண்டாடப் 

பட்டு வருகிறது.


1923ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு 

மருந்தியல் துறையில் (PHYSIOLOGY AND MEDICINE)

இருவருக்குப் பகிர்ந்து வழங்கப் பட்டது.

1. டாக்டர் பிரடெரிக் பான்டிங் 

(Dr Frederick Grant Banting)

2. டாக்டர் ஜான் மேக்லியாட் 

( Dr John James Rickard Macleod)

ஆகிய இருவரும் பரிசைச் சமாகப் பகிர்ந்து 

கொண்டனர்.

பரிசு எதற்காக வழங்கப் பட்டது?

இந்தக் கேள்வி மிகவும் முக்கியமானது. 

இவர்கள் இருவரும் நீரழிவு நோய்க்கு 

மருந்தாகப் பயன்படும் இன்சுலினைக் 

கண்டு பிடித்தனர்.

"The Nobel prize in physiology or medicine 1923 

was jointly awarded for the discovery of insulin" 

என்று Nobel prize citation குறிப்பிடுகிறது.

இன்சுலினைக் கண்டு பிடித்து உலகிற்கு 

வழங்கி கோடானுகோடி உயிர்களைக் 

காப்பாற்றிய 

டாக்டர் பிரடெரிக் பான்டிங்

டாக்டர் ஜான் மேக்லியாட்

ஆகிய இருவருக்கும் தலை வணங்குவோம்!

--------------------------------------------------------

பின்குறிப்பு:

-----------------

இன்சுலினைக் கண்டு பிடித்தமைக்காக

இரண்டு பேருக்கு 1923ஆம்

ஆண்டிற்கான நோபல் பரிசு வழங்கப் பட்டது.

பெனிசிலினைக் கண்டு பிடித்த மூவருக்கு

1945ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு

வழங்கப் பட்டது.

இன்சுலின்......... 1923.

பெனிசிலின்,,,,,,1945.

இன்சுலினையும் பென்சிலினையும் வாசகர்கள் 

குழப்பிக் கொள்ளக் கூடாது.

**************************************************   


தன்னுடைய கண்டுபிடிப்பான இன்சுலின்  

எல்லாருக்கும் எளிதில் கிடைக்க வேண்டும் 

என்பதற்காக வெறும் ஒரு டாலருக்கு 

கனடாவின் டொரோண்டா பல்கலைக்கு 

கொடுத்தவர் டாக்டர் பாண்டிங்.

 


மார்க்சையும் லெனினையும் வச்சுக்கிட்டு

என்ன மயிரைப் புடுங்க முடியும்?

கூத்தாடி சூர்யாதான் சூப்பர் முற்போக்கு

என்கிறான் நம்மூர் போலி நக்சல்பாரி.

  


மகாராஷ்டிராவில் 26 மாவோயிஸ்டுகளை 

என்கவுண்டரில் படுகொலை செய்த 

உத்தவ தாக்கரேயின் போலீசை 

கண்டிக்க மாட்டான் போலி நக்சல்பாரி.


=====================================

கோவை சிறுமியின் மரணத்திற்கு காரணமான 

பாலியல் குற்றவாளி மிதுன் சக்கரவர்த்தியும் 

அவனோடு தகாத உறவு வைத்திருந்த 

பள்ளித் தலைமையாசிரியை மீரா ஜாக்சனும் 

தற்போது போக்ஸோ சட்டத்தில் கைதாகி உள்ளனர்.


என்கவுண்டரில் கொல்லப்படுவதற்கு 


நக்சல்பாரி அரசியலை ஏற்றுக் கொண்டு 

மாலெ இயக்கத்தில் செயல்பட்டதால் 

நான் இழந்த கணக்கற்ற விஷயங்களில் 

சதுரங்கமும் ஒன்று.


சராசரித்தனமான ஈடுபாட்டுடன் விளையாடி 

இருந்தாலே குறைந்தபட்சம் National A வரை 

நான் போயிருப்பேன். கல்லூரியில் 

படித்தபோது எங்கள் கல்லூரியில் 

நானும் நடராசன் என்ற மாணவரும் 

மட்டுமே சதுரங்கம் ஆடுபவர்கள்.

இருவருமே physics major. 

அது பாபி பிஷர் காலம்.


ஆனால் நான் ஈடுபாடு கொள்ளவே இல்லை.

அகில இந்திய அளவிலான மேட்ச்சுகளில் 

முறையாகப் பங்கேற்று முறையாக

ஆடிஇருந்தால், எங்கள் துறையில்  

(TELECOM) அகில இந்திய அளவில்

பிரகாசித்து இருக்க முடியும். அகில 

இந்திய ரேங்க் இருந்தால் National A, 

National B லெவலுக்குச் செல்வது எளிது.


பணிஓய்வு பெறும் முன்பு கடைசி 

மூன்று நாலு ஆண்டுகளில் எங்கள் 

கோட்டத்தில் சதுரங்கப் போட்டிக்கு 

நடுவராக (Arbiter) இருந்தேன். 

எப்போதுமே round robin முறையில்தான் 

போட்டிகளை நடத்துவேன்.


Round Robin முறை பற்றித் 

தெரிந்தவர்களுக்கு மிகவும் நியாயமான 

சமத்துவ முறை அதுதான் என்று தெரியும். 

Elimination முறையை நான் கையாண்டதே 

இல்லை.


நான் என்னை ஒரு உலக சாலஞ்சராக 

கற்பனை கூடச் செய்து கொள்ள முடியாது.

அதற்கான ஆட்டத்திறனுக்கு வெகுபாதளத்தில்

நான் உட்கார்ந்து இருக்கிறேன்.


அடுத்த பிறவியில் (பிறவி இருந்தால்)

சாலஞ்சராகவும் சாம்பியனாகவும் ஆவேன்.

இந்தப் பின்னூட்டத்தை எழுதுவதற்கு முன் 

ஒரு மினி chess game இணையத்தில் 

ஆடினேன். எழுதும்போது என் 

கண்களைக் கண்ணீர் நிறைக்கிறது. 

           

இன்சுலினைக் கண்டுபிடித்த 

டாக்டர் பான்டிங் (Dr Banting) காப்புரிமை 

கோரவில்லை. வெறும் 1 டாலருக்கு கனடா 

பல்கலைக்கு வழங்கினார்.         


இன்சுலின் பற்றிய டாக்டர் பாண்டிங் பற்றிய 

என்னுடைய குறுங் கட்டுரை இதே முகநூலில் 

உள்ளது. அதைப்  படியுங்கள். 


இல்லை, நண்பரே. ஆனந்தின் 

championship chess career சில ஆண்டுகளுக்கு 

முன்பே முடிவுற்று விட்டது. மாக்னஸ் 

கார்ல்சனை  எதிர்த்து விளையாட 

அதாவது challengerஐ நிர்ணயிக்கும் போட்டி 

நடைபெற்றது. candidates tournament

எனப்படும் அதில் பங்கேற்றார். அது ஒரு 

double round robin போட்டி. துரதிருஷ்ட 

வசமாக ஆனந்த் அதில் தோற்று விட்டார்.

எனவே அவர் சாலஞ்சராக முடியவில்லை.

இத்தோடு அவரின் championship career

முடிந்து விட்டது.


உலக சாம்பியன் போட்டி என்பது இரண்டே 

இரண்டு பேருக்கு இடையில் மட்டும் 

நடக்கும் போட்டி ஆகும். அதாவது நடப்பு 

சாம்பியனுக்கும் சாலஞ்சருக்கும் இடையே 

மட்டும்தான் நடைபெறும். எனவே துபாய் 

போட்டியில் ஆனந்த் இல்லை. 


உலக சாம்பியன் பதவியை 

கார்ல்சன் தக்க வைத்துக் கொள்வதற்கே 

நிகழ்தகவு அதிகம்.

முதல் இடத்தில் உள்ள கார்ல்சனும் 

5ஆம் இடத்தில் உள்ள நெப்போவும் 

மோதட்டும். விளைவைப் பார்ப்போம்.   

    


சரஸ்வதி காலக்சி பற்றி நாலைந்து 

வாக்கியங்கள் எழுதுக. 

முதல் வாக்கியம்: இது இந்திய 

விஞ்ஞானிகளால் கண்டறியப் பட்டது.



போட்டித் தேர்வு எழுதுவோர், IAS தேர்வு 

எழுதுவோர் இக்கேள்விக்கான பதிலை 

அறிந்திருக்க வேண்டும்.

 


இவர் 1923ஆம் ஆண்டுக்கான 

நோபல் பரிசு பெற்றார்.

எந்தத் துறையில் இவருக்கு 

நோபல் பரிசு வழங்கப்பட்டது?

விடை தருக.  

 


உண்மைதான். 1000 ரூபாயை 

கவரில் வைத்துக் கொடுத்தால்தான் 

ஊடகத்தில் செய்தி போடுவான்.

கிருஷ்ணம்மாள் கவர் கொடுப்பாரா? 

கொடுக்க மாட்டாரே!