வியாழன், 4 நவம்பர், 2021

BSNL மீட்கப் படுகிறது! மீட்பர் யார்?

------------------------------------------------------------------------- 
பி இளங்கோ சுப்பிரமணியன்
முன்னாள் மாவட்டச் செயலர், NFTE, சென்னை.
வெளியீடு: நியூட்டன் அறிவியல் மன்றம்.
------------------------------------------------------------------------
மீட்பர் யார்?
-------------------
நல்வாய்ப்பாக BSNL இன்று மீட்கப் படுகிறது.ஆனால்
மீட்பர் யார்?

மீட்பர் வேறு யாருமல்ல, அரசுதான்! மோடி அரசுதான்!
BSNLன் எந்த ஒரு தொழிற்சங்கமும் மீட்பரின் பாத்திரத்தை
வகிக்கவில்லை! இதுதான் வெட்ககரமான உண்மை!

அதிகபட்ச நாணத்துடனும் குறைந்தபட்ச நேர்மையுடனும்
BSNL தொழிற்சங்கங்கள் இந்த உண்மையை ஒப்புக்
கொள்ள வேண்டும். சங்கங்கள் என்றால் NFTE, BSNLEU
SNEA, AIBSNLEA ஆகிய பிரதான சங்கங்களே. சங்கங்கள்
ஒப்புக் கொள்ள மறுத்தாலும் BSNLல் இன்று இருக்கும்
1.6 லட்சம் பேரின் மனச்சாட்சிக்கு இந்த உண்மை தெரியும்.

BSNLஐ மீட்கும் முயற்சிகளை,  BSNLன் ஒட்டு மொத்தப்
புத்தாக்கத்தை (revival plan including VRS) சங்கங்கள்
தங்களின் சொந்த முயற்சியில் கொண்டு வரவில்லை.
மீட்பதற்கான எந்தவொரு தீர்வும் சங்கங்களிடம் இல்லை.
ஆனால் அரசு சும்மா இருக்கவில்லை. அது ஒரு தீர்வைக்
கண்டுபிடித்தது. அதை நடைமுறைப் படுத்துகிறது.
The entire revival plan including the VRS is absolutely the brain child
of the government. இதுதான் முக்கால உண்மை (universal truth).

புத்தாக்கத் திட்டம் (Revival plan)
-----------------------------------------------
அ) VRS திட்டத்தின் Ex Gratia வழங்கும் செலவு = ரூ 17,169 கோடி.
ஆ) Pensionary benefits preponed வழங்கும் செலவு = ரூ 12,768 கோடி.
இ) 4G அலைக்கற்றை BSNLக்கு = ரூ 14,115 கோடி
ஈ) 4G அலைக்கற்றை MTNLக்கு = ரூ 6295 கோடி
உ) அலைக்கற்றைக்கான GST வரி = ரூ 3674 கோடி.
ஊ) BSNL, MTNLக்கு மேலும் வழங்கும் நிதி = ரூ 15,000 கோடி.

இந்த ரூ 15,000 கோடியை உறுதிப் பத்திரங்கள் மூலமாக
(Sovereign guarantee bonds) மத்திய அரசு வழங்கும்.
மேற்கூறிய அ), ஆ), உ) ஆகிய மூன்று இனங்களுக்கும்
பட்ஜெட்டில் ரூ 33,611 கோடி நிதி ஒதுக்கப் படுகிறது.

அதாவது VRSக்கு ஆகும் செலவுக்கும் பென்சன் வழங்கும்
செலவுக்கும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப் படுகிறது.
இ) மற்றும் ஈ) இனங்களுக்கு முறையே Equity infusion
மூலமும், preference shares மூலமும் மத்திய அரசு
நிதி வழங்கும்.
(பார்க்க: மக்களவையில் unstarred question எண்: 546க்கு
அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் பதில்; 20 நவம்பர் 2019).

இப்படி ஒரு மீட்புத் திட்டத்தைப் பற்றி சங்கங்கள்  ஏன்
சிந்திக்கவில்லை? காரணம் இரண்டு. ஒன்று: இத்தகைய
சிந்தனை அவர்களின் அறிவெல்லைக்கு அப்பாற்பட்டது.
அடுத்து, VRS என்றாலே அதை எதிர்க்க வேண்டும் என்ற
பழமைவாத முன்முடிவு. VRSஐ உள்ளடக்காத எந்த ஒரு
மீட்புத் திட்டமும் இந்த உலகில் கிடையாது என்ற
உண்மை அவர்கள் அறியாதது.

எனவேதான் Proactiveஆகச் செயல்பட வேண்டிய
சங்கங்கள் கையைப் பிசைந்து கொண்டு நிற்பதையும்
அரசுக்கு வால் பிடித்துக் கொண்டு திரிவதையும்
அனுதினமும் கண்ணாரக் கண்டு வருகிறோம்.

புத்தாக்கத் திட்டத்தை தங்களின் சொந்த வலிமையில்
சாதித்துக் காட்டாத சங்கங்கள் அரசின் கருணை
மற்றும் நல்லெண்ணத்தில் ஊழியர்களின் தலைவிதியை
வைத்து விட்டன என்று வரலாறு பதிவு செய்கிறது.

BSNL உயிரோடு இருக்க வேண்டும் என்றும் அது வாழ
வேண்டும் என்றும் மோடி அரசு இன்று விரும்புகிறது.
ஆனால் இதே மனநிலையில் மோடி அரசு தொடர்ந்து
இருக்குமா? GOK, அதாவது God only knows! எதிர்காலத்தில்
BSNL தேவையில்லை என்று மோடி அரசோ அல்லது வேறு
அரசோ முடிவெடுத்தால், அன்று ஊழியர்களின் நிலை
என்ன? சங்கங்களிடம் பதில் உள்ளதா? இல்லை!
(God only knows means Nobody knows. கடவுள் இருக்கிறார்
என்று பொருள் அல்ல).

களையெடுப்புக்குப் பதில் தங்கக் கைகுலுக்கல்!
----------------------------------------------------------------------------
ஒருவேளை அ) BSNLஐ மூடி விடுவது என்றோ அல்லது
ஆ) ஆட்குறைப்புச் செய்து முதல் கட்டமாக 50,000 பேரை
வெளியேற்றுவது  என்றோ மோடி அரசு முடிவெடுத்து
இருந்தால் என்ன நடந்திருக்கும்?

அ) மூடுவது என்றால், OFFICIAL LIQUIDATOR வந்திருப்பார்.
அவர் BSNLஐ இழுத்து மூடி, எல்லோரையும் வெளியேற்றி,
இருக்கும் சொத்துக்களைக் கணக்கெடுத்து அரசிடம்
கொடுத்திருப்பார். அப்போது எல்லோரும்
Liquidator பற்றியே பேசிக் கொண்டிருப்போம். Liquidator
என்ற புதிய சொல் BSNLல் பேசுபொருள் ஆகியிருக்கும்.

VRS என்னும் தங்கக் கைகுலுக்கல் மூலம்
சாந்தியும் சமாதானமும் நிரம்பி வழிய வீட்டுக்குச்
செல்கிறோம். ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.

ரூ 40,000 Basic Pay உள்ள ஒரு அதிகாரி 152 சத DAவுடன்
VRS 2019ல் செல்கிறார். அவர் Ex Gratiaவாக மட்டும்
ஓராண்டுக்கு ரூ 9 லட்சம் பெறுகிறார். இந்த அதிகாரியின்
வயது 55 என்றால், 60 வயது வரையிலான ஐந்தாண்டு
காலத்திற்கு  அவர் Ex Gratiaவாக ரூ 45 லட்சம் பெறுவார்.
அத்துடன் மாதந்தோறும் Basic Pensionஆக ரூ 50,400 பெறுவார்.
கிராச்சுட்டி commutation போன்றவை பின்னர் கிடைக்கும்.
இதில் யாருக்கும் எந்த இழப்பும் இல்லை!

******************************************************

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக