வெள்ளி, 16 செப்டம்பர், 2022

 சவுக்கு சங்கர் 
------------------------
ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 உயிர்களைக் கொன்ற 
போலீசின்  துப்பாக்கிச் சூட்டை உறுதியாக ஆதரித்த
அந்த நபர் யார்? சவுக்கு சங்கர்தான்!
-----------------------------------------------------------------------------
எடப்பாடி முதல்வராக இருந்தபோது ஸ்டெர்லைட் 
போராட்டம் நடந்தது. தமிழக அரசின் போலீஸ் 
அப்போராட்டத்தின்போது 13 பேர்களை சுட்டுக் 
கொன்றது.

நீதிபதி அருணா ஜெகதீசன் அம்மையார் குழு 
போலீசின் துப்பாக்கிச் சூடு அநியாயமானது என்று 
கண்டித்து அண்மையில் அறிக்கை வழங்கி உள்ளது.

மொத்தத் தமிழ்நாடும் இந்த வெறித்தனமான 
துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தது. எல்லா 
அரசியல் கட்சிகளும் சமூக இயக்கங்களும் 
எடப்பாடி அரசின் துப்பாக்கிச் சூட்டை வன்மையாகக் 
கண்டித்தன.

ஆனால் ஒரே ஒரு நபர் மட்டும் இந்த துப்பாக்கிச் சூட்டை
நியாயப் படுத்தி அறிக்கை வெளியிட்டார். யார் அவர்?
வேறு யார்? சவுக்கு சங்கர்தான்!

சவுக்கு சங்கர் அப்போது எழுதியதைப் படியுங்கள்!
-----------------------------------------------------------------------------
”அந்த மக்கள் கூட்டத்தில் நிறைய நக்சலைட்ஸ் 
இருந்தனர். எனவே, அந்த துப்பாக்கி சூட்டை 
தவறாக பார்க்க முடியாது! போலீசார் திட்டமிட்டு 
சுடவில்லை, ஏதோ குறி தவறி சுட்டுவிட்டனர். 
அதுவும் ஒரே ரவுண்டு தான்’’ 

"போலீசார் குறி தவறிச் சுட்டு விட்டனர். அதனால் 
13 பேர் இறந்து விட்டனர்" என்று நாக்கூசாமல் 
பொய்யாய் எழுதிப் பிழைத்தவன் இந்த சவுக்கு சங்கர்.

இதற்கு அப்புறமும் சவுக்கு சங்கரை ஆதரிப்பவன் 
அவனுக்கு சப்ளை செய்யும் p!mp தவிர 
எவனும் இல்லை!

சவுக்கு சங்கரை ஆதரிப்பவன் என்னிடம் 
மன்னிப்புக் கேட்க வேண்டும்.
***************************************************** 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக