ஞாயிறு, 11 செப்டம்பர், 2022

பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் கைது!
சற்று முன் மாலை 6 மணிக்கு) விடுதலை 
என்று செய்தி வருகிறது!  
-----------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------
சாவித்திரி கண்ணன் என்றவுடனே வாசகர்கள் 
பலருக்கும் துக்ளக் பத்திரிகைதான் நினைவுக்கு வரும்.
நீண்ட காலம் துக்ளக் ஏட்டில் பணிபுரிந்தவர்தான் 
சாவித்திரி கண்ணன். துக்ளக் சோவின் தீவிர 
விசுவாசி!

சங்கர ராமனை ஜெயேந்திரர் கொலை செய்த 
விஷயம் தமிழ்நாடெங்கும் அல்லோலகல்லோலப் 
பட்டுக் கொண்டிருந்த நேரம். சோவின் தலைமையில் 
ஒட்டு மொத்த துக்ளக் ஏடும் ஜெயேந்திரருக்கு 
முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்த நேரம்.
அப்போது துக்ளக் பத்திரிகையில் வேலை 
பார்த்துக் கொண்டிருந்த சாவித்திரி கண்ணன், 
ஜெயேந்திரருக்கு மிகச் சிறப்பாக முட்டுக் கொடுத்து 
சோவின் அபிமானத்தைப் பெற்றவர்.

விடுதலைப்புலிகளின் தீவிர எதிர்ப்பாளர் 
சாவித்திரி கண்ணன். புலிகளையும்  மேதகு 
பிரபாகரனையும் எதிர்ப்பது மட்டுமின்றி, தனித்தமிழ் 
ஈழத்தையும் ஈழ விடுதலையையும் ஒருசேர 
எதிர்த்தவர் சாவித்திரி கண்ணன். உண்மையில் 
அவர் ராஜபக்சேவின் ஆதரவாளர். அவரின் 
எஜமானர் சோவின் ஈழ எதிர்ப்பின் தாக்கம் 
அப்படியே சாவித்திரி கண்ணனால் சுவீகரித்துக் 
கொள்ளப் பட்டது.

ஒருவிதத்தில் சாவித்திரி கண்ணன் நக்கீரன் 
கோபாலைப் போன்றவர். நக்கீரன் கோபால் 
எழுத்தாற்றல் மிகுந்த கட்டுரையாளர் அல்ல. 
அவர் வெறும் புகைப்படக்காரர்தான். அவரைப் 
போலவே சாவித்திரி கண்ணனும் சாராம்சத்தில் 
ஒரு புகைப்படக்காரர்தான் (photo journalist). இவர் ஒரு 
நல்ல கட்டுரையாளரோ (essayist) மொழிபெயர்ப்பாளரோ 
அல்ல.     
  
தொலைக்காட்சிகளின் வருகையைத் தொடர்ந்து
அச்சு ஊடகம் தன் மவுசை இழந்தது. துக்ளக் ஏட்டின் 
சர்க்குலேஷன் வெகுவாகக் குறைந்தது. அங்கு வேலை 
பார்த்த பலரையும் வீட்டுக்கு அனுப்பினார் சோ. 

சோவின் தீவிர விசுவாசியான தன்னை சோ 
வேலை நீக்கம் செய்ய மாட்டார் என்ற சாவித்திரி 
கண்ணனின் நம்பிக்கை பொய்த்தது. ஈவு இரக்கமற்ற 
சோ வெறும் ஆயிரம் ரூபாயை மட்டும் கூடுதலாகக் 
கொடுத்து, கணக்குத் தீர்த்து சாவித்திரி கண்ணனை 
வீட்டுக்கு அனுப்பி வைத்தார் என்கின்றனர் சோவால் 
வேலைநீக்கம் செய்யப்பட்ட ஏனைய 
பத்திரிகையாளர்கள். 

காட்சி ஊடகங்களில் வேலை தேடிய சாவித்திரி 
கண்ணனுக்கு வேலை கிடைக்கவில்லை. இவர் 
எடிட்டோரியல் போர்டில் வேலை கிடைக்குமா 
என்று பார்த்தார். அதில் வேலை கிடைக்க 
வேண்டுமெனில் ஒருவர் பட்டதாரியாக இருக்க 
வேண்டும். மேலும் ஆங்கிலத்தில் இருந்து 
மொழிபெயர்க்கும் திறன் வேண்டும்.  

சாவித்திரி கண்ணன் academiccally ஒரு sub mediocre.
எனவே ஆசிரியர் குழுவில் இடம் பெறும் வேலை 
கிடைக்காத நிலையில், சுயமாக ஒரு இணைய 
இதழை ஆரம்பித்தார் சாவித்திரி கண்ணன்.
அதுதான் அவர் தற்போது நடத்தி வரும் "அறம்" 
என்னும் இணைய இதழ். இந்த இணைய இதழின் 
மூலம் கிடைக்கும் வருமானம்தான் சாவித்திரி 
கண்ணனின் ஜீவிதம் ஆகும்.

இன்று (11.09.2022) ஞாயிறு பகல் 12 மணியளவில் 
சாவித்திரி கண்ணனை தமிழகப் போலீசார் 
கைது செய்து திண்டிவனம் அழைத்துச் 
சென்றுள்ளதாக சாவித்திரி கண்ணனின் 
துணைவியார் தெரிவிக்கிறார்.

இன்று (11.09.2022) மாலை ஆறு மணியளவில் 
அவரை போலீசார் விடுதலை செய்து விடக்கூடும் 
என்று மூத்த பத்திரிகையாளர் தோழர் டி எஸ் எஸ் 
மணி அவர்கள் தெரிவிக்கிறார்.
*******************************************
 
     
   

   
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக