வெள்ளி, 16 செப்டம்பர், 2022

 உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிக்கிறான்!
---------------------------------------------------------------------
நீதிமன்ற அவமதிப்பிற்காக சவுக்கு சங்கருக்கு 
ஆறு மாத சிறைத்தண்டனை கிடைத்திருக்கிறது.
சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக்கிளை 
இத்தீர்ப்பை வழங்கி இருக்கிறது. சவுக்கு சங்கர் 
சிறையில் அடைக்கப் பட்டிருக்கிறார் என்று 
தகவல் கிடைத்துள்ளது.  

சவுக்கு சங்கர் ஒரு பிளாக் மெயிலர் பத்துப் பன்னிரண்டு 
ஆண்டுகளுக்கு முன்பு, சன் டிவியில் செய்தி 
வாசிப்பாளராக வேலை செய்த மஹாலட்சுமி என்ற
பெண்ணை சவுக்கு மிரட்டினார். நியாயத்துக்குப் 
புறம்பாக ஒரு செய்தியை வாசிக்குமாறு மகாலட்சுமியை 
இவர் வற்புறுத்த, அந்தப்பெண் மறுக்க, அந்தப் 
பெண்ணை மிகவும் டார்ச்சர் செய்தார் சவுக்கு.

சங்கரசுப்பு போன்ற திறமையான வழக்கறிநகர் 
மூலம், சவுக்கை எதிர்த்து அந்தப் பெண் வழக்குத் 
தொடுத்து, வழக்கில் வெற்றி கிடைத்தும்கூட 
அப்பெண்ணுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை.

நீதியரசர்கள் அவர்களின் பிள்ளைகள் ஆகியோரை
உளவு பார்த்து, அவர்களின் பெண் தொடர்பை 
நெருக்கமான காட்சிகளை புகைப்படம் எடுத்து 
வைத்துக்கொண்டு, பிளாக் மெயில் செய்து 
காசு பறிப்பது சவுக்கின் தொழில்.

ஒரு யூடியூப் வீடியோவில் பேச ஆரம்பத்தில் ரூ 4000
வாங்கிய சவுக்கு சங்கர் தற்போது ரூ 1 லட்சம் 
கேட்கிறார்.     . 

முதல்வரின் மகன் உதயநிதி ஒரு செக்யூரிட்டியை 
துப்பாக்கியால் சுட்டு விட்டார் என்று சவுக்கு சங்கர் 
அண்மையில் பேசிய வீடியோ இன்றும் உள்ளது.

CBI, RAW, IB என்று மூன்று உளவு அமைப்புகள் 
இந்தியாவில் உண்டு. இதில் சவுக்கு சங்கர் 
IB அமைப்பால் அமர்த்தப்பட்ட ஏஜெண்டு.

உதயநிதி ஒரு கொலைகாரன் என்று பேசிவிட்டு 
நிம்மதியாக இருக்க முடிகிறது என்றால் IB ஏஜண்டாக
இருந்தால் மட்டுமே அது சாத்தியம்.  

இந்தியாவின் தாலியறுத்த சட்டங்களாலும்,
சட்டங்களை எழுதிய முட்டாள்களாலும்
சவுக்கு சங்கரை ஆறு மாதம் மட்டுமே தண்டிக்க 
முடியும். மேல் முறையீடு போகப்போக 
எல்லாமும் நீர்த்துப் போகும்.
-----------------------------------------------------------  
பின்குறிப்பு:
சவுக்கு சங்கர் மீது ஒன்றுக்கு மேற்பட்ட நீதிமன்ற 
அவமதிப்பு வழக்குகள் உள்ளன. தற்போது தண்டனை 
கிடைத்துள்ள இந்த வழக்கு நீதியரசர் சுவாமிநாதனை 
இழிவாகப் பேசிய வழக்கு அல்ல. அந்த வழக்கு 
இன்னும் விசாரணைக்கே வரவில்லை.
***************************************************


சவுக்கு சங்கருக்கு எந்த வழக்கில் 
தண்டனை கிடைத்துள்ளது?
நீதியரசர் சுவாமிநாதனை இழிவாகப் பேசிய 
வழக்கில் அல்ல!
--------------------------------------------------
1) சவுக்கு சங்கர் மீது ஒன்றுக்கு மேற்பட்ட
நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் உள்ளன.
 
2) நீதித்துறையில் ஊழல் புரையோடிக் கிடக்கிறது.
ஒட்டுமொத்த நீதித்துறையும் ஊழலில் சிக்கிக் 
கிடக்கிறது. இப்படி எழுதி மொத்த நீதித் துறையையும் 
அவமதித்துள்ளார் சவுக்கு சங்கர்.
(Casting aspersions on the integrity of the entire judiciary) 

3) சவுக்கின் இந்த remarksஐ படித்ததுமே, suo motoஆக 
மதுரை உயர்நீதிமன்றக் கிளை அவர் மீது வழக்குத் 
தொடுத்தது.

4) இந்த வழக்கில்தான் சவுக்கிற்கு ஆறு மாத 
சிறை தண்டனை கிடைத்துள்ளது. 
Simple iprisonmentதான் என்று நினைக்கிறேன். 
Rigorous imprisonment இல்லை என்று நினைக்கிறேன்.

5) ஆங்கிலமும் தெரியாத சட்டமும் தெரியாத ஊடகத் 
தற்குறிகளால் தீர்ப்பு என்ன என்று துல்லியமாகக் 
கூற முடியவில்லை.

6) நீதியரசர் சுவாமிநாதன் அவர்களை இழிவு செய்து 
சவுக்கு சங்கர் பேசியதற்கு அவர் மீது வழக்குத் 
தொடரப் பட்டுள்ளது. அந்த வழக்கு இன்னும் 
விசாரணைக்கே வரவில்லை. 

7) இதற்கிடையில் குட்டி முதலாளித்துவக் கபோதிகள் 
பலரும் நீதியரசர் சுவாமிநாதனை அவமதித்த 
வழக்கில்தான் சவுக்கு சங்கருக்கு தண்டனை 
கிடைத்துள்ளதாக பொய்ச்செய்தியைப் பரப்பி 
வருகிறார்கள். 

8) அறியாமை காரணமாக மேற்கூறியவாறு 
பொய்ச் செய்தியைப் பரப்பி வரும் அன்பர்கள் 
உடனடியாக அதை நிறுத்துங்கள். நிறுத்தாவிடில் 
அதுவும் நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்பட்டு 
நீங்கள் சிக்கலுக்கு ஆட்படுவீர்கள்.
***********************************************

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக