வெள்ளி, 5 நவம்பர், 2021

 இந்தியாவின் சுதேசித் தயாரிப்பான

கோவாக்சின் தடுப்பூசிக்கு உலகின் 

பல்வேறு நாடுகள் அங்கீகாரம் வழங்கின.


இதைத் தொடர்ந்து ஐநா சபையின் 

WHO என்னும் உலக சுகாதார அமைப்பு 

கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் 

வழங்கி உள்ளது.  


இதுவரை 100 கோடி டோஸ்கள் தடுப்பூசி

இந்தியாவில் போடப்பட்டு உள்ளது.

--------------------------------------------------------

 கொரோனா என்பது 2019ல் உலகில் 

தோன்றிய முற்றிலும் புதிய நோய்.

எனவே இதற்கான தடுப்பு மருந்து 

இந்த நோய்  தோன்றிய பின்னரே

கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதனால் 

எல்லாத்  தடுப்பூசிகளுக்கும் நெருக்கடி

நிலைக் கால உரிமங்களே 

(EUL = Emergency Use License) வழங்கப் 

பட்டுள்ளன.


நம் நாட்டுத் தயாரிப்பான கோவாக்சினுக்கு

மட்டுமல்ல, எல்லா நாட்டுத் தயாரிப்புகளுக்குமே 

நெருக்கடி நிலைக்கால உரிமங்கள்தான் 

WHO அமைப்பில் வழங்கப்பட்டு வருகின்றன.


கொரோனா குறித்து R&D பணிகள் நடந்து 

கொண்டே இருக்கின்றன.அவை முடிந்து 

கொரோனா இதுதான் என்று திட்ட வட்டமாக 

வரையறுத்த பின்னரே நிரந்தரமான 

தடுப்பூசிச் சான்றிதழ் வழங்கப்படும்.


    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக