செவ்வாய், 4 அக்டோபர், 2022

தொலைவில் நிகழும் மாயம் அல்ல ஐன்ஸ்டைன் அவர்களே! 
(இயற்பியல் நோபல் பரிசு 2022).
-----------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-------------------------------------------------
1) ஆலைன் ஆஸ்பெக்ட் (பிரான்சு) 
2) ஜான் கிளாஸர் (அமெரிக்கா)
3) ஆன்டன் ஸெய்லிங்கர் (ஆஸ்திரியா)
ஆகிய மூவருக்கும் 2022ஆம் ஆண்டிற்கான 
இயற்பியல் நோபெல் பரிசு சமமாகப் 
பகிர்ந்து அளிக்கப் பட்டுள்ளது.   

பரிசு எதற்காக வழங்கப்பட்டது என்பது பற்றி நோபெல் 
பரிசுக்குழு பின்வருமாறு கூறுகிறது.
"பிணைப்புண்ட ஃபோட்டான்களைக் கொண்டு, இம்மூவரும் நிகழ்த்திய வெற்றிகரமான பரிசோதனைகளில்  பெல் அசமத்துவம் (Bell inequalities) 
உறுதியாக மீறப்பட்டுள்ளது. இப்பரிசோதனைகளின் வெற்றியானது 
குவான்டம் தகவல் தொடர்பு அறிவியலின் முன்னோடியாகத்  
திகழ்கிறது (for experiments with  entangled photons, establishing the violation 
of Bell inequalities and pioneering quantum information science). எளிமைப்படுத்திப்
புரிந்து கொள்ள வேண்டுமெனில், இம்மூவரின் பங்களிப்பானது 
குவாண்டம் கணினி உருவாக்கத்தில் நிறையவே பயன்படப் 
போகிறது என்று அறிகிறோம்.

குவாண்டம் கொள்கை மீதான இப்பரிசோதனைகள்  
பெரும் இயற்பியல் முக்கியத்துவம் கொண்டவை. 1930களில் 
தொடங்கி இன்று வரை நீடித்து வந்த குவாண்டம் 
இயற்பியலின் சில சிக்கலான கேள்விகளுக்கு தங்களின் 
பரிசோதனைகளின் மூலம் விடையளித்துள்ளனர் நோபெல் 
பரிசு பெற்றுள்ள மூவரும். ஐன்ஸ்டைன் அன்று எழுப்பிய 
சில வினாக்களுக்கு இன்று மீண்டும் விடையளிக்கப் பட்டுள்ளது..
பிரபஞ்சம் குறித்த, நமது பழக்கப்பட்ட பார்வையை மாற்றிச் 
சரி செய்துகொள்ள  வேண்டிய தேவையை நடப்பாண்டின் நோபல் 
பரிசு ஏற்படுத்தி உள்ளது. 
 
இது பற்றியெல்லாம்  நன்கறிந்திட  குவாண்டம் கொள்கையில் 
ஓர் உயர்மட்டப் புரிதலைப் பெற்றிருப்பது முன்நிபந்தனை ஆகிறது.  

அ) குவாண்டம் பிணைப்புறுதல் (quantum entanglement) என்றால் என்ன?
ஆ) பிணைப்புண்ட துகள்கள் (entangled particles) எவ்வாறு நடந்து கொள்ளும்?
இ) துகள்களின் நடத்தை ஐன்ஸ்டைன் கூறியபடி தொலைவில் 
நிகழும் மாயமா? (spooky action at a distance)
ஈ) அல்லது அந்நடத்தை அவற்றின் உள்ளார்ந்த இயல்பா (inherent in nature)
உ) EPR முரண் என்றால் என்ன? (EPR Paradox)
ஊ) நிகழ்ச்சிகளின் உள்ளூர்த்தன்மை (local realism)மற்றும் 
உள்ளூரற்ற தன்மை (Non local) என்றால் என்ன?
எ) மறைந்திருக்கும் காரணிகள் (hidden variables) என்றால் என்ன?

மேற்கூறிய ஏழு அம்சங்களையும் ஐயந்திரிபற விளங்கிக் கொள்ள  
வேண்டும். அப்போதுதான் குவாண்டம் பிணைப்புறுதல் (quantum entanglement) 
பரிசோதனைகளுக்கான நோபல் பரிசு பற்றிய முழுநிறைவான 
புரிதலை  அடைய முடியும்...


       
  
 


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக