வெள்ளி, 30 செப்டம்பர், 2022

விடையும் விளக்கமும்
----------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------
விடை: கொடுக்கப்பட்ட விவரங்களை வைத்துக்கொண்டு
ஆடு மேய்ப்பவனின் வயதைக் கணக்கிட இயலாது.
இதுவே சரியான விடை.
விளக்கம்:
------------------
1) இந்தக் கணக்கை நியூட்டன் அறிவியல் மன்றம்
உருவாக்கவில்லை. இது உலகப் புகழ் பெற்ற ஒரு
கணக்கு.1990களில் இந்தக் கணக்கை உருவாக்கிய
பேராசிரியர், எட்டாம் வகுப்பில் பயிலும் பள்ளிச்
சிறுவர்களிடம் இக்கணக்கைக் கொடுத்தார்.
**
2) இந்தக் கணக்கிற்கு எண்களில் விடை கிடையாது.
அதாவது no numerical solution. என்றாலும் மாணவர்களில்
90 சதத்திற்கும் மேற்பட்டோர் எண்களில் விடை
எழுதி இருந்தனர். ஆடு மேய்ப்பவனின் வயதாக
25, 45, 60,90, 120 என்று பல்வேறு விடைகளை எழுதி
இருந்தனர்.
**
3) ஒரு கணக்கு என்றால், அதற்கு numerical answer
கண்டிப்பாக இருக்கும் என்ற சிந்தனை
மாணவர்களிடம் மேலோங்கி நிற்பதை கணக்கை
உருவாக்கிய பேராசிரியர் கண்டார். இது ஒரு
arithmetic சிந்தனை ஆகும். கால்குலஸ் போன்ற
உயர் கணிதம் பயின்ற மாணவர்களிடம் இக்கணக்கு
எடுபடாது.
**
4) மாணவர்களின் உளவியலை பரிசோதனை
செய்வதற்காக இந்தக் கணக்கு கொடுக்கப்பட்டது.
இது சமீபத்தில் செய்தியில் அடிபடக் காரணம்,
தற்போது இந்த 2017ஆம் ஆண்டிலும் இதே கணக்கு
ஒரு பள்ளிச் சிறுவர்களுக்கு கொடுக்கப்பட்டபோது,
முன்பு போலவே 90 சதத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள்
numerical answers எழுதி இருந்தனர்.
**
5) arithmetic சிந்தனை இளவயதுச் சிறுவர்களிடம்
வலுவாக வேரூன்றி இருப்பதை இம்முடிவுகள்
காட்டுகின்றன.
**
6) விடையளித்தோர் அனைவருக்கும் நன்றி.உலகப்புகழ் பெற்ற இந்தக் கணக்கை நமது
வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்கிலேயே

இக்கணக்கை இங்கு கொடுத்துள்ளோம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக