சனி, 20 நவம்பர், 2021

 அன்றும் இன்றும்!

உலக சதுரங்க சாம்பியனை முடிவு செய்வது எப்படி?

--------------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

---------------------------------------- 

நவம்பர் 2013ல் சென்னையில் நடந்த 

ஆனந்த்-கார்ல்சன் உலக சாம்பியன் போட்டியில் 

யாருக்கு வெற்றி என்பது பின்வருமாறு 

தீர்மானிக்கப் பட்டது.


அதிக பட்சம் 12 ஆட்டங்கள் அனுமதிக்கப் 

படுகின்றன. இதில் யார் முதலில் 6.5 புள்ளிகள் 

எடுக்கிறாரோ அவரே வெற்றி பெற்றவர் ஆவார்.


ஆனந்த்-கார்ல்சன் போட்டியில் 10 ஆட்டங்கள் 

முடிந்தபோதே கார்ல்சன் 6.5 புள்ளிகள் பெற்று 

விட்டார். எனவே அவர் உலக சாம்பியன் 

ஆகி விட்டார்.


தற்போது 2020க்கான உலக சதுரங்க சாம்பியன் 

போட்டி துபாயில் 2021 நவம்பர் 24-டிசம்பர் 16

தேதிகளில் நடைபெறுகிறது.


இதில் நடப்பு சாம்பியன் கார்ல்சனை, சாலஞ்சர்   

நெப்போ (ரஷ்யா) எதிர்த்து ஆடுகிறார். இதில் 

சாம்பியனைத் தீர்மானிக்கும் விதி இம்முறை 

மாற்றப் பட்டுள்ளது.


இதன்படி அதிக பட்சம் 14 ஆட்டங்கள் நடைபெறும்.

இதில் யார் முதலில் 7.5 புள்ளிகள் பெறுகிறாரோ 

அவரே வெற்றியாளர்.


********************************************************  

    

பின்குறிப்பு:

இந்தப் பதிவில் சொல்லப்பட்ட விஷயங்களை 

எந்த ஒரு தமிழ்ப் பத்திரிகையையோ அல்லது 

தமிழ் டிவியோ சொல்லாது. எனவே இங்கு நான் 

கூறியுள்ள தகவல்களின் அருமையை 

உணருங்கள்.


இந்தப் பதிவு அனைவருக்குமானது அல்ல.

சதுரங்க ஆர்வலர்களுக்கு மட்டுமேயானது இது.


   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக