சனி, 20 நவம்பர், 2021

 சதுரங்கம் 

-----------------

சில ஆண்டுகளுக்கு முன்பு சதுரங்கம் குறித்து 

ஓர் அறிவியல் கட்டுரை எழுதினேன். அறிவியல் 

ஒளி ஏட்டில் அது பிரசுரமானது.


அந்தக் கட்டுரையை எழுதும்போது நிறைய 

இடர்ப்பாடுகளை சந்தித்தேன்.சதுரங்க அறிவியல் 

சார்ந்து தமிழில் சொற்கள் அறவே இல்லை.


Queen side castling என்பது பற்றி ஓரிரு வாக்கியங்கள் 

எழுத வேண்டும். எழுத இயலவில்லை.


queen's gambit declined என்பது பற்றியும் ஓரிரு

வாக்கியங்கள் எழுத வேண்டும். தமிழில் சொல் 

இல்லை.


எட்டுக்கோடித் தமிழர்களின் பொண்டாட்டிமார்கள் 

ஒருசேரத் தாலியறுத்தாலும் மேற்கூறிய 

விஷயங்களை தமிழில் எழுதுவது கடினம்.   


என்னால் தேவையான புதிய சொல்லை உருவாக்கி

எழுத முடியும். ஆனால் படிக்கும் வாசகர்களுக்குப் 

புரியாமல் போகும்.


ஆங்கிலத்தில் இந்தத் தொல்லை இல்லை.

ஏன்? ஆங்கிலம் உற்பத்தி மொழியாக 

இருக்கிறது. உற்பத்தி மொழி என்பது 

ஒரு மார்க்சியக் கருத்தாக்கம். அது 

புரியவில்லை என்றால் பயனில்லை.


இந்தியாவின் பொருள் உற்பத்தி ஆங்கிலத்தில் 

நடைபெறுகிறது. இந்தியாவின் பொருள் உற்பத்தி 

மொழி ஆங்கிலம் ஆகும்.


தமிழ் உற்பத்தி மொழியாக இல்லை. இதனால் 

தமிழில் சொல் இல்லை. நிலவுடைமைச் சமூக 

அமைப்பில் உயர்ந்து விளங்கிய தமிழ், 

முதலாளியச் சமூகத்தில் தனது மதிப்பை 

இழந்தது. உற்பத்தி மொழியாக ஆங்கிலம் 

ஆகிவிட்டதனால், தமிழ் அரியணையில் 

இருந்து கீழே இறங்கி தரையில் உட்கார்ந்து 

கொண்டு இருக்கிறது.  

  

ஒரு விஷயத்தைக் குறிப்பதற்கு ஆங்கிலத்தில் 

ஆயிரமாயிரம் சொற்கள்!

கிரிக்கெட்டில் நடுவரை அம்பயர் என்கிறான்.

கால்பந்தில் நடுவரை ரெஃபரி (Referee) என்கிறான்.

சதுரங்கத்தில் ஆர்பிட்டர் (Arbiter) என்கிறான்.

தமிழில் அம்பயர் என்றாலும் 

ரெஃபரி என்றாலும் 

ஆர்பிட்டர் என்றாலும் 

நடுவர் என்றுதான்.தாலியறுக்க வேண்டும்.


இன்னொரு சொல்லை பார்ப்போம்.

Chief என்ற சொல். Congress chief, DMK chief 

என்பார்கள். தமிழில் தலைவர் என்கிறோம்.


President  என்றாலும் தமிழில் தலைவர்தான்

Chairman என்றாலும் தலைவர்தான்.

Leader என்றாலும் தலைவர்தான்.


என்னுடைய 17ஆவது வயதில் இருந்து நான் 

மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன்.

அறிவியலை தமிழில் எழுதுவதும் கடினம்.

மொழிபெயர்ப்பதும் கடினம். காரணம் 

தமிழ் என்பது உற்பத்தியில் இல்லாத மொழி.

 .     

இவ்வளவு கஷ்டங்களுக்கு இடையிலும் தற்போது 

சதுரங்கம் பற்றி நிறைய எழுதியுள்ளேன் முகநூலில்.

இது முகநூல் வாசகர்களுக்காக.


சதுரங்கத்தில் நான் உருவாக்கிய 

தமிழ்ச் சொற்கள்!

Queen;s gambit accepted/declined = 

ராணியின் பலிப்பொருள் ஏற்பு/மறுப்பு.


எனது சதுரங்கக் கலைச்சொல் ஆக்கம்!

King side castling = ராஜாவின் கோட்டைக் காப்பு.

Queen side castling = ராணியின் கோட்டைக் காப்பு.   



ராஜாவின் கடிமதில் என்றும் 

ராணியின் கடிமதில் என்றும் கூறலாம்.

அது சாதாரண மக்களுக்குப் புரியாது.


கடிமதில் = காவல் மிக்க மதில். 

கடி என்ற சொல் பல பொருளைத் 

தரும் சொல்லாகும்.


கடியென் கிளவி காப்பே கூர்மை 

விரையே விளக்கம் அச்சம் சிறப்பே.  


சுருக்கமாக இருக்கிறது. உங்களுக்கும் 

எனக்கும் நம் காலத் தலைமுறைக்கும் 

கடிமத்தில் என்றால் புரியும். 


இன்றைய தலைமுறை மிக்க குறைந்த 

பலவீனமான தமிழறிவு உடையோருக்கு 

ஏற்ற விதத்தில் கோட்டைக்காப்பு என்ற 

சொல்லை உருவாக்கி உள்ளேன்.

   

தமிழுக்கு அமுதென்று பேர் என்று சொன்னால் 

இன்றைய தலைமுறைக்குப் புரியவில்லை!

எனவே தமிழுக்கு அல்வான்னு பேரு என்று 

எளிமையிலும் எளிமையாக எழுதுகிறேன்!

-------------------------------------------------------------- 

நியூட்டன் அறிவியல் மன்றம் 

---------------------------------------------------------

சதுரங்கத்தைத் தமிழில் எழுதி வருகிறேன் 

நான். வேறு எவரும் எழுதவில்லை. நான் 

மட்டுமே எழுதி வருகிறேன்.


எனவே சதுரங்கம் பற்றிய கலைச்சொற்கள் 

பலவற்றை ஆக்கி உள்ளேன்.

உதாரணத்துக்கு ஒன்றிரண்டு.


Queen's gambit accepted = ராணியின் பலிப்பொருள் ஏற்பு.

Queen's gambit declined = ராணியின் பலிப்பொருள் மறுப்பு.


King side castling = ராஜாவின் கோட்டைக் காப்பு.

Queen side castling = ராணியின் கோட்டைக் காப்பு.   

மிக எளிமையான தமிழாக்கம் இது.


King side castling = ராஜாவின் கடிமதில் 

Queen side castling = கடிமதில்.

இப்படியும் கூறலாம்.ஆனால் இது 

அனைவருக்கும் புரியாது.


கடிமதில் = காவல் மிக்க மதில். 

கடி என்ற சொல் பல பொருளைத் 

தரும் சொல்லாகும்.


கடியென் கிளவி காப்பே கூர்மை 

விரையே விளக்கம் அச்சம் சிறப்பே.  


என் காலத் தலைமுறைக்கும் 

கடிமத்தில் என்றால் புரியும். 

இன்றைய இங்கிலீஷ் மீடியம் பிள்ளைகளுக்கு?


இன்றைய தலைமுறை மிக்க குறைந்த 

பலவீனமான தமிழறிவு உடையோருக்கு 

ஏற்ற விதத்தில் கோட்டைக்காப்பு என்ற 

சொல்லை உருவாக்கி உள்ளேன்.


தமிழுக்கு அல்வான்னு பேரு!

*********************************************   


 




  

   


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக