புதன், 17 நவம்பர், 2021

 மிக்க இளம் வயதில் சதுரங்க கிராண்ட் மாஸ்டர் 

பட்டம் பெற்ற சென்னை தமிழ்ச் சிறுவன்!

ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா GM!

------------------------------------------------------------

பிரக்ஞானந்தா 11 வயது நிரப்புவதற்கு முன்பே 

சர்வதேச மாஸ்டர் (IM = International Master) 

பட்டம் வென்றவர்.


2018ல் கிராண்ட் மாஸ்டர் பட்டமும் வென்றார் 

பிரக்ஞானந்தா.


இவர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றது 

பிரம்மாண்டமான உலக சாதனை.

உலகிலேயே மிக்க இளம் வயதில் கிராண்ட் 

மாஸ்டர் பட்டம் வென்ராவர்கள் இதுவரை 

ஐந்தே ஐந்து பேர் மட்டுமே. அதில் இவரும்

ஒருவர்.


தமது 12 வயது, 10 மாதம், 13 நாளில் 

பிரக்ஞானந்தா கிராண்ட் மாஸ்டர் பட்டம் 

வென்றார். 1980களில் விஸ்வநாதன் ஆனந்த் 

தமது 18 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் 

வென்றது பெரும் வியப்பாக இருந்தது.


இந்த மில்லேனியத்தில் பிறந்த சிறுவர்கள் 

12 வயதிலேயே கிராண்ட் மாஸ்டர் ஆகி 

விடுகிறார்கள்.


இந்தச் சிறுவனைப் பற்றித் தெரிந்து 

கொள்ளுங்கள். இவன் தமிழன். சென்னையில் 

வசித்து வருபவன்.


இச்சிறுவனுக்கு ஒளிமயமான எதிர்காலம் 

வாய்க்கட்டும் என்று நியூட்டன் அறிவியல் 

மன்றம் மனசார வாழ்த்துகிறது.

********************************************* 

 

 2700க்கு மேல் Elo rating பெற்றுள்ள 

சீனியர் கிராண்ட் மாஸ்டர்களை 

இளஞ்சிறுவன் பிரக்ஞனந்தா 

செப்டம்பர் 2017ல் தோற்கடித்தபோது.  


முகநூல் நிறுவனம் தன் பெயரை

meta என்று மாற்றி இணையப் 

புரட்சி செய்கிறது. இது பற்றி வீடியோ 

வெளியிடப் போகிறேன்.


meta குறித்து கட்டுரை எழுத விருப்பம் 

இல்லை.அது மிகுந்த நேர விரையம் 

ஏற்படுத்துகிறது. எனவே ஒரு 8 நிமிட 

வீடியோ வெளியிட்டு நேரத்தை மிச்சம் 

பிடிக்கப் போகிறேன். 

    


Elo Rating என்றால் என்ன?

டக்வொர்த் லூயிஸ் முறை என்றால் என்ன?

VJD முறை என்றால் என்ன?

விடை எழுதுங்கள் வாசகர்களே.




ஈலோ ரேட்டிங் என்றால் என்ன?

------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

---------------------------------------------

இவர்தான் இயற்பியல் பேராசிரியர் அர்ப்பாட் ஈலோ.

ஹங்கேரிக்காரர் அமெரிக்காவில் குடியேறியவர்.

Arpad Elo (1903-1992).


இவர் சதுரங்க வீரர்களின் ஆட்டத் தரவரிசையை 

உருவாக்கினார். (Chess players ratings by Elo).


இன்று உலகில் முதல் இடத்தில் அதிகமான 

ஈலோ ரேட்டிங்கில் இருக்கும் சதுரங்க வீரர் யார்?

உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன்.

இவரின் ஈலோ ரேட்டிங் = 2882.


விஸ்வநாதன் ஆனந்தின் தற்போதைய 

ஈலோ ரேட்டிங் என்ன? அவர் பெற்றிருந்த  

அதிகபட்ச ஈலோ ரேட்டிங் என்ன?    

விடை: தற்போது = 2751.

career highest = 2817. 

 

சதுரங்கத்தின் கடவுள் யார்?

காரி காஸ்பரோவ்.


2800க்கு மேல் ஈலோ ரேட்டிங் பெற்ற 

சதுரங்க வீரர்கள் எத்தனை பேர்?

யார் யார்?


கடைசிக் கேள்விக்கு வாசகர்கள் 

விடை தெரிந்து கொள்ள வேண்டும். 


Physics இல்லாமலோ science இல்லாமலோ 

எந்த விளையாட்டையும்  யாராலும் 

நடத்த முடியாது.


ஒலிம்பிக் போட்டிகளும் ஒருங்கிணைந்த 

அறிவியலும் என்ற என் கட்டுரையை 

(அறிவியல் ஒளியில் வெளியானது)

படித்தீர்களா?


பின்குறிப்பு:

சதுரங்கத்தின் கடவுளை நான் தரிசித்தேன்.

அவரிடம் பேசினேன்.

காரி காஸ்பரோவ் அவர்களைச்  சந்திக்கும் பேறு 

எனக்கு வாய்த்தது. வணங்கினேன் அவரை.

எனது மரியாதையை அன்பைத் தெரிவித்தேன்.  

YouaretheGodofchess என்று அவரிடம் சற்றே 

அதிகரித்த டெசிபெல்லில் கூறினேன்.

அவரின் மனைவியாரும் உடன் இருந்தார்.

சிரித்தார்; விடை பெற்றுக் கொண்டோம்.


2013 நவம்பரில் சென்னையில் நடந்த 

 அந்த இரண்டு நிமிடச் சந்திப்பு எனக்குப் 

பெரும் நிறைவையும் பெருமிதத்தையும் 

தந்தது; இன்னமும் தருகிறது. ஆனந்த் 

vs கார்ல்சன் உலக சாம்பியன் போட்டியைப் 

பார்க்க அவர் சென்னை வந்திருந்தபோது 

இந்தப் பேறு எனக்கு வாய்த்தது.



   


---------------------------------------------------- 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக