அத்வைதம் இன்று நேற்று வந்ததல்ல.
--------------------------------------------------------
பழமையானது. அதை நான் முறியடிக்கும்
முன்னரே ராமானுஜர் முறியடித்து விட்டார்.
மத்வர் முறியடித்து விட்டார்.
பின்னர் பௌத்தர்களும் பொருள்முதல்வாத
அறிஞர்களும் முறியடித்து விட்டனர்.
அத்வைதம் இன்று மியூசியத்தில்
வைக்கப்பட்டுள்ள பொருள்.
அவ்வளவுதான்.
கடந்த சில நூற்றாண்டுகளாகவும் இன்றும்
இந்து மதத்தின் மீது இடைவிடாது
நடந்து வரும் பிற மதங்களின் தாக்குதலில்
இருந்து இந்து மதத்தைப் பாதுகாக்க
அத்வைதம் எள்முனையேனும் பயன்படுமா?
இந்து மதத்தைப் பாதுகாக்க அத்வைதம்
பயன்படாது என்பதால்தானே இந்து மதக்
காவலரான வீர சாவர்க்கர் தாமே
தமது சொந்த முயற்சியில் இந்துத்துவம்
என்ற கோட்பாட்டை உருவாக்கினார்.
அத்வைதம் பயன்படும் என்றால் சாவர்க்கர்
ரெடிமேடாக இருந்த அதை பயன்படுத்தி
இருப்பாரே! அத்வைதம் யதார்த்தத்துக்கு
எதிரானது. அறிவியலுக்கு எதிரானது.
எனவேதான் ஆதிசங்கரர் நிறுவிய நான்கு
மடங்களிலும் இன்று அத்வைத போதனை
கைவிடப்பட்டு இந்து மத விழுமியங்களும்
சடங்குகளும் அத்வைதத்தின் இடத்தில்
அமர்ந்து கொண்டுள்ளன.
அறிவும் அறிவு சார்ந்த சிந்தனையும்
முக்கியத்துவம் பெறும்போது,
சென்டிமெண்ட்டுக்கெல்லாம் எந்த இடமும்
கிடையாது. இதை உணர மறுத்தால்
அவ்வாறு மறுப்பவர்க்கே நஷ்டம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக