புதன், 5 அக்டோபர், 2022

 பகுதி-2 ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை 5G.
--------------------------------------------------------------------------
BSNL நலிவுற்று இருந்த காரணத்தால் தனியார் 
நிறுவனங்கள் தற்காலிகமாக BSNLஐ முந்திச் 
சென்றன. ஆனால் யானை படுத்தாலும் குதிரை 
மட்டம் என்பது போல, நலிவுற்று இருந்த போதிலும் 
BSNL நிறுவனம் நலிவில் இருந்து சுலபமாக மீண்டு 
கொண்டு இருக்கிறது.

மற்ற எந்தத் தனியார் நிறுவனத்தை விடவும் பல 
மடங்கு அதிகமான சொத்துக்களை BSNL 
கொண்டிருக்கிறது. இரண்டு விதமான சொத்துக்களை 
BSNL கொண்டிருக்கிறது.     
அ) சம்பிரதாயமான சொத்து (கட்டிடம், மனை)
ஆ) தொழில்நுட்பச் சொத்து (TECHNICAL ASSET)
டெலிகாம் டவர்கள், BTS எனப்படும் Base stations for 
transmission and reception போன்றவை.

BSNL நிறுவனம் 6.8 லட்சம் கிலோமீட்டர் நீளமுள்ள 
OFC (Optical Fibre Cable) கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது.
2016ல் ரிலையன்ஸ் ஜியோ தொழிலில் நுழையும்போது 
அது வெறும் 2.7 லட்சம் கிமீ நீளமுள்ள OFCயை 
மட்டுமே கொண்டிருந்தது. அதே காலக்கட்டத்தில் 
ஐடியா செல்யூலர் நிறுவனம் வெறும் 1 லட்சம் கிமீ 
நீளமுள்ள OFCயை மட்டுமே கொண்டிருந்தது.

எனவே OFC கட்டுமானத்தைப் பொறுத்தமட்டில் 
BSNL நிறுவனம்தான் முதல் இடத்தில் உள்ளது.
மற்றவை வெகு தொலைவில் பின்தங்கி நிற்கின்றன.

தற்போது ஜூலை 2022ல் மத்திய காபினெட் முடிவுப்படி 
BBNL எனப்படும் பாரத் பிராட்பேண்ட் நிறுவனத்தை 
BSNL நிறுவனத்துடன் மோடி அரசு இணைத்து 
விட்டது. இந்தியாவின் கிராமப் புறங்களில் 5.8 லட்சம் 
கிலோமீட்டர் நீளத்துக்கு பாரத் பிராட்பேண்ட்
நிறுவனம் OFC  கட்டுமானத்தைக் கொண்டுள்ளது.
இந்த 5.8 லட்சம் கிமீ OFC தற்போது BSNLன் 
கணக்கில் வந்து விட்டது.

ஆக, BSNL OFC = 6.8 லட்சம் கிமீ 
BBNL OFC = 5.8 லட்சம் கிமீ 
மொத்தம் = 12.6 லட்சம் கிமீ நீளமுள்ள OFC தற்போது 
BSNL வசம் உள்ளது. எல்லாத் தனியார் நிறுவனங்களும் 
சேர்ந்தாலும் BSNLன் இந்த 12.6 லட்சம் கிமீ நீளமுள்ள 
OFC கட்டுமானத்தின் நிழலைக் கூட நெருங்க முடியாது.
எனவே யார் சக்திமான்? BSNLதான் சக்திமான்! 

அடுத்து டவர்கள். 
---------------------------
நாடு முழுவதும் BSNL 68,000 டவர்களை 
வைத்திருக்கிறது. MTNL 1360 தவர்களை வைத்திருக்கிறது.
மொத்தத்தில் இரண்டும் சேர்ந்து 69,360 டவர்களை 
வைத்திருக்கின்றன.

இவற்றில் Asset Monetisation திட்டத்தின்கீழ் BSNL 
நிறுவனமானது 10,000 டவர்களை விற்று ரூ 4000 கோடி 
வருவாய் ஈட்டத் தீர்மானித்து உள்ளது. மேலும் தொடர்ந்து 
2025ஆம் ஆண்டிற்குள் மொத்தம் 13,567 டவர்களை 
விற்க BSNL முடிவு செய்துள்ளது. 

அதே நேரத்தில் நாடு முழுவதும் 4ஜி சேவைக்காக 
புதிதாக 6000 டவர்களை நிறுவுவதற்கு BSNL தீர்மானித்து 
உள்ளது. உடனடியாக 6000 டவர்களும் அடுத்து 
இன்னொரு 6000 டவர்களும் நிறுவப்படும். இவ்வாறு 
தேவையான டவர்களை நிறுவி, BSNLன் மொத்த 
டவர்களின் எண்ணிக்கையை  1.12 லட்சம் டவர்களாக 
உயர்த்துவதற்கு BSNL தீர்மானித்துள்ளது.

தற்போது BSNLவசம் உள்ள டவர்கள் = 68,000
விற்கப்படும் டவர்கள் = 10,000
விற்ற பிறகு டவர்கள் = 58,000
நிறுவப்படும் புதிய டவர்கள் = 54,000 
மொத்த டவர்கள் = 1,12,000.

BSNLக்கு அவ்வளவாகப் பயன் தராத டவர்களை
விற்று விட்டு, OPTIMUM பயன் தரும் புதிய டவர்கள் 
54,000ஐ BSNL நிறுவுகிறது. இறுதியில் BSNLவசம் 
ஒரு லட்சத்து பன்னிரண்டாயிரம் டவர்கள் 
இருக்கின்றன. எந்த ஒரு தனியார் நிறுவனத்திடமும் 
இந்த எண்ணிக்கையில் கால்வாசி அளவுக்கு கூட 
டவர்கள் கிடையாது.

BSNLன் டவர்களைத்தான் தனியார் நிறுவனங்கள் 
பயன்படுத்துகின்றன. BSNLன் தீவிரமான 
வாடிக்கையாளர் யார் தெரியுமா? ரிலையன்ஸ் 
ஜியோதான். BSNL நிர்ணயிக்கும் வாடகையை,
கட்டணத்தைச் செலுத்தி தனியார் நிறுவனங்கள் 
BSNLன் டவர்களைப் பயன்படுத்தி ஜீவிதம் 
நடத்துகின்றன.      

எனவே சம்பிரதாய சொத்துக்களும் நவீன தொழில்நுட்பச் 
சொத்துக்களும் BSNLவசம் மட்டுமே உள்ளன.
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன், டாட்டா   
போன்ற தனியார் நிறுவனங்கள் BSNLஐச் சார்ந்தே 
தங்கள் ஜீவிதத்தை நடத்துகின்றன. எனவே யார் 
பெரியவன்? சந்தேகமே வேண்டாம், BSNLதான் பெரியவன்.

BSNLன் 5ஜி சேவை எப்போது?
------------------------------------------
அமைச்சர் அதீத உற்சாகத்துடன் சொல்கிறார்;
அடுத்த ஆண்டு ஆகஸ்டு 15க்குள் BSNL 5ஜி சேவையை 
மெட்ரோ நகரங்களில் கொடுக்கும் என்கிறார். 
இதுவே மிக்க  கடினம். Feasibility is very poor.   

தனியார் நிறுவனங்களால் இன்னும் நாலைந்து 
ஆண்டுகள் ஆனாலும் கிராமப்புறங்களில் 
5ஜி சேவையை வழங்க முடியாது. கீழப்பாவூருக்கும் 
மேலப்பாவூருக்கும் ரிலையன்ஸ் ஜியோவால் 
2026ல் அல்லது 2027ல் கொடுக்க முடிந்தால் 
அது பெரிய அதிசயம்.

BSNLஐபி பொறுத்தமட்டில் அவர்களாலும் கிராமப் 
புறங்களில் தாமதமாகத்தான் கொடுக்க முடியும்.
2027ல் அவர்களால் தென்காசியில் கொடுக்க முடியும்.
இது என்னுடைய OPTIMISM. உண்மையில் யார் யார் 
எப்போது கிராமபி புறங்களில் 5ஜி சேவை கொடுப்பார்கள் 
என்று PREDICT செய்வது கடினம்.

பாரத் பிராட்பேண்ட் நிறுவனம் BSNLஉடன் இணைந்தது!
---------------------------------------------------------------------------------------
BBNL எனப்படும் Bharat Broadband Network Limited என்னும் 
நிறுவனம் மோடி அரசால் உருவாக்கப் பட்டது.
கிராமப் புறங்களில் யாரும் broadband connectivity கொடுக்க 
முன்வரவில்லை. எந்தத் தனியார் நிறுவனமும்
முன்வரவில்லை. BSNL நலிவுற்று இருந்ததால் 
அவர்களாலும் கொடுக்க முடியவில்லை. எனவே 
டிஜிட்டல் இந்தியாவின் வலியுறுத்தும் தேவைகளை 
மனதில் கொண்டு மோடி அரசு BBNL என்னும் 
நிறுவனத்தை உருவாக்கியது. இந்த நிறுவனம் 
முந்திய பத்திகளில் கூறியபடி, இதுவரை  
சற்றேறக்குறைய 6 லட்சம் கிமீ நீளத்துக்கு OFC 
கட்டுமானத்தை உருவாக்கி உள்ளது. இந்தியாவில் 
இரண்டரை லட்சம் கிராமபி பஞ்சாயத்துக்கள் 
உள்ளன. இந்த 2.5 லட்சத்தில் BBNL நிறுவனம் 
1.5 லட்சம் கிராமபி பஞ்சாயத்துகளில் 
BROADBAND CONNECTIVITY கொடுக்க ஏதுவாக 
OFCஐ நிறுவி உள்ளது.

தற்போது BBNL நிறுவனம் BSNLஉடன் இணைந்து 
விட்டது இந்த ஆண்டு ஜூலையில் (2022 ஜூலை)
மத்திய காபினெட் இந்த முடிவை எடுத்தது.
BBNL-BSNL MERGER என்பது மத்திய காபினெட்டின் முடிவு.

இந்த  இணைப்பு மூலமாக BSNLக்கு யானை பலம் 
வந்து விட்டது. வெறும் SERVICE PROVIDERஆக 
மட்டும் இருந்த BSNL  இந்த இணைப்பின் மூலம் 
Custodian of Natural resources என்ற அந்தஸ்தையும் 
அடைந்துள்ளது.

முடிவுரை
--------------
இதுகாறும் கூறியவற்றால் BSNL நிறுவனமானது 
தொடர்ந்து பலம் பெற்று வருகிறது என்பதும் 
அது விரைவில் விஸ்வரூபம் எடுக்கும் என்பதும்    
எதிரிகளை வதம் செய்யும் என்பதும் புலனாகும்.
****************************************                    
     

  

 

               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக