புதன், 26 அக்டோபர், 2022

 ஆதிசங்கரர் ஷண்மத ஸ்தாபகர்.
சரி. இந்தியாவின் நான்கு திசைகளிலும்
மடங்களை ஸ்தாபித்தார். (பத்ரிநாத்,
சிருங்கேரி, துவாரகை, பூரி). சரி.
(கும்பகோணம் மடம் அல்லது காஞ்சி 
மடம் ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப் 
பட்டதல்ல).

பஜகோவிந்தத்தை ஆதி சங்கரர் இயற்றினார் 
என்பது உண்மையல்ல. பஜ கோவிந்தத்தின்
மொழிநடை காலத்தால் பிந்தியது; எனவே 
இதை ஆதிசங்கரர் இயற்றவில்லை 
என்கிறார்கள் சம்ஸ்கிருத மொழியியல் 
அறிஞர்கள்.

ஜடிலோ முண்டி லுஞ்சித கேஸ 
காஷா யாம்பர பஹுக்ரத வேஷ 
........   ............  ..............  .................

அக்ரே வஹ்னி ப்ருஷ்ட்டே பானு 
ராத்ரௌ சுபுக ஸமர்ப்பித ஜானு
கரதல பிச்சஸ் தருதல வாசஸ் 
ததபி ந முஞ்சத் ஆஷா பாஷ 

மேற்கூறிய சுலோகங்களை ஒரு 
உதாரணத்திற்காகத் தந்துள்ளேன்.
இவற்றின் மொழிநடை ஆதிசங்கரின் 
எட்டாம் நூராடு கால மொழி நடையுடன் 
முரண்படுகிறது.

சௌந்தர்ய லஹரியும்  ஆதிசங்கரரால் 
எழுதப் பட்டதல்ல. இதுதான் உண்மை.
இதையெல்லாம் அறிந்திட அறிந்து தெளிந்திட
ஆழ்ந்த அறிவு தேவை. முகநூல் வாட்சப்பில் 
வரும் mediocre and sub mediocre elementsன் 
எழுத்துக்களில் இருந்து எந்த அறிவையும் 
பெற இயலாது.             


திரு பிரும்ம ரிஷியார் கவனத்திற்கு!
-------------------------------------------------------
மிஸ்டர் பிரும்ம ரிஷியார்,
தூஷணாமான வார்த்தைகளை 
வெட்கமின்றி பிரயோகித்து இருக்கிறீர்கள். 
கருத்துக்களைச் சொல்லுங்கள். வசைகள், 
அவதூறுகளை ஏன் அள்ளி வீசுகிறீர்கள்?
சட்டியில் உள்ளதுதான் அகப்பையில் 
வரும். உங்களின் மூளையில் என்ன 
இருக்கிறதோ அதுதானே வெளியில் வரும்!  

குருடன், நொண்டி போன்ற சொற்களை 
பயன்பாட்டில் இருந்து அகற்றி விட்டவர்கள் 
தமிழர்கள். அவ்வாறு அகற்றி பத்து, இருபது 
ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன. நாகரிக 
சமூகம் இச்சொற்களைத் தவிர்க்கிறது.
ஆனால் நீங்களோ மிக்க விருப்புடன் 
குருடன் என்று பிரயோகிக்கிறீர்கள்.
அதுதான் உங்களின் தரம்!

Physically handicapped, deaf and dumb,
blind ஆகிய சொற்களை அரசாங்கப் 
படிவங்கள் மற்றும் நிறுவனங்களின் 
விண்ணப்பப் படிவங்கள் மற்றும் 
பத்திரிகைகளில் செய்தி வெளியிடுதல் 
ஆகியவற்றில் இருந்து நீக்கியாயிற்று.
மோடி அரசின் அதிகாரபூர்வ ஆவணங்களில் 
physically handicapped என்ற சொல் 
மாற்றப்பட்டு DIFFERENTLY ABLED
என்ற சொல் புழக்கத்துக்கு வந்து விட்டது.
இதை மனதில் பதிக்குமாறு 
வேண்டுகிறேன்.        


திருமதி ராதா தேவர் கவனத்திற்கு,
-------------------------------------------------------
மிஸ்டர் பழனிச்செல்வம்,
அத்வைதம் குறித்து ஆதரவாகவோ 
எதிர்ப்பாகவோ சொல்வதற்கு 
காத்திரமான ஏதாவது ஒன்று  
உங்களிடம் இருந்தால், அதைச் 
சொல்லலாம். வரவேற்கப்படும்.
மற்றப்படி, மன வக்கிரங்களைக் 
கொட்டுவதற்கு இது இடமல்ல.
அருள்கூர்ந்து BEHAVE YOURSELF. 

அறிவியல் ஒருபோதும் 
பிற்போக்கானது அல்ல.
Sensible comments are expected of you. 
and everyone. 

பிரும்மம் என்பதை "மூலகூறு"
என்கிறீர்கள். "மூலகூறு" என்பதை 
அறிவியல் கூறும் molecule என்பதாகப் 
புரிந்து கொள்கிறேன்.

molecule என்பது பொருளின் நுண்ணிய 
பகுதி. பொருட்கள் துகள்களாகவும் 
அணுக்களாகவும் மூலக்கூறுகளாகவும் 
இருக்கின்றன. இது அனைவரும் அறிந்த 
அறிவியல் உண்மையே.

நீங்கள் பிரும்மம் என்பதை molecule
என்கிறீர்கள். அதாவது பிரும்மம் என்பதை 
பொருள் என்கிறீர்கள். மனித குல 
வரலாறு கண்டும் கேட்டும் இராத 
தலைகீழான புரிதல் இது. பிறழ்புரிதலின்
உச்சம் இது.

ஆதிசங்கரின் காதில் இது விழுந்தால் 
அவர் உயிரோடு மீண்டு வந்து உங்களைக் 
கண்டனம் செய்வார். ஏனெனில் பொருளே 
இல்லை என்றும் பொருள் என்பதே ஒரு 
கருத்துத்தான் என்றும் கூறியவர் 
ஆதி சங்கரர்.

பொருள் என்று எதுவும் கிடையாது. எல்லாம் 
கருத்தே என்பதுதான் அத்வைதம். இதை 
தத்துவத்தில் அகநிலைக் 
கருத்துமுதல்வாதம் (subjective idealism)
என்கிறார்கள்.  

உலகமோ இந்தப் பிரபஞ்சமோ 
பைனரியாக இருக்கிறது. அதற்கு மேலும் 
பன்மைத்துவத்துடன் (pluralism) இருக்கிறது.
ஆனால் மொத்த உலகமும் மொத்தப் 
பிரபஞ்சமும் ஏகத்துவமானது (monoism)
என்னும் பிறழ்புரிதலை முன்வைத்தார் 
ஆதிசங்கரர்.  

பொருள் என்றும் கருத்து என்றும் இந்தப் 
பிரபஞ்சம் குறைந்தபட்சம் இரண்டாக 
இருக்கிறது. அப்படி இந்த உலகம் 
இரண்டாக இல்லை என்றும் பொருளே 
கருத்துத்தான் என்றும் ஆதிசங்கர 
கூறினார். அனைத்துமே கருத்து மட்டும்தான் 
என்றும் கருத்தே பிரும்மம் என்றும் 
கூறினார் ஆதிசங்கரர்.

பிரத்தியட்ச தரிசனமாகவே எவர் ஒருவருக்கும் 
ஆதிசங்கர கூறும் இரண்டற்ற நிலை என்பது 
முழுவதும் தவறானது என்று தெரியும்.

அத்வைதம்: ஒரு மார்க்சிய பார்வை என்ற 
எனது நூலில் இதையெல்லாம் நிரூபித்து 
இருக்கிறேன்.

முக்கிய வேண்டுகோள்!
------------------------------------
1) பொருள்முதல்வாதம் என்றால் என்ன?
2) கருத்துமுதல்வாதம் என்றால் என்ன?
3) இயங்கியல் (dialectics) என்றால் என்ன?
4) உண்மையை அறியும் முறைகள் 
எவை எவை?
5) பெர்க்லி பாதிரியாரின் அகநிலைக் 
கருத்துமுதல்வாதம் என்ன கூறுகிறது?
6) ஆதிசங்கரருக்கும் பெர்க்லி பாதிரியாருக்கும்
ஏன் இமானுவேல் கான்டுக்குமே அயன் ராண்டு 
எப்படி சூடு கொடுக்கிறார்?
7) இமானுவேல் கான்ட்டின் கருத்துமுதல்வாதம் 
என்ன கூறுகிறது?
8) இவற்றோடு maths, physics
ஆகிய பாடங்களில் குறிப்பிடத்தக்க புலமை 
பெற்றவர்களோடு மட்டுமே அத்வைதம் 
குறித்து உரையாட இயலும்.

அத்வைதம் குறித்த எனது பதிவுகள் science 
மற்றும் academic பதிவுகள் ஆகும். அவை 
அரசியல் பதிவுகள் அல்ல.
அத்வைத ஆதரவு அல்லது எதிர்ப்பை 
பாஜக ஆதரவு அல்லது பாஜக எதிர்ப்பு என்று 
கட்டமைப்பது முழுமூடத்தனம் ஆகும்.
இதுவரை என்னுடைய முகநூல் பதிவுகளில் 
வந்து உரையாடிய விமர்சித்த நண்பர்களில் 
90 சதவீதம் பேர் இதை அரசியல் விஷயமாகக் 
கருதி polemicsல் ஈடுபட்டனர். இது அருவருக்கத் 
தக்கது.

மேலும் மிகுந்த மாணவருத்ததோடு 
சொல்கிறேன்: இந்த உரையாடல் மற்றும் 
விமர்சனத்தில் பங்கேற்ற பலரும் 
mediocre மற்றும் sub mediocre ஆட்கள். 
அவர்களிடம் அறிவுடைமை என்பது 
ஒரு trace லெவலுக்குக் கூட இருக்காது.

இழிவான possessiveness!
--------------------------------------
அத்வைதம் என்பது பாஜவுக்குச் சொந்தம்!
It belongs to BJP. அருவருத்து ஒதுக்கத் தக்க 
மூடத்தனமான POSSESSIVENESS இது.

வீர சாவர்க்கர் பற்றி ஏதாவது தெரியுமா?
------------------------------------------------------------
       
  
             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக