BCCI தலைவரும் அமித்ஷாவின் புதல்வருமான
ஜெய் ஷா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
(கடந்த ஆண்டு 2021 நவம்பரில் எழுதிய பதிவு)
----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------
மதிப்புக்குரிய ஐயா,
தாங்கள் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்
தலைமைப் பொறுப்பில் இருக்கிறீர்கள்.
கிரிக்கெட் ஆட்டம் அடிக்கடி மழையினால்
தடைப்படும். இதனால் தேவையான ஓவர்கள்
பந்து வீச இயலாமல் போகும்.
இந்நிலையில் டக்வொர்த் லூயிஸ் முறை (LWS)
முறை பின்பற்றப்பட்டு ஆட்டத்தின் முடிவை
அறிவிக்க முடிகிறது. இந்தியாவிலும் உலகிலும்
டக்வொர்த் லூயிஸ் முறை பின்பற்றப் படுகிறது.
டக்வொர்த், லூயிஸ் ஆகிய இருவரும் இங்கிலாந்தின்
புள்ளியியலாளர்கள் (Statisticians). இவர்கள் ஒய்வு பெற்ற
பின் பேராசிரியர் ஸ்டெர்ன் இதை நடத்தி வருகிறார்.
இந்த முறையில் உள்ள பல்வேறு குறைகள்
காலப்போக்கில் வெளிப்படத் தொடங்கின.
இந்த முறையின் குறைபாடுகளால் அதிருப்தி அடைந்த
இந்திய இஞ்சீனியர் வி ஜெயதேவன் என்பவர்
இதற்கு மாற்றாக வேறொரு முறையை உருவாக்கினார்.
அவர் உருவாக்கிய முறை அவரின் பெயராலேயே
VJD முறை (V JAYA DEVAN) முறை என்று அழைக்கப்
படுகிறது.
சுனில் கவாஸ்கர் அவர்கள் VJD முறை சிறப்பாக
இருப்பதை அறிந்து சில போட்டிகளில் VJD முறையை
அறிமுகம் செய்தார். சந்தேகத்துக்கு இடமில்லாத
அளவில் இந்தியாவின் VJD முறை இங்கிலாந்தின்
டக்வொர்த் லூயிஸ் முறையை விடத் துல்லியமானது.
இது பல்வேறு ஆட்டங்களில் நிரூபிக்கப் பட்டு இருக்கிறது.
எனவே இங்கிலாந்து முறையான டக்வொர்த் லூயிஸ்
முறையைக் கைவிட்டு இந்திய முறையான VJD முறையை
உலகம் முழுவதும் கிரிக்கெட்டில் பின்பற்ற வேண்டும்.
முதல் கட்டமாக எதிர் வரும் 2022 முதல் இந்தியாவில்
ஆடப்படும் அனைத்து விதமான கிரிக்கெட் ஆட்டங்களிலும்
போட்டிகளிலும் (Test matches, ODIs, T-20 etc) டக்வொர்த் லூயிஸ்
முறை கைவிடப்பட்டு VJD முறை பின்பற்றப் பட வேண்டும்.
இந்தியாவில் இனி VJD முறைதான் பின்பற்றப்படும்
என்று அரசும் BCCI அமைப்பும் பகிரங்கமாக
அறிவிக்க வேண்டும்.
அடுத்த கட்டமாக உலகெங்கும் எந்த நாட்டில் கிரிக்கெட்
விளையாட்டுப் பட்டாலும், அங்கு இந்திய VJD முறை
பின்பற்றப்பட வேண்டும். இதற்கு BCCI ஆவன
செய்ய வேண்டும்.
தேசபக்தி மிகுந்த பாஜக ஆட்சி நடக்கும்போதும்,
தேசபக்தி மிகுந்த அமித்ஷாவின் புதல்வர்
ஜெய் ஷா அவர்கள் BCCI அமைப்பின் தலைமையில்
இருக்கும்போதும் எந்த எளிய கோரிக்கை
நிச்சயம் நிறைவேறும் என்று நம்புகிறோம்.
********************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக