ஞாயிறு, 11 செப்டம்பர், 2022

 கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி தற்கொலை வழக்கு!
----------------------------------------------------------------------------------
1) ஆரம்பத்தில் வழக்கு 174 CrPC (MYSTERIOUS DEATH) 
மர்ம மரணம் என்று புக் செய்யப்பட்டது. 

2) அடுத்து INVESTIGATIONஐ CB CID நடத்தியது.
investigation நடந்து கொண்டிருக்கும்போதே 
போஸ்ட் மார்ட்டம் அறிக்கை வந்தது. அடுத்து 
இரண்டாம் போஸ்ட் மார்ட்டம் அறிக்கையும் 
வந்தது. இவ்விரண்டு போஸ்ட் மார்ட்டம் 
அறிக்கையையும் பரிசீலிக்கும்படி பாண்டிச்சேரி 
ஜிப்மர் மருத்துவமனைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு 
பிறப்பித்தது.

இரண்டையும் பரிசீலித்த ஜிப்மர் மருத்துவமனையின் 
மருத்துவர்கள், மாணவி ஸ்ரீமதி கற்பழிக்கப் 
படவில்லை என்றும் கொலை செய்யப்படவில்லை 
என்றும் தற்கொலைதான் செய்து கொண்டார் 
என்றும் இரண்டு போஸ்ட் மார்ட்டம் அறிக்கைகளும் 
கூறுவது உண்மைதான் என்றும் கூறினர்.

         
போஸ்ட் மார்ட்டம் அறிக்கைகளின் அடிப்படையில் 
305 IPC தற்கொலைக்குத் தூண்டிய வழக்கு.
JJ Act section 75 மற்றும் இன்னொரு section.
ஆக 174 CrPC யுடன் மேற்கூறிய 3 பிரிவுகளும் 
சேர்க்கப்பட்டன. 

cctv காட்சிகள் காட்டப் பட்டதா?
--------------------------------------------------
மாணவியின் தாயாருக்கு காட்டப் பட்டது.
SSP அலுவலகத்திற்கு மாணவியின் தாயார் 
சென்றார். அவருடன் நான்கு பேர் கூடவே 
சென்றனர். அதில் இருவர் உறவினர்கள்.
இருவர் ஊர்ப் பெரிய மனிதர்கள். மொத்தம் 
5 பேருக்கும் SSP அலுவலகத்தில் CCTV காட்சிகள்
போட்டுக் காட்டப் பட்டன. மாணவி மேலிருந்து 
கீழே விழுந்த காட்சி உட்பட, தொடர்ந்து 10 நிமிட 
நேரம் CCTV காட்சிகள் அந்த ஐந்து பேருக்கும் 
போட்டுக் காட்டப் பட்டன.

இந்த உண்மையை மாணவியின் தாயார் ஒப்புக் 
கொண்டு ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார்.
ஆரம்பத்தில் முதன் முதலில் வெளியிடப்பட்டது 
அந்த வீடியோ.
13ஆம் தேதியன்று காலை 11 மணிக்கு மாணவியின் 
தாயார் உட்பட 5 பேர் DSP அலுவலகம் செல்கின்றனர்.
அங்கு அவர்கள் அனைவருக்கும் வீடியோ போட்டுக் 
காட்டப் பட்டது. 10 நிமிடங்களாக வீடியோ 
ஓடியதை மாணவியின் தாயார் உட்பட 5 பேர் 
பார்த்தனர்.

JJ Act section 75 deals with punishment for cruelty to child.    
    

judge's observations during the disposal of bail petition
are necessitated  
=============================
   
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக