வெள்ளி, 19 நவம்பர், 2021

 சதுரங்க வினாடி வினா:

வினாக்களும் விடைகளும்!
------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------
வினாக்கள்:
---------------
1) இந்தியாவில் இன்றைய தேதியில் எத்தனை
சதுரங்க கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளனர்?

2) உலக சதுரங்க நடப்பு சாம்பியன் யார்?

3) உலக சதுரங்க சாம்பியன் போட்டி எத்தனை
ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும்?

4) இந்தியா தனது சதுரங்க முதல் கிராண்ட்
மாஸ்டரை எந்த ஆண்டில் பெற்றது? யார் அவர்??

5) 1948க்குப் பின்னரான உலக சதுரங்க
சாம்பியன்கள் எவரேனும் 5 பேரைக் கூறுக.

6) விஸ்வநாதன் ஆனந்துக்கு முன், சர்வதேச
அளவிலான போட்டிகளில் விளையாடிய
இந்திய சதுரங்க வீரர் யார்?

7) உலகிலேயே மிகக் குறைந்த வயதில் சதுரங்க
கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றவர் யார்?
எந்த நாட்டவர்? எந்த வயதில் (ஆண்டு,மாதம்)
பட்டம் வென்றார்?

😎 சதுரங்கத்தில் எந்தெந்த நிலைமைகளில்
டிரா (draw) ஏற்படும்?

9) 2021 நவம்பரில் துபாயில் நடைபெறும்
உலக சதுரங்க சாம்பியன் போட்டியில்
நடப்பு சாம்பியனை எதிர்த்து ஆடப்போகும்
சாலஞ்சர் (challenger) யார்? எந்த நாட்டவர்?

10) உலக சதுரங்க சாம்பியன் போட்டியின்
முடிவு எவ்வாறு தீர்மானிக்கப் படுகிறது?

சதுரங்க வினாடி வினா:
-------------------------------
விடைகள்:
------------
1) இந்தியாவில் 72 கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளனர்.

2) நடப்பு உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன் (நார்வே)

3) இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை
நடைபெறும் உலக சாம்பியன் போட்டி
இரட்டைப்படை ஆண்டில் நடைபெற வேண்டும்.
தற்போதைய போட்டி 2020ஆம் ஆண்டுக்கானது.
கொரோனா காரணமாக 2021ல் நடைபெறுகிறது.

4)1988ல் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர்
ஆனார் விஸ்வநாதன் ஆனந்த்.

5) 1948க்குப் பின்னர், அதாவது FIDE அமைப்பு
செயல்படத் தொடங்கிய பிறகு, உலக
சாம்பியன்கள்: பாபி ஃபிஷர், அனடோலி கார்ப்போவ்,
காரி காஸ்பரோவ், விஸ்வநாதன் ஆனந்த்,
மாக்னஸ் கார்ல்சன்.

6) மானுவல் ஆரன், தமிழர், தூத்துக்குடி ஊரினர்,
IM (International Master) விருது பெற்றவர்.
ஆனால் GM விருது ஏறவில்லை.

7) மிக்க இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம்
வென்றவர் அபிமன்யு மிஸ்ரா. இவரின் பெற்றோர்
இந்தியர்கள். எனினும் அமெரிக்காவில் குடியேறி
குடியுரிமை பெற்றதால் அமெரிக்கர்கள்.
தமது 12 வயது, 4 மாதம், 25 நாளில் அமெரிக்கரான
இவர் கிராண்ட் மாஸ்டர் ஆனார். இவரின் பிறந்த
தேதி:பெப்ரவரி 5ஆம் தேதி, 2009.

இதற்கு முன்பு செர்ஜி கர்ஜகின் என்னும் சிறுவன்தான்
மிக்க இளம் வயதில், 12 வயது 7 மாதத்தில் GM ஆகி
இருந்தார். 19 ஆண்டுகளாக நீடித்த இந்த
ரெக்கார்டை அபிமன்யு மிஸ்ரா முறியடித்தார்.
8) பின்வரும் 3 நிலைமைகளில் சதுரங்கத்தில்
டிரா ஏற்படும்.
அ) ஆட்டக்காரர்கள் பரஸ்பர சம்மதத்துடன்
டிரா செய்தல்.
ஆ) STALEMATE which means the King has no legal
move possible though he is not under any check.
இ) perpetual check. (இது பற்றி வாசகர்களே முயன்று
அறிந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன்).

9) சாலஞ்சர் ரஷ்ய நாட்டவரான நெப்போ.
இவரின் முழுப்பெயர் Ian Alexandrovich Nepomniachtchi.

10) உலக சாம்பியனைத் தீர்மானிக்கும் முறை:
உலக சாம்பியனும் சாலஞ்சரும் அதிகபட்சம்
14 ஆட்டங்கள் ஆடுவார்கள்.இது classic chess ஆகும்.
யார் முதலில் 7.5 புள்ளிகள் பெறுகிறார்களோ
அவரே வெற்றியாளர்.

இருவரும் தலைக்கு 7 புள்ளிகளுடன் சமநிலையில்
இருந்தால் டை பிரேக்கர் ஆட்டங்கள் மூலம்
முடிவு காணப்படும்.
------------------------------------------------------------
பின்குறிப்பு:
1) பெற்றோர்கள் சதுரங்கம் பற்றி அறியாமல்
இருக்கலாம். உங்கள் பிள்ளைகளை
இந்த வினாடி வினாவில் பங்கு பெற வையுங்கள்.

2) வாசகர்களிடம் இருந்து போதிய ஆதரவு இல்லாத
காரணத்தால், சதுரங்க வினாடி வினாவை
இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். ஆதரவு
இருந்தால், பின்னர் பார்ப்போம்.
************************************************************** .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக