சனி, 10 செப்டம்பர், 2022


தமிழுக்கு அல்வான்னு பேரு!
-------------------------------------------- 
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------
சொற்களின் பிறப்பிடம் எது? சொற்கள் 
எங்கிருந்து பிறக்கின்றன? சொற்கள் 
பொருளுற்பத்தியில் இருந்துதான் 
பிறக்கின்றன. பொருளுற்பத்தி நடைபெற 
நடைபெற, சொற்கள் பிறந்து கொண்டே 
இருக்கும்.

இந்தியாவின் பொருளுற்பத்தி மொழி 
ஆங்கிலமே. எனவே சொற்கள் 
ஆங்கிலத்தில்தான் உருவாகின்றன.
15 அல்லது 20 ஆண்டுகள் கொண்ட ஒரு 
காலப்பகுதியை எடுத்துக் கொள்வோம்.
இந்தக் காலக்கட்டத்தின் உற்பத்தியில் 
ஆங்கிலத்தில் ஒரு லட்சம் சொற்கள் புதிதாக 
உருவாகி உள்ளன என்று வைத்துக் கொள்வோம்.

இவற்றில் சில நூறு சொற்களுக்குத்தான் 
தமிழில் மொழிபெயர்ப்பு (அதாவது 
ஆங்கிலத்துக்கு நிகரான தமிழ்ச் சொற்கள்) 
இருக்கும். 
உருவான ஆங்கிலச் சொற்கள் = 1,00,000 
நிகரான தமிழ்ச் சொற்கள் = 800.
இதுதான் இடர்ப்பாடு ஏற்படக் காரணம்.

எனவே தமிழ் மீடியம் என்பது ப்ளஸ் டூ 
(12 வகுப்புகள் வரை) வரையில்தான் 
கைகூடும்.
1) ஒரு லட்சம் புதிய கலைச்சொற்களை 
தமிழில் உண்டாக்கிய பிறகு,
2) அறிவியலில் பத்து லட்சம் தமிழ்க் 
கட்டுரைகள் எழுதப்பட்ட பிறகு,
3) அறிவியலில் 30,000 புத்தகங்கள் தமிழில் 
எழுதப்பட்ட பிறகு,
பட்டப்படிப்பு வரை தமிழில் கொண்டு வரலாம்.

தற்போதுள்ள தமிழ் மீடியம் பி எஸ் சி பட்டப் 
படிப்பும்,  எம் எஸ் சி வரையிலான தமிழ் மீடியம் 
பட்டப் படிப்பும் மிகப்பெரிதும் தரக்குறைவானவை.
கடந்த 400 ஆண்டு காலமாக academic சார்ந்து 
இயங்கியதில் கிடைத்த அனுபவத்தின் 
விளைவே நான் இங்கே கூறுவது.

பிள்ளைகள் 12ஆம் வகுப்பு வரை தமிழ் 
மீடியத்தில் படிப்பதை பெற்றோர்கள் 
உறுதி செய்ய வேண்டும். அரசு அதைச் 
செய்யாது. அரசுப் பள்ளிகளிலேயே 
தமிழ் மீடியம் ஒழிக்கப்பட்டு ஆங்கில மீடியம் 
புகுத்தப் படுகிறது. இதை வெற்றிகரமாகச் 
செய்து  வருகிறது திமுக அரசு. இதை 
எதிர்க்க நாதியில்லை.

பட்டப் படிப்புகளில் தமிழ் மீடியம் 
என்பதை ஊக்குவிக்க வேண்டாம். 
அது அடிமுட்டாள்தனம் ஆகும். தமிழை 
உற்பத்தி மொழியாக ஆக்க இயலாவிடினும், 
அதில் பாதியோ கால்வாசியோ ஆக்கிய 
பிறகுதான் பட்டப் படிப்பில் தமிழ் மீடியம் 
என்பது சாத்தியம் ஆகும்.  

என்னால் இயன்றவரை தமிழையும் 
ஆங்கிலத்தைப் போல் பொருளுற்பத்தி 
மொழியாக ஆக்குவதற்கு என்ன செய்ய 
வேண்டுமோ, என்ன செய்ய இயலுமோ 
அதைச் செய்து வருகிறேன். நாளை 
வெளியாகும் அறிவியல் ஒளி ஏட்டில் 
(செப்டம்பர் 2022 இதழ்) இஸ்ரோ ஏவிய 
SSLVயின் தோல்வி குறித்து கட்டுரை 
எழுதி உள்ளேன். தமிழ் மீது அக்கறை 
இருந்தால் அறிவியல் ஒளி 
ஏட்டுக்குச் சந்தா கட்டி வாங்கிப் படியுங்கள்.       

இது செயற்கைக்கோள் யுகம். இந்த யுகத்தில் 
PERIGEE, APOGEE ஆகிய சொற்கள் மிகவும் 
அடிக்கடி புழங்கும் சொற்கள் ஆகும்.
இச்சொற்களுக்கு நல்ல தமிழில் 
மொழிபெயர்ப்பு வேண்டும். அதாவது 
தமிழில் சொற்களை உருவாக்க வேண்டும்.

நான் எளிதில் உருவாக்கி விட்டேன். 
PERIGEE = புவியண்மை (புவி + அண்மை)
APOGEE = புவிச்சேய்மை.

இவ்விரண்டும் மிகவும் அழகிய அற்புதமான 
நூறு சதம் பொருந்துகிற சொற்கள்.ஆனால் 
தமிழர்களுக்கும் தமிழ் மாணவர்களுக்கும்     
சேய்மை என்றால் பொருள் தெரியவில்லை.
பூமில இருந்து தூரமா இருந்தா APOGEE; 
பூமிக்குப் பக்கத்தில இருந்தா PERIGEE என்று 
சொல்லி விளக்குகிறோம். அப்படியானால் 
பூமித்தூரம் = APOGEE என்றும் 
பூமிப்பக்கம் = PERIGEE என்றும் ஈஸியாச் 
சொல்லலாமா சார் என்கிறான்.

தமிழுக்கு அமுதென்று பேர் என்று நான் 
எளிமையாகத்தான் சொல்கிறேன்.
அவனுக்கு அது புரியவில்லை.
எனவே இன்னும் எளிமையாக 
தமிழுக்கு அல்வான்னு பேரு என்று 
நான் சொல்ல வேண்டி இருக்கிறது.

புவிச்சேய்மை, புவியண்மை என்ற சொற்களை 
மனதில் நினைக்கும்போதெல்லாம் எனக்கு 
"சேய்மை அண்மையில் உயிர்க்கொரு 
துணையெனச் சிறந்த 
வாய்மையால் அறம் தூய்மையாம்"
என்ற பண்டைய பாடல்தான் நினைவுக்கு 
வருகிறது.

10ஆம் வகுப்பு மாணவனுக்கு சேய்மை என்ற
சொல்லுக்குப் பொருள் தெரிந்திருந்தால்தான்,
12ஆம் வகுப்பில் "புவிச்சேய்மை" என்ற 
சொல்லுக்குப் பொருள் புரியும். அதற்கு 
தமிழ்நாட்டில் வாய்ப்பில்லை. 
------------------------------------------------------------
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் 
போராட்டத்தின்போது அன்றைய மத்திய 
இணையமைச்சர் நாராயணசாமி அவர்களை 
நாக்கில் நரம்பில்லாமல் திட்டித் தீர்த்த
போலிப்போராளி சுப உதயகுமார் 
இன்று மத்திய அமைச்சர் நாராயணசாமியின் 
காலைக் கழுவிக் குடிப்பதைப் பாரீர்!   

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக