சனி, 27 நவம்பர், 2021

 இரண்டாம் ஆட்டம்  நடந்து கொண்டிருக்கிறது!

-----------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-----------------------------------------------------------------

உலக  சதுரங்க சாம்பியன் போட்டி 2020க்குரியது 

தற்போது துபாயில் நடந்து வருகிறது.

இன்று (நவம்பர் 27 இரண்டாம் ஆட்டம்!


சாம்பியன் கார்ல்சன் (வெள்ளை)

சாலஞ்சர் நெப்போ (கறுப்பு)


இரண்டாம் ஆட்டம் இன்று இந்திய நேரப்படி 

மாலை 6 மணிக்குத் தொடங்கியது.

இக்கட்டுரையை எழுதும் இந்த நேரத்தில் 

(2125 hours) இருவரும் 32ஆவது நகர்த்தலைச் 

செய்து முடித்துள்ளனர்.கார்ல்சன் தனது 

33ஆம் நகர்த்தலை சிந்தித்துக் கொண்டிருக்கிறார்.


நேற்றைய ஆட்டம் டிராவில் முடிந்தது.

இருவரும் தலைக்கு 0.5 புள்ளி பெற்றுள்ளனர்.


இன்றைய ஆங்கில இந்து ஏட்டில் ஸ்போர்ட்ஸ் 

பக்கத்தில் நேற்றைய ஆட்டம் பற்றிய 

செய்தி வெளிவந்துள்ளது. 45 நகர்த்தல்களும் 

தரப் பட்டுள்ளன.


தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில ஏட்டில் 

இன்று 22 பக்கங்கள். என்றாலும் நேற்றைய 

ஆட்டம் பற்றி ஒரு வார்த்தை கூட எழுதவில்லை.


ஆங்கிலப் பத்திரிகையே எழுதாதபோது

இந்தத் தமிழ்ப் பத்திரிக்கை எழுதும்?

அதாவது தமிழ்ப் பத்திரிகைகளில் இன்று வரை 

ஆட்டத்தின் நகர்த்தல்களை ஒருபோதும் 

எழுதியதில்லை.


சதுரங்கத்தில் ஆர்வமும் ஓரளவு திறமையும் 

உள்ள ஒருவருக்கு தமிழ் மட்டும்தான் தெரியும்,

ஆங்கிலம் தெரியாது என்றால், அவரால் 

ஆட்டத்தின் நகர்த்தல்களை அறிந்து கொள்ள 

வழியே இல்லாமல் போகிறது.


ஆங்கிலம் உற்பத்தி மொழி. எனவே சதுரங்கம் 

பற்றி ஆங்கில ஏடுகள் எழுதுகின்றன.


ஒளிபரப்பு உரிமையை வாங்கியுள்ள பல்வேறு 

நிறுவனங்கள் உதாரணமாக chesscom 

chess 24 ) ஆங்கிலத்தில் ஆட்ட வர்ணனையை 

வழங்குகின்றன. 


FIDE அமைப்பு அதிகாரபூர்வமான அமைப்பு.

அதில் விஸ்வநாதன் ஆனந்த் நேற்று 

வர்ணனை செய்தார்.


CHESS.COMல்  பேபியானோ கரோனா 

வர்ணனை செய்கிறார்.


டிசம்பர் 16ல் இந்த சதுரங்கத் திருவிழா 

நிறைவடையும். அதுவரை சதுரங்க 

லஹரிதான்!


மறைந்த மார்க்சிய மூல ஆசான் லெனின் 

உயிரோடு இருந்தால், இந்நேரம் அவர் 

தமது கடும் வேலைப்பளுவுக்கு இடையிலும்

உலக சதுரங்கப் போட்டியை ஆர்வத்துடன் 

கண்டு களித்திருப்பார். 


நான் அடிக்கடி சொல்லி வருகிறேன்! ஆங்கிலம்தான் 

இந்தியாவின் உற்பத்தி மொழியாக இருக்கிறது 

என்று ஆயிரம் முறை சொல்லி உள்ளேன்.


எனவே தமிழின் வாய்ப்புகள் அனைத்தையும் 

தட்டிப் பறிப்பது ஆங்கிலமே. இந்த உண்மையை 

உணர வேண்டும்.


சமஸ்கிருதத்தில் சதுரங்க ஆட்ட வர்ணனை 

செய்யப் படுகிறதா? இல்லை. ஏனெனில் 

சமஸ்கிருதம் உற்பத்தி மொழியாக இல்லை.

எனவே அடிமுட்டாள்தனமானதும் கயமைத்

தனமானதுமான சம்ஸ்கிருத எதிர்ப்பு என்ன 

செய்கிறது? அது ஆங்கிலத்தை வாழ 

வைக்கிறது.


ஆங்கிலம் வாழட்டும்! நமக்கு ஆட்சேபம் இல்லை.

ஆனால் தமிழின் இடத்தில் ஆங்கிலம் வந்து 

அமர்ந்து கொள்ளக் கூடாது  


தமிழின் நாற்காலி தமிழுக்கே!

தமிழின் நாற்காலியில் ஆங்கிலம் வந்து 

அமரக் கூடாது.


ஆனால் அமர்ந்திருக்கிறது.

தமிழ் தமிழ் என்று போலிக்கூச்சல் போடும் 

இழிந்த லும்பன்களால் ஆங்கிலத்தை 

விரட்ட முடியுமா?


கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சதுரங்கம் 

குறித்தும், உலக சதுரங்கப் போட்டி குறித்தும் 

தமிழில் எழுதி வருகிறேன். இந்த உலகில் 

நான் ஒருவன் மட்டுமே சதுரங்கம் பற்றி

தமிழில் எழுதி வருகிறேன்.


ஆனால் தமிழ் தமிழ் என்று போலிக் கூச்சல் 

போடும் எந்த ஒரு கழிசடையும் என்னையோ 

எனது கட்டுரைகளையோ ஆதரிக்கவில்லை.


உயிர் வாழத் தகுதியற்ற கழிசடைகளான

நீங்கள் பூமிக்குப் பாரமாக இருந்து கொண்டு 

மூச்சு விட்டுக் கொண்டு இருக்கிறீர்கள்!

நிலைக்குப் போரை என்கிறார் 

வள்ளுவர் உங்களை!


நாளைக்குள் சதுரங்கம் பற்றிய என்னுடைய 

கட்டுரையை அறிவியல் ஒளிக்கு அனுப்பி 

வைக்க வேண்டும். நாள் மிகவும் கடந்து 

விட்டது. பதிப்பாளர் கோபித்துக் கொள்ளும்முன் 

கட்டுரை எழுத வேண்டும்.


இன்றைய ஆட்டம் முடியும்வரை என்னால் 

வேறு எதிலும் கவனம் செலுத்த முடியாது.

எனவே இன்று இரவு கண் விழித்து கட்டுரையை 

எழுதி நாளை காலை 11க்குள் அனுப்ப வேண்டும்.


One of the toughest match என்று சொல்வதா 

அல்லது toughest ever match என்று சொல்வதா 

என்று எனக்குத் தெரியவில்லை.


2016இலும் (கார்ல்சன் vs செர்ஜி கர்ஜகின்)

2018இலும் (கார்ல்சன் vs பேபியானோ கரோனா)

உலக சாம்பியன் போட்டியில் 12 ஆட்டங்களும் 

டிரா ஆனது. எனவே இப்போது FIDE அமைப்பு 

14 ஆட்டங்கள் என்று நிர்ணயித்துள்ளது.


இந்த இரண்டாம் ஆட்டமும் டிரா ஆகும் வாய்ப்பு 



.


அதிகம். P (draw) = 0.8 என்று கணிக்கிறேன்.


Probability = 0.8 என்றால் என்ன அர்த்தம் என்று 

தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள்.

Probability of an impossible event = 0.

Probability of a sure event = 1

Probability always lies between 0 and 1.

************************************************ 

  

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக