ஒரு சிறுமியை பாலியல் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறான் ஆசிரியராக இருந்த ஒரு கொடிய மிருகம். இதை பள்ளி நிர்வாகத்தின் கவனத்திற்கும் அந்த ஆசிரியரின் மனைவி மற்றும் குடும்பத்தினர் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளனர். அந்த மிருகத்தின் குடும்பம் மௌனம் சாதிக்கிறது. பள்ளி நிர்வாகமோ இத்தகைய பாதிப்புக்கு காரணம் அந்தப் பெண்தான். அவள் இதற்கு இடம் கொடுத்ததால் தான் இவ்வாறு நடந்தது என்று அவளையே குற்றம்சாட்டும் வகையில் நடந்து கொண்டுள்ளது.
மாண்புமிகு அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் மாண்புமிகு முதலமைச்சரும் நேரடி கவனம் செலுத்தி குற்றம் செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோருகிறோம்.
1) இதில் வேடிக்கை என்னவென்றால் இன்று காலை அந்த பிரபல பெண்கள் குழுத் தலைவி இப்போராட்டத்தை ஆதரிப்பதாய் ஒரு பதிவிட்டிருந்ததைப் பார்த்தேன். பல பெண்களைக் குழுவாகச் சேர்த்து வைத்துக் கொண்டு, பல ஆண்கள் அந்தப் பெண்களது அந்தரங்கங்களைப் பார்த்து அப்பெண்களை பாலியல் பாதிப்புக்கு உள்ளாக்க காரணமாய் இருந்திருக்கிறார். அத்தகைய பெண்கள் அதை வெளிப்படையாக பொது ஊடகங்களில் சொல்லிய போது பகிரங்கமாக அவர்களை முகநூலில் மிரட்டியிருக்கிறார். அந்த screen shot களை எனது முகநூலில் நானே பதிவிட்டிருந்தேன் என்பது பலரும் அறிந்ததே. இந்தக் குறிப்பிட்ட பள்ளி தலைமை ஆசிரியர் செய்ததை விட பல மடங்கு ஆபத்தான மோசமான பாதிப்புகளைப் பெண்களுக்கு ஏற்படுத்தி அவர்களை மிரட்டிவிட்டு இன்று இப்படி வேஷம் போடுபவளை இன்னமும் இங்கிருக்கும் பெண்ணியலாளர்கள் பெண்ணிய அமைப்புகள் விட்டு வைத்திருக்கின்றனவே? அத்தகைய கூட்டத்திற்கு ஆதரவாக நின்று பலபெண்கள் பாதிக்கப்படுவதற்கு இங்கிருக்கும் தோழர்கள் இளங்கோவன் கீதா மற்றும் கீதா இளங்கோவனும் அந்தக் கூட்டத்தை promote செய்ததும் ஒரு காரணம் என்றும் ஏற்கனவே பதிவு செய்திருந்தேன்.
2) பாலியல் பாதிப்புக்கு உள்ளாகும் பெண்களுக்கு வயதின் அடிப்படையில் தான் நியாயம் கேட்கப்பட வேண்டுமா? எந்த வயதுப் பெண்களின் உயிர்/ பாதிப்பு என்பதில் வரையரை வைத்திருக்கிறதா இன்றைய புரட்சிகர முற்போக்கு இயக்கங்கள்?
அந்தக் குழுவால் பாதிப்புக்கு உட்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கைகளுக்கு செல்கிறேன் என்ற பெண்ணை, இந்தப் பள்ளியின் நிர்வாகம் கேள்வி கேட்பது போலத்தானே அன்று மனிதி அமைப்பும் வசுமதியும் கேள்வி எழுப்பி துன்புறுத்தினர்?
3) பாதிக்கப்பட்ட பெண் வெலை பார்க்கும் அரசுத் துறைக்கு மொட்டைப் புகார் மற்றும் fake identity யில் online ல் மொட்டை கடுதாசி எழுதியிருந்ததையும் நான் பதிவிட்டிருந்தேன். இவையெல்லாம் இந்தப் பெண்ணியலாளர்கள், பெண்ணிய அமைப்புகள், சமூக ஆஆஆஆஆஆஆர்வலர்களுக்குத் தெரியாதா? அல்லது தெரிந்தும் கள்ள மொளனம் காக்கின்றனரா? பாதிக்கப் பட்ட பெண்களை இவ்வளவு துன்புறுத்துவதைப் பார்த்தும் இவர்கள் மௌனமாய் இருக்கிறார்கள் என்றால் இவர்களெல்லாம் மனிதர்கள் தானா?
4) "52 வயது கிழவியை கையைக் காலை கட்டிவிட்டு ரேப்பா செய்தார்கள்? அவளுடைய consent இல்லாமலா அவளை பாலியல் ரீதியாக அணுகினார்கள்?" என்று எக்காளமிட்ட கூட்டத்துடன் கைகோத்து ஆடியவர் தானே இந்த வசுமதி? மேலே quoted வரிகளை யார் பேசினார்கள்? என்கிற ஆதாரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. வசுமதியை நான் தான் அனுப்பினேன் என்று பெருமையாக பதிவிட்டவர் தானே சமூஊஊஊஊக மருத்துவர் ஷாலினி? அதற்கு உடந்தையாக இருந்தார்களே மனிதி, புதிய குரல்,ஜனநாயக மாதர் சங்கம்,தி.வி.க மற்றும் பல முற்போக்கு அமைப்புகள்?
5) ஒரு பெண்ணை நிர்*வாணமாகப் புகைப்படமெடுத்து வெளியிட்டுள்ளனர் தங்களை பெரியாரிஸ்டுகள் என்று சொல்லிக் கொள்ளும் சிலர் என்பதை புதியகுரல் ஓவியாவிடம் அந்த படத்தையும் காட்டியபோது என்ன செய்தார்? ச்சீ ச்சீ இப்படியும் ஒரு பெண் நிர்*வாணமாக நிற்கிறாள் என்றால் அந்தப் பெண்ணுக்கும் அப்படத்தை எடுத்தவனுக்கும் ஏதோ தனிப்பட்ட பாலியல் தொடர்பு உள்ளது என்றல்லவா இங்கிருக்கும் அனைத்து பெண்ணியலாளர்கள், பெண்ணிய அமைப்புகள், புரட்சிகர முற்போக்கு அமைப்புகள்/இயக்கங்கள் ஆகியோர் பேசினர்? அப்படியே தனிப்பட்ட விவகாரம் என்றாலும் சமூக ஊடகத்தில் நிர்*வாணப் படத்தை வெளியிட்டதை நியாயப் படுத்துகிறார்களா இவர்கள்? நியாயப் படுத்தவில்லையென்றால் அந்தப் படம் எப்படி யாரால் வெளிவந்தது என்று கேள்வி எழுப்பவதற்குக் கூட சுரணையற்றவர்களா இவர்கள்? கேவலம்!
6) அக்குழுவில் பெண்களது அந்தரங்கங்களை பதிவு செய்யவைத்து அப்பெண்களை பாதிப்புக்கு உள்ளாக்குகின்றனர் என்ற தகவல்கள் வெளியே வந்தன. அதற்கு ஆதாரமாக பெண்கள் பேசிக் கொண்ட வீடியோ, புகைப்படங்கள் வெளிவந்தன. அதனால் பெண்கள் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்ளலாம் அவர்களை பாதுகாத்து அரசியல் படுத்த முற்பட்டார் வசுமதி என்று பதிவிட்டார் மருத்துவர் ஷாலினி. ஆனால் அக்குழுவால் பாதிக்கப்பட்டு தான் மிரட்டப்பட்ட அத்தனை screen shot களையும் சம்மந்தபபட்ட பெண் வெளியிட்ட போது கண்ணிருந்தும் காணாதவர்களாகவும், செவியிருந்தும் கேளாதவர்களாகவும், உணர்ச்சியற்ற ஜடங்களாக உயிரற்ற பிணங்களைப் போலல்லவா நடந்து கொண்டார்கள் இங்கிருக்கும் அமைப்பு/இயக்கம் சார்ந்தவர்கள் ?
7) சம்மந்தப்பட்ட பெண் சட்ட நடவடிக்கைக்கு போனதற்கும் எகத்தாளம் நையாண்டி செய்தார் வசுமதி. அந்தப் பெண் உயிரை மாய்த்துக் கொண்டிருந்தால் தான் உண்மையைப் புரிந்து கொண்டிருப்பார்களோ?
அந்தப் பெண்கள் குழுவில் நடந்தவற்றை பார்த்துக் கொண்டிருந்த கோவையைச் சேர்ந்த பிரியா மனோகரன், சத்யா மருதாணி போன்றவர்கள் அந்தக் குழுவில் நடந்த உண்மைகளும் பாதிக்கப்பட்ட பெண் மிரட்டப் பட்ட பதிவுகளையும் பார்த்துக் கொண்டு தான் இருந்தனர். இப்பொழுது தெருவில் இறங்கிப் போராடும் இவர்களை வெகுவாகப் பாராட்டுகிறேன். அந்தப் பெண்கள் குழுவால் பாதிக்கப்பட்டு மிரட்டப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக இவர்கள் நிற்காதது ஏன்? சத்யா மருதாணி மற்றும் சித்ரா தமிழினி ஆகியவர்களின் பெயர்களைச் சொல்லி பகிரங்கமாக ஆடியோ லைவில் மிரட்டினாரே அந்த கும்பல் தலைவி? அதை எல்லோரும இப்போது மறந்து விட்டார்களா? ஏன் இந்த ஓரவஞ்சனை? இதற்குப் பெயர் தான் சந்தர்ப்பவாத அரசியலா? அந்த கும்பல் தலைவி பேசிய ஆடியோ வீடியோ ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
9) வெட்கக் கேடு! இப்பொழுது பொன்தாரிணிக்காக ஆளாளுக்கு மீடியாக்களில் பொங்கி எழுவார்கள் பாருங்கள் அமைப்புகள்/இயக்கங்களைச் சேர்ந்தவர்கள். ஆனால் அந்த கும்பல் தலைவியையும், அந்த கும்பலின் மிரட்டலைப் பார்த்துக் கொண்டு அதற்குத் துணை நின்ற வசுமதி போன்றவர்களையும் தூக்கிப் பிடித்துக் கொண்டாடுவார்கள்.
பதிவு மிகவும் நீண்டு போகிறது
SARADA R JAYA
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக