புதன், 17 நவம்பர், 2021

 தனித்தமிழ் என்று பேசும் தமிழின் பகைவர்கள்!

மொழியின் இயக்கம் அறியாத தற்குறிகள்!

இவர்கள் உயிர் வாழத் தகுதியற்றவர்கள்!

----------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

--------------------------------------------------

பஸ் வருகிறது என்று எழுதினான் பையன்.

தப்பு தப்பு, பஸ் என்று எழுதக் கூடாது. 

ஸ் என்பது கிரந்த எழுத்து. எனவே தமிழ் 

மரபுப்படி, பசு வருகிறது என்று எழுத வேண்டும் 

என்று திருத்தினான் தகப்பன். தனித்தமிழ்த் 

தகப்பன். 


பசு வருகிறது என்று எழுதிய நோட்டை 

வகுப்பில் ஆசிரியரிடம் காட்டினான் மாணவன்.

பையனின் முதுகுத்தோலை உரித்தார் ஆசிரியர்.

நிற்க.


ஹில்பெர்ட் என்றால் யார் என்று தெரியுமா?

தெரியாது. டேவிட் ஹில்பெர்ட் என்பவர் 19ஆம் 

நூற்றாண்டில் பிறந்த ஜெர்மன் கணித மேதை.

தமிழ்நாட்டில் லட்சத்தில் ஒருவருக்கு ஹில்பெர்ட்டைப் 

பற்றித் தெரியும். 


சில மாதங்களுக்கு முன், உலகின் Top Ten கணித

மேதைகளைப் பற்றி அறிவியல் ஒளி ஏட்டில் ஒரு 

நீண்ட கட்டுரை எழுதி இருந்தேன். அதைப் 

படித்தீர்களா? அந்தப் பத்துப்பேரில் டேவிட் 

ஹில்பெர்ட்டும் ஒருவர்.


டேவிட் ஹில்பெர்ட் mathematical physics துறையில் 

கணிசமாகப் பங்களித்தவர். அவர் உருவாக்கிய 

வெளி (space) அவரின் பெயரால் ஹில்பெர்ட்டின் 

வெளி  (Hilbert's space) என்று அழைக்கப் படுகிறது.


ஹில்பெர்ட் குறித்தும், ஹில்பெர்ட்டின் வெளி குறித்தும் 

தமிழில் ஏதேனும் கட்டுரை எழுதப் பட்டுள்ளதா?

எத்தனை கட்டுரைகள் எழுதப் பட்டுள்ளன? யார் யார் 

எழுதி உள்ளனர்? உயர் கல்வி தமிழில் வேண்டும் என்று 

போலியாகக் கூச்சல் போடும் தற்குறிகளே, இதற்கு 

உங்களால் பதில் சொல்ல முடியுமா?


இன்று உலகில் வாழும் மக்கள் 7.9 பில்லியன்.

அதாவது 790 கோடி. (1 பில்லியன் = 100 கோடி).

இந்த 790 கோடிப்பேரில் எத்தனை பேர் 

ஹில்பெர்ட்டின் வெளி (Hilbert's space) பற்றி 

தமிழில்  கட்டுரை எழுதி உள்ளார்கள்?


இக்கட்டுரையாசிரியரைத் தவிர, வேறு  யாரும் 

எழுதவில்லை. இதுவரை ஹில்பெர்ட்டின் வெளி 

குறித்து யாரும் தமிழில் எழுதியதில்லை.


பஸ் என்பதை பசு என்று எழுதுவதா தமிழ்ப்பற்று?

இல்லை. ஹில்பெர்ட்டின் வெளி குறித்து தமிழில் 

எழுதி, தமிழிலும் அறிவியலைச் சொல்ல இயலும் 

என்று நிரூபிப்பதுதான் தமிழ்ப் பற்று.


அறிவியல் ஒளியின் நடப்பு இதழில் (நவம்பர்)

கடவுள் வருகிறார் என்ற தலைப்பில் ஒரு புனைவை 

எழுதி உள்ளேன். அதில் ஹில்பெர்ட்டின் வெளி 

பற்றி எழுதி உள்ளேன்.


ஹில்பெர்ட்டின் வெளி என்பது உயர் கணிதம் மற்றும் 

உயர் இயற்பியல் சார்ந்தது. ஹில்பெர்ட் வெளி குறித்து 

தமிழில் ஆயிரம் கட்டுரைகள் இருந்தால் மட்டுமே 

உயர்கல்வியைத் தமிழில் கொண்டு வர முடியும்.


டேவிட் ஹில்பெர்ட் பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில் 

என்ன எழுதப் பட்டுள்ளது என்று பார்த்து என்னிடம் 

கூறுமாறு சில மாணவர்களைக் கேட்டுக் கொண்டேன்.

ஹில்பெர்ட் பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரை 

இல்லை என்றனர் மாணவர்கள்.


எனவே தமிழ் விக்கிப்பீடியாவில் நானே தேடினேன். டேவிட் 

ஹில்பெர்ட் பற்றி எழுதி இருக்கிறார்கள். எப்படித் 

தெரியுமா? இப்படித்தான்! "டேவிடு இல்பேர்ட்டு" என்று.

இது தமிழை எழுதும் முறை அல்ல. தமிழை எவர் 

ஒருவர் எழுதினாலும் தொடர்புறுத்த வல்ல மொழி 

என்ற நிலையில் நின்றுகொண்டுதான் எழுத வேண்டும்.


காலாவதியாகிப்போன இலக்கணங்களைக் கட்டிக்

கொண்டு அழும் தற்குறிகள் தமிழின் பகைவர்கள்.

இவர்கள் மொழியின் இயக்கவியல் பற்றியோ 

சதா சர்வ காலமும் இயங்கிக் கொண்டிருப்பதுதான் 

உயிருள்ள மொழியின் பண்பு  என்ற உண்மையையே 

அறியாதவர்கள். 


தமிழ் என்பது தொடர்புறுத்த வல்ல மொழியாக  

(communicable language) இருக்க வேண்டும். எந்த மொழி 

தொடர்புறுத்த வல்லதோ அதுவே உயிர்ப்புள்ள 

மொழியாகும். 


பஸ் வருகிறது என்பதை பசு வருகிறது என்று 

எழுதுபவன் தமிழின் கழுத்தை நெரிக்கிறான். 

தமிழ் தொடர்புறுத்த வல்ல மொழியாக இருக்கக் 

கூடாது என்பதே அவனின் இழிந்த நோக்கம்.  

உயிர்ப்புள்ள மொழியான தமிழை செத்த மொழியாக 

ஆக்குவதற்கு முயல்பவன் உயிர் வாழத் தகுதியற்றவன்.

  

தமிழ் தமிழ் என்று கூச்சலிடும் போலிகளே,

உங்களின் பொய்யான தமிழ்ப்பற்று தமிழைக்  

காயப்படுத்துகிறது. இது உங்களின் மூளையில்

உறைக்கட்டும்.

************************************************






     

      


            



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக